3/19/2013

கருணைக் கடலே கண் திறவாயோ...

அசல்  இங்கே
நகல்  அங்கே
நகலை  நம்பும் மக்களுக்கு
அசலை  நம்ப வைப்பதாரு!....

பகலென்ன இரவும் என்ன
படுத்துறங்கும் வேளையிலும்
இறைவா உன் காலடிதான்
எனக்குள்ளே தெரிகிறது !.....

இது நீதி என்றுரைக்க
எழுந்தருள நீ மறந்தால்
உ(ன்)னை நம்பும் பக்தர்க்கு
உயிர் மூச்சு நின்றுவிடும்

பரிகாரம் ஏதும் இல்லை
பரந்தாமா உன் அருளே எல்லை
விழி நீரை நெய்யாக்கி
விடை தேடி அலைகின்றோம்...

விதி வரைந்த கைகளினால்
விடை எழுதிச் சென்று விடு
மதி மயங்கி நிற்போர்க்கும் 
மன அமைதி தந்து விடு

ஓர் உயிரை ஈருடலில்
ஒருங்கிணைக்க முடியாது
நீ எழுதும் தீர்ப்பினில் தான் இனி
நீதி என்றும் நிலைத்திருக்கும் !...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

 1. அருமை...

  அனைவரும் நலம் பெறட்டும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .

   Delete
 2. நல்ல கவிதை.

  கவிதாயினி உங்களுக்கு எனது பக்கத்தில் ஒரு அழைப்பு காத்திருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி தங்கள் அழைப்பிற்கு இணங்கி இதோ
   இன்றே என் ஆக்கத்தை வெளியிடுகின்றேன் .நன்றி
   சகோதரரே !

   Delete
 3. ஆன்மீகத்தின் அடிபோற்றி அன்பைபகிரும் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் இனிய நற்
   கருத்திற்கும் !

   Delete
 4. விழி நீரை நெய்யாக்கி
  விடை தேடி அலைகின்றோம்..//

  மனம் தொட்ட வரிகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் இனிய நற்
   கருத்திற்கும் !

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........