பழைய நினைப்புத்தான் மாமா
எனக்கு பழைய நினைப்புத்தான்
பாட்டி சொன்ன கதையைக்கூட
நான் இன்னும் மறக்கவே இல்ல!....
வலைய விரிக்குற நீயோ எனக்கு
வலைய விரிக்குற.....................!!!!¨
வயசுப்பெண்ணா நினைச்சுக்கிட்டு
றொம்பத்தான் வலைய விரிக்குற!.....
சின்னவயசில திருமணம்தான்
செஞ்சுக்கலாமா மாமா செஞ்சுக்கலாமா..
அப்புறம் சிக்கல்வந்து பிரிஞ்சுப்புட்டா
மனசு தாங்குமா மாமா மனசு தாங்குமா.......
கல்விக்கூடம் செல்லும் வயசில்
கர்ப்பம்தாங்கினால் நானும்
களத்துமேட்டில் உன்னுடன்தான்
காலம் தள்ளனும் மாமா காலம்தள்ளணும்
என்ன இந்த உலகத்திலே இருக்குதென்றேதான்
ஏறெடுத்தும் பார்க்காத வாழ்க்கை வாழணும்
இதனால் நம் சந்ததிகள் அத்தனையும் சங்கடப்படும்
இந்த சனத்தொகையைப் பெருக்கிக்கிடா போதுமா மாமா..
பாரதியின் புதுமைப் பெண் பாட்டிலேதானா
மாமா வெறும் பாட்டிலேதானா!...... உனக்கும்
பக்குவமா சொன்னா இதக் கேட்டுக்கோ மாமா
அட நீயாவது இதைக் கேட்டுக்கோ மாமா.........!!!
வயிறுமட்டும் நிறஞ்சால் இங்கே போதுமா மாமா...
நாம் வந்ததற்கும் ஒண்ணு ரெண்டு கத்துக்கலாமே
அறிவுப்பசி எடுத்து நானும் ஓடுகின்றபோ நீயோ
அதன் நடுவில் வந்து நின்று வலையை விரிக்குறாய்.....!!!
கருவிபோல வாழ எனக்கு இஸ்ரமே இல்ல
மாமா எதில் எனக்கு இஸ்ரமே இல்லை.............//
இந்தக் கஸ்ரம் நஸ்ரம் புரிசுக்காம நீதான்
வலைய விரிக்குற எனக்கு இங்க வலைய விரிக்குற...!!!
சொந்தம் பந்தம் பாத்துக்கிட்டா போதுமா மாமா உனக்கு
அந்த சொத்துப்பத்து வேணுமுன்னா நீயே வச்சுக்கோ மாமா
தூத்துக்குடி பட்டினத்தில் நானும் கல்வி பயிலனும் அந்த
துறைமுகத்தில் என்னை நீயும் இறக்கிவிடு மாமா.........:)
கவிதை கலக்கல் நன்றி!
ReplyDeleteவலையை இனிமே நீ விரிப்பியா என்று உட்கார வைச்சி
ReplyDeleteஒரு போதனையே செய்துடீங்க...
கல்வி இவ்வாழ்வில் நமை கரைசேர்க்க உதவும் படகு
ReplyDeleteஎன அருமையாக ஒரு கவிதை படைத்திருக்கிறீர்கள்.
பெண்கல்வி மிக அவசியம்...
பாரதி கண்ட புதுமைப்பெண் ஏட்டோடு நின்றுவிடாமல்
நிகழ்வினில் நடக்க வேண்டும்.
அருமை அருமை.
தமிழ்மணம், தமிழ் பத்து ஒட்டு போட்டாச்சு சகோதரி.
ReplyDeleteவாங்க வாங்க
வாகை சூட
எம்மூராம் தூத்துக்குடிக்கு
கல்வி பயில வாங்க
சூப்பரு கவிதை.
ReplyDeleteகல்விக்கூடம் செல்லும் வயசில்
ReplyDeleteகர்ப்பம்தாங்கினால் நானும்
களத்துமேட்டில் உன்னுடன்தான்
காலம் தள்ளனும் மாமா காலம்தள்ளணும்//
விழிப்புணர்வு கவிதை!
tm 4
சூப்பர் ....
ReplyDeleteசொந்தம் பந்தம் பாத்துக்கிட்டா போதுமா மாமா உனக்கு
ReplyDeleteஅந்த சொத்துப்பத்து வேணுமுன்னா நீயே வச்சுக்கோ மாமா
தூத்துக்குடி பட்டினத்தில் நானும் கல்வி பயிலனும் அந்த
துறைமுகத்தில் என்னை நீயும் இறக்கிவிடு மாமா.........:)//
அருமை அருமை.
விவரமான பொண்ணுதாங்க..
ReplyDeleteவிளக்கமாகவே சொல்லீட்டீங்க..
நல்லாயிருக்குங்க..
பாரதியின் புதுமைப் பெண் பாட்டிலேதானா
ReplyDeleteமாமா வெறும் பாட்டிலேதானா!.
அருமை.
புதுமைப்பெண்களைக் காணத்துடிக்கும் கவிவரிகள் அருமை
ReplyDeleteகவித நல்லாயிருக்கு!(என்னமோ நடக்குதுன்னு மட்டும் புரியுது!)வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅருமை!அருமை! பிடிங்க பூங்கொத்தை!
ReplyDeleteநல்ல செய்தி சொல்லி போகுது உங்கள் கவிதை.
ReplyDeleteகடைசி பந்தி வேறு ஒரு அர்த்தம் சொல்லி போனாலும்
அதன் முந்தைய பந்திகள்,
நம் இண்டர்நெட் காதல்களில்ன் முகமூடிகளை
கழட்டி விட்டு போய்விட்டது.
இங்கே அதிகம் சின்ன பொண்ணுங்க எல்லாம்
இந்த இண்டர்நெட்டில் தானே சீரலியுதுவள்.
தரமான கவிதை, இக்கவிதையை
குறிப்பாக பெண்ணை பெற்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
உங்கள் கவிதையின் நாயகி போல்
ReplyDeleteஎல்லா பெண்களும் இருந்துவிட்டால்
பெண் விடுதலை வெகு விரைவிலேயே...
வணக்கமம்மா..
ReplyDeleteநல்லதொரு கருத்துக்கவிதை அதுவும் பெண்கல்வி பற்றி.. வாழ்த்துக்கள்..
இந்த சிலைய எண்ணி வலைய விரிக்கும் அந்த மாமா புள்ளைக்கு ஒரு சின்ன வேண்டுகோள் விட்டுவிடு மாமா விட்டுவிடு இந்த சிட்டு உனக்கு செட்டாகாது விட்டுவிடு...!
ReplyDeleteவாழ்த்துக்கள் அருமை.>!
அருமை
ReplyDelete11th vote tamilmanam
ReplyDeleteதமிழ் மணம் 11,
ReplyDeleteசிறு வயதுத் திருமணத்தை விட, கல்வி கற்பதே சிறந்தது எனும் உணர்வினை உங்களின் கவிதை சொல்லி நிற்கிறது.
நல்லதொரு விஷயத்தினைச் சொல்லியது உங்கள் கவிதை.... நல்ல பகிர்வு...
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் உங்களது முதல் வருகைக்கு நன்றி...
கவிதை கலக்கல் நன்றி!
ReplyDeleteநன்றி ஐயா .......
வலையை இனிமே நீ விரிப்பியா என்று உட்கார வைச்சி
ReplyDeleteஒரு போதனையே செய்துடீங்க...
நன்றி சகோ .....
அருமையான வரிகளை சாட்டையாய் சுழற்றி அடிக்காமல் மென்மையாக மல்லிகைப்பூச்செண்டால் வருடி சொன்னது போல் அத்தனை அழகு கவிதை வரிகள் அம்பாளடியாள்....
ReplyDeleteஅறிவுரைகளை பின்பற்றி நடந்தாலே போதும் வாழ்க்கை சிறக்கும்....
அன்பு வாழ்த்துகள்பா...
கல்வி இவ்வாழ்வில் நமை கரைசேர்க்க உதவும் படகு
ReplyDeleteஎன அருமையாக ஒரு கவிதை படைத்திருக்கிறீர்கள்.
பெண்கல்வி மிக அவசியம்...
பாரதி கண்ட புதுமைப்பெண் ஏட்டோடு நின்றுவிடாமல்
நிகழ்வினில் நடக்க வேண்டும்.
அருமை அருமை.
மக்க நன்றி சகோ உங்கள் வரவும் கருதும் மனதை மகிழ வைத்தது......
தமிழ்மணம், தமிழ் பத்து ஒட்டு போட்டாச்சு சகோதரி.
ReplyDeleteவாங்க வாங்க
வாகை சூட
எம்மூராம் தூத்துக்குடிக்கு
கல்வி பயில வாங்க
நன்றி சகோ உங்கள் ஊர் தூத்துக்குடியா?....
அப்போ அது நம்ம அண்ணனோட ஊர்தான் .
மிக்க நன்றி சகோ .உங்கள் அன்புக்குத்
தலைவணங்குகின்றேன் ...நன்றி கருத்துக்கும்
ஓட்டுப் போட்டதற்கும் .
சூப்பரு கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி சகோ .
கல்விக்கூடம் செல்லும் வயசில்
ReplyDeleteகர்ப்பம்தாங்கினால் நானும்
களத்துமேட்டில் உன்னுடன்தான்
காலம் தள்ளனும் மாமா காலம்தள்ளணும்//
விழிப்புணர்வு கவிதை!
tm 4
மிக்க நன்றி சகோ வரவுக்கும் கருத்துக்கும்
ஊக்குவிப்புத் தரும் ஓட்டுகளுக்கும் ...........
சூப்பர் ....
ReplyDeleteமிக்க நன்றி சகோ ...........
சொந்தம் பந்தம் பாத்துக்கிட்டா போதுமா மாமா உனக்கு
ReplyDeleteஅந்த சொத்துப்பத்து வேணுமுன்னா நீயே வச்சுக்கோ மாமா
தூத்துக்குடி பட்டினத்தில் நானும் கல்வி பயிலனும் அந்த
துறைமுகத்தில் என்னை நீயும் இறக்கிவிடு மாமா.........:)//
அருமை அருமை.
மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் .....
விவரமான பொண்ணுதாங்க..
ReplyDeleteவிளக்கமாகவே சொல்லீட்டீங்க..
நல்லாயிருக்குங்க..
மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும் ....
பாரதியின் புதுமைப் பெண் பாட்டிலேதானா
ReplyDeleteமாமா வெறும் பாட்டிலேதானா!.
அருமை.
மிக்க நன்றி சகோதரி ........
புதுமைப்பெண்களைக் காணத்துடிக்கும் கவிவரிகள் அருமை
ReplyDeleteபுது வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .உங்கள் வரவு தொடரட்டும்
சகோ ......
கவித நல்லாயிருக்கு!(என்னமோ நடக்குதுன்னு மட்டும் புரியுது!)வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா .ஒன்றும் நடக்கவில்லை .பெண்கல்வி அவசியம் என்பதை
வலு ஆணித்தரமாக வலியுறுத்தல் நடக்குது .அவ்வளவுதான் .நன்றி ஐயா
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் .......
கவிஞரின் காதல் கற்பனை கேட்க, ரசிக்க அருமை.
ReplyDeleteமிக்க நன்றி சகோ .வரவுக்கும் பாராட்டுக்கும் .
அருமை!அருமை! பிடிங்க பூங்கொத்தை!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோ இத்தனை வர்ணங்கள் சேர்ந்த
அழகிய பூங்கொத்தா!!!!........அருமை நன்றி சகோ ...
நல்ல செய்தி சொல்லி போகுது உங்கள் கவிதை.
ReplyDeleteகடைசி பந்தி வேறு ஒரு அர்த்தம் சொல்லி போனாலும்
அதன் முந்தைய பந்திகள்,
நம் இண்டர்நெட் காதல்களில்ன் முகமூடிகளை
கழட்டி விட்டு போய்விட்டது.
இங்கே அதிகம் சின்ன பொண்ணுங்க எல்லாம்
இந்த இண்டர்நெட்டில் தானே சீரலியுதுவள்.
தரமான கவிதை, இக்கவிதையை
குறிப்பாக பெண்ணை பெற்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
மிக்க நன்றி சகோ .....
உங்கள் கவிதையின் நாயகி போல்
ReplyDeleteஎல்லா பெண்களும் இருந்துவிட்டால்
பெண் விடுதலை வெகு விரைவிலேயே...
மிக்க நன்றி சகோ .உங்கள் வரவுக்கும்
தாராளமான கருத்துப் பகிர்வுக்கும் ........
வணக்கமம்மா..
ReplyDeleteநல்லதொரு கருத்துக்கவிதை அதுவும் பெண்கல்வி பற்றி.. வாழ்த்துக்கள்..
வாங்க வாங்க காட்டானே ஒரு நாளும் தவறாமல் என் வளர்ச்சிக்காய்
தோள்கொடுக்கும் உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றி
சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் .மிகக் நன்றி காட்டான் .....
இந்த சிலைய எண்ணி வலைய விரிக்கும் அந்த மாமா புள்ளைக்கு ஒரு சின்ன வேண்டுகோள் விட்டுவிடு மாமா விட்டுவிடு இந்த சிட்டு உனக்கு செட்டாகாது விட்டுவிடு...!
ReplyDeleteவாழ்த்துக்கள் அருமை.>!
மிக்க நன்றி சகோ என் கவிதைக்கே அருமையான
கருத்துக் கவிதை இட்டமைக்கு ..........
அருமை
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ....
11th vote தமிழ்மணம்
ReplyDeleteமிக்க நன்றி சகோ உங்கள் ஆதரவிற்கு ......
தமிழ் மணம் 11,
ReplyDeleteசிறு வயதுத் திருமணத்தை விட, கல்வி கற்பதே சிறந்தது எனும் உணர்வினை உங்களின் கவிதை சொல்லி நிற்கிறது
வாங்க சகோ நீண்டநாட்களின் பின் உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி சகோ .வரவுக்கும் கருத்துக்கும் ..............
நல்லதொரு விஷயத்தினைச் சொல்லியது உங்கள் கவிதை.... நல்ல பகிர்வு...
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் உங்களது முதல் வருகைக்கு நன்றி...மிக்க நன்றி சகோ .உங்கள் வரவும் கருத்தும் தொடரட்டும் வாழ்த்துக்கள் .....
அருமையான வரிகளை சாட்டையாய் சுழற்றி அடிக்காமல் மென்மையாக மல்லிகைப்பூச்செண்டால் வருடி சொன்னது போல் அத்தனை அழகு கவிதை வரிகள் அம்பாளடியாள்....
ReplyDeleteஅறிவுரைகளை பின்பற்றி நடந்தாலே போதும் வாழ்க்கை சிறக்கும்....
அன்பு வாழ்த்துகள்பா...
மிக்க நன்றி சகோதரி உங்கள் வரவும் வாழ்த்தும் என் மனதை மகிழ வைத்தது ...........
மறுபடி படித்தேன்...இன்னும்
ReplyDeleteநல்லாயிருந்திச்சு....
அறிவுப்பசி எடுத்து நானும் ஓடுகின்றபோ நீயோ
ReplyDeleteஅதன் நடுவில் வந்து நின்று வலையை விரிக்குறாய்.....
அடடா.. வலையில் சிக்காமல் கலையில் சிக்கட்டும்..