6/01/2014

ஆணவம் மிகுதலும் அழிவுக்கோர் அடையாளம் தான்

முட்டி மோதி அலை கிழித்து
மூர்க்கமாய்ப்  பறக்கும்  பறவை எமை
எட்டிப் பிடித்து வெற்றி கொள்ளவே
ஏங்கித் தவிப்பீரோ குள்ள நரிகளே !!

நரிகளின்  வேஷம் நிலைக்காது
நாளும் நினைப்பது நடக்காது இவை
புரியும் காலம் வரும் போது
பூப்போல் எம் மனமும் இருக்காது !

அழிவைத் தேடி அநீதியை மூட்டு
ஆணவத் தேரினை எந்நாளுமே ஒட்டு
ஒழியும் காலம் வரும் போது
உணரத் துடிப்பீர் மூடர்களே !

ஏழைக் குடிசையை எரிப்பவர் தமக்கு
என்றோ ஒரு  நாள் அழிவு பிறக்கும்
நாளை என்பதே நிட்சயமற்ற
நரகலோக வாழ்வுதனிலே

உண்மை பேசி உயர்வு பெற்றவர்
உலகம் போற்ற வாழ்ந்திடுவர்
வெண்மையான மனத்தை வதைத்தவர்
விரயமாகி  போய் விடுவர்!!

நல்லோர் விடும் சாபம் ஒன்றையே
எந்நாளும் வாங்கும் அரக்கர்களே
பொல்லா வினையால் புழுவாய்த் துடிப்பீர்
பொறுமை இழந்து ஆடாதீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. "உண்மை பேசி உயர்வு பெற்றவர்
    உலகம் போற்ற வாழ்ந்திடுவர்
    வெண்மையான மனத்தை வதைத்தவர்
    விரையம்மாகிப் போய் விடுவர்!!" என்ற
    சிறந்த எடுத்துக்காட்டு வரிகளை
    நானும் விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. பொல்லா வினையால் புழுவாய்த் துடிப்பீர்
    பொறுமை இழந்து ஆடாதீர் ............
    >>>
    ஆடும் வரை ஆடட்டும் அக்கா. இவர்கள் ஆட்டம்தனை இறைவன் பார்த்துக்கிட்டுதான் இருப்பான். தக்க சமயத்தில் பதில் தருவான். அப்போது இவர்களால் தாங்க இயலாது.

    ReplyDelete
  3. நல்லோர் சாபம் சும்மா விடாது! விரைவில் பொல்லோர் அழிவர்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும் அம்மா..

    ReplyDelete
  5. வெண்மையான மனத்தை வதைத்தவர்
    விரையம்மாகிப் போய் விடுவர்!!
    இன்று எனக்கு ஏற்பட்ட அனுபவம் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது !
    த ம 4

    ReplyDelete
  6. ஆணவம் என்றும் நிலைக்காது சகோதரியாரே
    நன்மை பிறக்கும்
    தம5

    ReplyDelete
  7. நிஜம் தான்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நரிகளின் வேஷம் நிலைக்காது
    நாளும் நினைப்பது நடக்காது இவை
    புரியும் காலம் வரும் போது
    பூப்போல் எம் மனமும் இருக்காது

    வரிகள் அருமையிலும்.
    www.killergee.blogspot.com

    ReplyDelete

  9. வணக்கம்!

    தமிழ்மணம் 7

    நல்லோர் நலிதலும் தீயோர் உயா்தலும்
    பொல்லா உலகத்தின் போக்கு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. நரிகளின் வேஷம் நிலைக்காது
    நாளும் நினைப்பது நடக்காது இவை
    புரியும் காலம் வரும் போது
    பூப்போல் எம் மனமும் இருக்காது உண்மை தான்.
    ஆணவம் எப்போதும் அழிவுக்கே அடி கோலும்.சிறப்பான கவி வரிகள். நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  11. உண்மை பேசி உயர்வு பெற்றவர்
    உலகம் போற்ற வாழ்ந்திடுவர்
    வெண்மையான மனத்தை வதைத்தவர்
    விரையம்மாகிப் போய் விடுவர்!!

    வழக்கம் போல அருமையான ஒரு கவிதை! ஆணவம் என்றுமே அழிந்துதான் போகும்!

    ReplyDelete
  12. நல்ல கவிதை.

    ஒவ்வொரு வரியிலும் சாடல்.

    ReplyDelete
  13. வெண்மையான மனத்தை வதைத்தவர்
    விரையம்மாகிப் போய் விடுவர்!!
    நல்ல கவிதை..சகோதரி. தாங்கள் நிறைய பதிவு வெளியிட்டு இருக்கிறீர்கள். அறிமுகத்திற்கு நன்றி.ஓவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........