நீர்க்குமிழி போல மனம் உடைந்து போகுதே!
நெஞ்சுரத்தை இழந்து தினம் தஞ்சம் கோருதே!
போர்க்கொடியை உயர்த்துவதால் வந்த தொல்லையே
பொறுமை என்ற வாசகத்தை எவரும் அறியவில்லையே !
மனம் முழுக்க வக்கிரத்தைப் புதைத்து வைத்தாரே!
மாறு வேடம் போட்டு நாளும் சேட்டை செய்தாரே!
குணம் அறிந்தும் ஒதுங்கிடத்தான் வழியுமில்லையே!
கொள்கையிலும் இழிவான கொள்கையுடையோரே!
ஏழை என்று இளக்காரம் கொள்ளவும் வேண்டாம்!
எளியோரைப் பழி வாங்கித் திரியவும் வேண்டாம்!
நாளை இந்த உலகினிலே எதுவும் நடக்கலாம்
நலிந்தோரின் வாழ்வு சிறக்கப் புதையல் கிடைக்கலாம்!
அற்பருக்கு வந்த வாழ்வு அகத்தைக் கிழிக்கலாம்!
அடுத்தவரின் சாபம் வந்து முகத்தை மறைக்கலாம்!
சொற்ப காலம் வாழும் வாழ்வில் சொந்தம் எதுவடா
சோதனையும் வேதனையும் கொடுக்கும் மானிடா!
நட்பு ஒன்றே உலகினிலே உயர்ந்த செல்வமாம் அதை
நாடி நின்றோர் கோடி நன்மை பெற்று வாழ்கவே!
உட்புறத்தைத் தூய்மையாக்கி உலகம் உய்யவே
உண்மை பேசி நன்மை யாவும் பெற்று வாழ்கவே!
(படம் :கூகிளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)

நட்பு ஒன்றே உலகினிலே உயர்ந்த செல்வமாம்....
ReplyDeleteஅருமையாய்ச் சொன்னீர்கள் தோழி.
வாழ்த்துக்கள்.
பண்பே செல்வம் என விளக்கிப்போகும்
ReplyDeleteகவிதை அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
நல்ல சிந்தனையோட்டாம் மிக்க வரிகள் கவிதையை இறுதியில்முடித்த விதம் நன்று வாழத்துக்கள்.
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
/// சொற்ப காலம் வாழும் வாழ்வில்... ///
ReplyDeleteஉணர வேண்டிய வரிகள் பல...
வாழ்த்துக்கள் அம்மா...
தலைப்பே மிக அருமை சகோ.
ReplyDeleteமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள். அருமை. வாழ்த்துக்கள்
நிஜம் தான். அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைத்தும் நன்று!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 7
நல்லதோர் நட்பை நயமுடன் நாம்பெற்றே
எல்லையை வெல்வோம் இணைந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
எல்லாமே அனுபவ வார்த்தைகள்!
ReplyDelete// சொற்ப காலம் வாழும் வாழ்வில் சொந்தம் எதுவடா //
சொந்தம் எதுவும் இல்லையென்பது மெய்ஞானம்தான்.
த.ம.9
நட்புக்கு விளக்கம் சொல்லும் கவிதை அருமை வாழ்த்துக்கள் கவிதாயினி!
ReplyDelete///நட்பு ஒன்றே உலகினிலே உயர்ந்த செல்வமாம் அதை
ReplyDeleteநாடி நின்றோர் கோடி நன்மை பெற்று வாழ்கவே .....///
அருமை சகோதரியாரே அருமை
நன்று சொன்னீர்
நன்றி
//உட்புறத்தைத் தூய்மையாக்கி....//
ReplyDeleteஉட்புறத்தைத் தூய்மையாக்கினால் அனைத்துக் குறைகளும் அழிந்தொழியும். கருத்தாழம் மிக்க கவிதை.
பாராட்டுகள் அம்பாளடியாள்.
//உட்புறத்தைத் தூய்மையாக்கி....//
ReplyDeleteஉட்புறத்தைத் தூய்மையாக்கினால் அனைத்துக் குறைகளும் அழிந்தொழியும். கருத்தாழம் மிக்க கவிதை.
பாராட்டுகள் அம்பாளடியாள்.
ReplyDelete"உட்புறத்தைத் தூய்மையாக்கி உலகம் உய்யவே
உண்மை பேசி நன்மை யாவும் பெற்று வாழ்கவே" என்ற
வழிகாட்டலை விரும்புகிறேன்.
சிறந்த பகிர்வு!
visit: http://ypvn.0hna.com/
அருமையான கவிதை. நட்பைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் அருமையாக சொன்னீர்கள்.
ReplyDeleteநமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com
அருமையான கவிதை......
ReplyDeleteத.ம. +1