பூங்காற்றே பூங்காற்றே
இந்தப் பூவை இனியும் தீண்டாதே
ஏங்காத ஏக்கம் இல்லை
என் வாழ்வில் தூக்கம் இல்லை
ஊமத்தம் பூவின் சொந்தம்
உள்ளூரத் தந்த துன்பம்
நீ வந்து தீண்டும் போதும்
என் நெஞ்சைக் கொல்லும் கொல்லும்
ஆராரோ ஆரிரரோ
நான் பாடக் காத்திருந்தேன்
யார் யாரோ சொந்தம் என்று
என் வாழ்வைக் கொன்றதாரு!
வானத்தைப் பூமி தொடுமா?
வடக்கைத்தான் தெற்கும் தொடுமா?
காலத்தின் கேள்வி இதற்க்கு
கண்ணீரே பதிலானதே ..
மானத்தில் சிறந்த மங்கை
இவள் மனதுக்குள் ஓடும் கங்கை
இனிச் சேராத இடத்தைச் சேர்ந்து
செறாகிப் போனால் தகுமா!
வாழத்தான் வாழ்க்கை என்றாய்
வடிவாகப் பேசிச் சென்றாய்
நான் உந்தன் சொந்தம் என்று
சொன்ன நாவும்தான் போனதெங்கே!
( பூங்காற்றே பூங்காற்றே)
சிறப்பான வார்த்தைகளில் காதல் பாடல்! அருமை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் இனிய கருத்திற்கும் !
Delete/// மானத்தில் சிறந்த மங்கை
ReplyDeleteஇவள் மனதுக்குள் ஓடும் கங்கை ///
நல்ல பாடல்...
மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டிற்கும் !
Deleteதொட்டுத் தொடரும்
ReplyDeleteபட்டுக்காலம்
வருமென்று காத்திருப்போம்
சகோதரி...
மிக்க நன்றி சகோதரரே உங்கள் எண்ணக் கருத்தினை வரவேற்கின்றேன் !
Delete
ReplyDeleteவணக்கம்
தமிழ்மணம் 3
ReplyDeleteவணக்கம்!
வண்ணப் படத்துடன் வார்த்த கவியடியை
எண்ணம் இனிக்க இசைத்திட்டேன் - திண்ணமுடன்
அம்பாள் அடியாள் அளித்த அருந்தமிழ்
செம்பால் இனிமையெனச் செப்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்ஃ கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் ஐயா !
Deleteதமிழுக்கு அழகு சேர்க்கும் உங்கள் உள்ளம்
மனமுவந்து பாராட்டும் போதே என் கவிதைக்கும்
பாடல்களுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டாகிறது !
மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும் இனிய நற்
கருத்திற்கும் .