கவச குண்டலங்கள்
இழந்து மண்டலத்தில்
குழந்தை போலே நானுறங்க
அதில் படரும்
கொடி போல்
எனது தலைவா
காட்டு உன்றன் கைவரிசை !
உயிரில் பிரியமில்லை
என்னுடலில் எதுவுமில்லை
உணர்வில் மட்டும் நீ கலக்க
நல்ல தருணம் இதுவே
சரணம் எனதே
காட்டு உன்றன் கைவரிசை!
மெழுகில் திரியைப் போல
என் உயிரில் கலந்த உன்னை
ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
வரும் இருளைத் தகர்த்தி
அமுதம் பொழியக்
காட்டு உன்றன் கைவரிசை!
மலரில் மணமும் உண்டு
உன் மனதில் இடமும் உண்டு
என் நினைவை மட்டும்
ஏன் மறந்தாய்?
இரு கரங்கள் தொடுத்து
வரங்கள் கொடுத்தவனே
காட்டு உன்றன் கைவரிசை
(கவச குண்டலங்கள்)
அருமை... பாட்டு வரிகளில் உங்கள் கைவரிசை மிளிர்கிறது....
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே !..........
ReplyDeleteபடித்தும் பாடியும் ரசித்தேன்
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் .
Deletetha.ma 2
ReplyDeleteநல்ல கவிதை...
ReplyDeleteபாராட்டுகள் சகோ.
மிக்க நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் !
Deleteவணக்கம் உறவே
ReplyDeleteமீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...
http://www.thiratti.meenakam.com/
மிக்க நன்றி சகோதரா .
Deleteஅழகிய கவிதை. அருமை. வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteகவசகுண்டலமாய் உன்
நல்மனமும் உண்மையுங்கண்டு
விரைந்துனை மணங்கொள்ள
வருவான் புரவியிலொருவன்...:)
மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
Deleteபெண் மன ஏக்கத்தை எடுத்தியம்பும் அழகான பாடல் வரிகள். மெட்டோடு ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் அம்பாளடியாள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தோழி தங்கள் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் !
Deleteமெழுகில் திரியைப் போல
ReplyDeleteஎன் உயிரில் கலந்த உன்னை
ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
வரும் இருளைத் தகர்த்தி
அமுதம் பொழியக்
காட்டு உன்றன் கைவரிசை//
அருமையான வரிகள்.
கவிதை மிக நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteஅழகிய கவிதை
ReplyDeleteவணக்கம் !
Deleteமிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/
ReplyDeleteமிக்க நன்றி தகவலுக்கு !
Deleteபாடிப்பார்த்தே எழுதுவீர்களா...?
ReplyDeleteஅழகான மெட்டுக் கவிதை.
வாழ்த்துக்கள் தோழி.
உண்மைதான் தோழி இது கவிதை அல்ல பாடல் .
Deleteமிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் ¨.....
ReplyDeleteவணக்கம்!
காதல் கவியில் கமழும் கவிஞன்யான்
மோதல் இலாமல் மொழிகின்றேன்! - மாதவமே!
நெஞ்சம் நெகிழ்ந்துருகும் உன்நேய சொல்யாவும்
விஞ்சும் இனிமை விளைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு