உடல் அசையும் ஓசை இங்கே
உணர்வுகளின் பாசை எங்கே!
மலர்களிலும் நீ தான் அழகடி என்
மனம் கவர்ந்து செல்லும் பைங்கிளி..
கடலலையில் மோகம் கொண்டேன் இங்கு
கரையென நான் நாளும் நின்றேன்
தொட விரும்பித் தொட்டுச் செல்லும் உனை நான்
தொந்தரவு செய்யேன் இனியும்
வர விரும்பி வருவாயோ புது
வசந்த காலம் தருவாயோ?
திருமண நாள் காத்திருக்குது இந்தத்
திங்களைத் தான் எதிர் பார்த்திருக்குது ...
பெண்
சொக்க வைக்கும் சுந்தரனே
சொன்ன சேய்தி அறிவேனே ...
அக்கம் பக்கம் பார்த்து இனியும்
அன்பை அள்ளித் தருவேனே ....
முத்து உடல் தொட்டணைக்க புது
மோகம் வந்ததா?
இந்தச் சித்திரத்தைக் கவர்ந்து செல்லத்
தாகம் வந்ததா ?
காத்திருக்கேன் காத்திருக்கேன் என்
கனவும் நீ தானே ...
எதிர் பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்
ஏக்கம் ஏன் செந்தேனே?
ஆண்
பூவு ஒன்று பேசியதே !...
புன்னகையை வீசியதே ....
தேன் அழைக்குது தேன் அழைக்குது அன்பே வா
தென்றலென முன்றலென முன்பே வா .....
கண் சிமிட்டும் நேரமெல்லாம் இனிக்
காதல் அரங்கேறும்!
கைவளையல் ஓசையோடு
மோதல் அரங்கேறும்!
பெண்
போதும் போதும் போதும் மச்சானே
பெண்ணிவளை வெக்கம் கவ்வ வைக்காதே!
உச்ச நாணம் உயிரைக் கொல்லுதே!
உன் பெயரை உரக்கச் சொல்லுதே!
ஆண்
அச்சம் ஏனடி?
அமைதி கொள்ளடி
மொட்டு விட்ட மலரே நீ புது
மோகம் கொள்ளடி
பத்து விரல் தொட்டணைத்துப்
பாடம் சொல்லவா?
பாவை உன்றன் விழி கசிய
பார்வை சிந்தவா?
பெண்
பரிகாசமா?
இது நியாயமா?
என் தேகம் தொடலாமா?
ஆண்
சந்தேகம் வரலாமா?
( உடல் அசையும் )
வணக்கம்
ReplyDeleteஅம்மா
ரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரி! இப்படி காதல் ரசம் சொட்டும் கவிதைகளை அழகு தமிழில் அள்ளித் தெளித்தால்.....வாசிக்கும் எல்லோரும் சொக்கித்தான் போய்விடுவர்!
ReplyDeleteமிகவும் ரசித்தோம்!
அடடா...! பிரமாதம் அம்மா...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வித்தியாசமானகவிதை, பொருத்தமான படத்துடன். நன்றி.
ReplyDeleteசினிமாவுக்கு பாட்டு எழுதும் தகுதி வந்துவிட்டது...
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான பாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்பக் கவியில் இழையோடும் ராகங்கள்
ReplyDeleteஅன்பில் விளைந்த அனி !
இனிய பாடல் அழகு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
6
ReplyDeleteதமிழ்மணம் 7
ReplyDeleteவணக்கம்!
மணக்கும் தமிழெடுத்து வார்த்தாய்! இனிமை
கணிக்கும் கவியில் களித்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அழகான அட்டகாசமான ஒரு காதல் பாடல் இந்த பாடலை வாசிக்கும் போது காதல் கொள்ள தோணுது பாராட்டுகள்...தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்...
ReplyDeleteகாதல் உணர்வோடு இந்த பாடலை என் மனைவியிடம் பாடிக் காண்பித்தேன் முத்தம் தருவாள் என்று எதிர்பார்த்தால் சத்தமாக ஒன்று தந்ததாள் அது என்னவென்றுதான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லையே
ReplyDeleteமனைவியிடம் பாடலில் என்ன குறைடி மிக அருமையாக இருக்கிறதே என்று கேட்டால் அவள் சொல்லுகிறாள் பாடலில் குறை இல்லை ஆனால் பாடியவர் மீதுதான் குறை இந்த வயசில் காதல் பாடல் தேவையா> என்று கேட்கிறாள் ஹும் ம்ம்ம்ம்ம்ம்
பூவு ஒன்று பேசியதே !...
ReplyDeleteபுன்னகையை வீசியதே ....
கவிதைக்கு ஏற்ற உவமை, நன்று.
www.killergee.blogspot.com
அருமை சகோதரியாரே அருமை
ReplyDeleteதம 9
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeletevisit http://ypvn.0hna.com/
வரிகள் இனிமையுடன் ஆட்சி செய்த பா மிகச் சிறப்பு..
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள்.....
ReplyDelete