குப்பைக்குள்தான் கிடக்கிறது
குண்டு மணிகள் இவைகளைக்
கோத்தெடுத்து வைப்பதாரு
கோபுரத்திலே !
அப்பப்பா பொழுதெல்லாம் ஆனந்தத்திலே
அவரவர்க்கு வேண்டியது கிடைத்தனாலே
தப்பாத்தான் போகிறது அரசியலும் இங்கே
தவிக்கின்ற மக்களுக்கு நீதி சொல்வதாரு!
ஒப்பற்ற விலை உயர்வு ஏழை மக்களை
ஒடுக்கித்தான் வைக்கிறது எந்நாளும் இங்கே
கற்கின்ற கல்விக்கேனும் காமராசர் போல்
கை கொடுக்கும் தெய்வம் இங்கு யாரும் இல்லையா!..
பிற்போக்கு வாதிகளாய் நாமிருப்பதால்
பின்தங்கிப் போகாதோ நன் நாட்டின் வளம்!
நற் போக்கு நமக்குள்ளே வேண்டும் என்றால்
நல்லவர்களே அரசியலில் இருந்தாக வேண்டும்
கற்போரை ஊக்குவிக்கக் கை கொடுத்தாலே
காலத்தின் கட்டளைகள் மாறும் தன்னாலே
நற் போரிதை நாம் தொடக்கி முடிக்கும் போதிலே
நன்மையின்றி வேறில்லை என்றுணர்வாயே!
தன் மான உணர்வு உள்ளது ஏழைகளிடத்திலே
தயங்காமல் அவர்கள் பெயரை முன் மொழியுங்கள்
எம் மானம் காப்பதற்கு உரிய தலைமைக்கு
எவன் மனிதன் என்றுணர்ந்து வாக்களியுங்கள்!
குப்பைக்குள் தான் கிடக்கிறது பல
ReplyDeleteகுண்டு மணிகள் இவைகளைக்
கோத்தெடுத்து வைப்பதாரு
கோபுரத்திலே !!..................
எப்பொழுது அந்நாள் வரும்,.... நல்ல கவிதை
மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteகற்போரை ஊக்குவிக்கக் கை கொடுத்தாலே
ReplyDeleteகாலத்தின் கட்டளைகள் மாறும் தன்னாலே
நற் போரிதை நாம் தொடக்கி முடிக்கும் போதிலே
நன்மையின்றி வேறில்லை என்றுணர்வாயே!.....
பிடித்தவரிகள் மேலே. கவிதை நன்று. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteதெளிவா தேர்ந்தெடுப்போம்..!
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteவாழ்க எவன் பினிதன் என்றுணர்ந்து வாக்களியுங்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் !
ReplyDeleteவாழ்க எவன்" பினிதன் "என்றுணர்ந்து வாக்களியுங்கள் // மனிதன் என்றே
எழுதியுள்ளார் கவனிக்கத் தவறியதால் கூகிள் மாஸ்ரர் தவறு இளைத்து விட்டார் பாருங்கள் :)
நமது முக்கிய பொறுப்பும் கூட...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteகாமராஜர் ஆட்சி மீண்டும் வருமா என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்: வரவே வராது!! பகற்கனவுகள் பலிப்பதுண்டா? காமராஜரே இன்று மீண்டும் பிறந்தாலும், கைவசம் தொலைக்காட்சியும் பத்திரிகையும் சினிமா தயாரிப்பு நிறுவனமும் சில பொறியியற்கல்லூரிகளும் இல்லாமல் அவரால் என்ன செய்யமுடியும்? எனவே அவரை மறந்துவிடுங்கள். நீங்கள் நினைக்க வேண்டியதெல்லாம் வள்ளுவரைத் தான்! அவர் தானே சொன்னார்- “செய்க பொருளை, செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனிற்கூரியது இல்” என்று? (குறள் 759). பொருள் தான் இன்று தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. வள்ளுவரைப் பாடு மனமே!
ReplyDeleteவணக்கம்
Deleteஉங்கள் மனதின் வேதனை புரிகிறது ! யாரைப் பாடி என்ன பயன்
மக்கள் தான் இனியேனும் விழிப்புடனே செயற்பட வேண்டும் .
தூண்டிலில் மாட்டும் மீன்களைப் போல் தப்பான அரசியல் வாதிகளின்
பேச்சை நம்பி ஓட்டுப் போடாமல் நல்லவர்களைத் தேர்வு செய்ய
வேண்டும்" சுயநலத்தை "மறந்து .மிக்க நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
இந்தமுறை மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்றே நினைக்க தோன்றி மனம் உவகை கொள்கிறது.
ReplyDeleteஇருந்தாக வேண்டும் சகோதரரே .இல்லையேல் இதுவரைப் பட்ட
Deleteதுன்பங்களை விடவும் இன்னும் இன்னும் துன்பப்பட நேரிடும் .......
உங்களக்கு நிறைய ஆசைகள் -உண்மையில் அது நடக்க முடிகிற காரியமா என்ன
ReplyDeleteநீந்தத் தெரியாதவனுக்கு ஒரு முழம் தண்ணீரைக் காணும் போது
ReplyDeleteஏற்ப்படாத அச்சம் கடல் நீரே திரண்டு வரும் போது வரும் .மக்கள்
சக்தியும் ஆப்டித்தான் அதை முறைப்படி கையாண்டால் இந்தக்
கனவும் நினைவாகும் என நம்புவோம் ! தேருதல் காலத்தில்
தவளைகள் போல் இருந்து விட்டு பின்னாடி சுயநலப் போர்வைக்குள்
நின்று கத்தினால் நன்மை எங்கேதான் விளையும் ?..........!! மிக்க
நன்றி தங்கள் வருகைக்கும் நற் கருத்திற்கும் .
அருமை! புதியவர்களை நல்லவர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமையும் கூட! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .
ReplyDelete