6/05/2014

வண்ண வண்ணக் கனவுகளால் என் எண்ணம் நீளுதே


வண்ண வண்ணக் கனவுகளால்
என் எண்ணம் நீளுதே!- அதில்
வந்து வந்து உன் நினைவு என்னை வாட்டுதே!
அன்னமென நடை நடந்து போகும் பைங்கிளி
ஆசை ஆசை என்றும் உன்மேல் தானடி

மொட்டு விட்ட மலரே நீ
மோக வலை வீசாதே
கட்டி வைத்த கரும்பே என்னைக்
கட்டெறும்பு ஆக்காதே !

புத்தனுக்கும் ஆசை வரும்
போதி மரம் தூசாய் மாறும்
கட்டழகு ரதியே எனைக்
கட்டிக் கொள்ள வா தனியே

முத்த மழை பொழியத்தான் காத்திருக்கிறேன்
மூன்று கால வேளையிலும் எதிர் பார்த்திருக்கிறேன்
உத்தரவு தந்தாலே போதுமடி பெண்ணே
மன ஊஞ்சலிலே உன்னை வைத்து
ஆடுமடி கண்ணே!

(பெண் )

ஆசை ஆசை ஆசை ஆசையைப் பாரு
ஆதரவாய் சாயும் முன்பே மீசையைப் பாரு
காதல் வலை வீசியது நானா நீயா?
களத்து மேட்டில் சண்டை வேண்டாம் போ போ மாமா ...

தாலி வரம் ஒண்ணு தந்தா போதாதா?
தங்கமென கொஞ்சும் நிலை மாறாதா?
ஆடவனின் ஆசையெல்லாம் எத்தனை காலம்?
அந்தி சாயும் நேரமாச்சு போ போ மாமா...

(ஆண் )

மன இருப்பைச் சொல்லி விட்டேன்
மானே மானே
நான் மறுபடியும்  வருவேனே
தேனே தேனே ....

தவமிருந்து உன் நினைப்பை
நான் மாற்றுவேன்
தங்கமென வெள்ளியெனத்தான் கொஞ்சுவேன்
அறுவடைக்கு நேரமாச்சு
போ போ பெண்ணே
ஆசை தீர உனை அணைக்க
வருவேன் கண்ணே ...

என்னாசை என்னோடு தீராதடி
எவர் வந்து தடுத்தாலும் மாறாதடி
உன்னோடு நான் சேரும் காலம் வரும்
ஓடோடிப் போ போ போ என் பைங்கிளி .....

                                            ( வண்ண வண்ணக் கனவுகளால்..)                                                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

18 comments:

  1. நல்ல மெட்டு. சீக்கிரம் இசையை சேர்த்து, பாடி பதிவா போட்டுடுங்க அக்கா.

    ReplyDelete
  2. காற்றோட்டமாக வயற்காட்டில் கேட்பது போல இருக்கின்றது..
    ஆனந்தக் கும்மி வெகு விரைவில் கெட்டி மேளமாக மாறட்டும்.

    ReplyDelete

  3. வணக்கம்!

    வண்ணக் கனவுகள் வடித்த கவிபடித்தே
    எண்ணம் மயங்கும் இளைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. அருமையான பாடல்... ஆமாம் நீங்க சினிமாவிற்கு பாடல் எழுத முயற்சிக்கலாமே?

    ReplyDelete
  5. //ஆடவனின் ஆசையெல்லாம் எத்தனை காலம் ?...//

    சுடுகாடுபோகும் வரை அவன் ஆசைகள் தீராது

    ReplyDelete
  6. புத்தனுக்கும் ஆசை வரும்
    போதி மரம் தூசாய் மாறும்
    வித்தியாமாய் இருந்தது நன்றி.
    Killergee
    www.Killergee.blogspot.com

    ReplyDelete
  7. கிராமிய ம்ணம் கமழுதே இக்கவிதையில்......

    பாராட்டுகள்.

    ReplyDelete
  8. //கட்டி வைத்த கரும்பே என்னைக்
    கட்டெறும்பு ஆக்காதே...//

    //ஆதரவாய்ச் சாயுமுன்னே மீசையைப் பாரு [மீசைக்கு ரொம்பத்தான் பெருமிதமோ?!]//

    இவை மனதைக் கட்டிப்போடும் வரிகள்.

    மன்மதக் கவிதை!!

    பாராட்டுகள்.

    ReplyDelete
  9. மன இருப்பை அழகாக ரசிக்க வைக்கும் வகையில் சொல்லி விட்டீர்கள் அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. காதலின் வனப்பில்
    மயக்கும் வரிகள்
    மல்லிகை வாசத்தில்
    மனம் இளகச் செய்தது...

    ReplyDelete
  12. சிறந்த பாடல் பகிர்வு

    ReplyDelete
  13. வார்த்தைகள் மிகக் கச்சிதமாய்ப் பொருந்தி
    கவிதைக்கு மெருகேற்றிப் போகிறது
    பாடிக் களித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அழகான பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ///புத்தனுக்கும் ஆசை வரும்
    போதி மரம் தூசாய் மாறும்///
    ஆகா
    அருமை

    ReplyDelete
  16. அட.... இது நல்லா இருக்கே

    ReplyDelete
  17. ஆஹா இனிமையான காதல் பாடல்..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........