கொன்று குவித்த
பிண வாடை நடிவினிலும்
நின்று சிரிக்குது தனக்கான
சமரசத்தை ஏந்திய வண்ணம் அநீதி!
பச்சைக் கம்பளம் விரித்தது போல்
இயற்க்கை எட்டுத் திக்கிலும்
கொட்டி வைத்த பசுமை இன்றும்
தமிழனின் இரத்த வெள்ளத்தில் மிதக்கிறதே!
கண்கள் இருந்துமா இக்
காட்சிகள் புரியவில்லை!
சுதந்திரப் பறவைகளும் இங்குதான்
சுயமாகப் பறக்கவில்லை!
கை கட்டி வாய் பொத்தி
உயிர்ப் பிச்சை போதும் என்று சில
உணர்வுகளைக் கொன்ற தமிழனிடம் அல்லவா
வாய்ப்பாடும் கையளிக்கப் படுகிறது!
சமரசப் பேச்சு என்பதே சிறு துளியும்
சமரசம் அற்று இருக்கையில்
நீதிக்கு இங்கு என்ன வேலை
நீர் மேல் எழுத்துப் போல்!
கருவறை கிழித்த கைகளாலும் தமிழனை
அழித்து ஒழித்த விழிகளாலும் இன்னும்
அடங்கி ஒடுங்கிப் போவதற்க்காகவா எம்
ஆருயிர்கள் மண்ணினில் புதைந்தார்கள்!
சொகுசு வாகனக் காரர்கள் சும்மா
சுத்தித் திரிந்து பார்த்த காட்சிகள்
உண்மை இல்லை என்று தெரிந்த பின்னும்
நீதியைக் காக்க இன்னும் என்ன தடை!......
விரைவில் நல்வாழ்வு மலரட்டும்...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteநல்ல கவி படைத்தீர்கள்! அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலிக்குதம்மா உன்வரிகள்
விழிக்குதம்மா நீர்சொரிந்து
இருக்குதம்மா உணர்வின்னும்
கிடைக்குமம்மா தமிழீழம் தமிழருக்கே...
மிக்க நன்றி தோழி வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteவிரைவில் நீதி கிடைத்திட வேண்டும்! அருமையான ஆக்ரோஷ கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வரவுக்கும் பாராட்டிற்கும் .
Deleteசில வரிகள் படிப்பதர்க்குள் துக்கம் கண்ணை மறைத்தது
ReplyDeleteமிக்க நன்றி தோழி வரவுக்கும் கருத்திற்கும் .
Deleteஉணர்வுகளைக் கொன்ற தமிழனிடம் அல்லவா
ReplyDeleteவாய்ப்பாடும் கையளிக்கப் படுகிறது ¨.......
காட்டிகொடுக்கும் கல்நெஞ்ச களவாணிப் பயல்களின் கேடுகெட்ட வேலை என்ன செய்ய
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் !
Deleteவலி வலி வலி மாறாமலே இருக்கட்டும்.அப்போதுதான் இன்னும் வீரம் கொள்வோம் !
ReplyDelete