11/17/2010

அம்மா அம்மா கண்ணகியம்மா..

அம்மா அம்மா கண்ணகியம்மா காவல் நீயம்மா....
கண்ணீர் விட்டும் கலங்கி நின்றோம் கண்ணே பாரம்மா...
கண்ணே பாரம்மா.... கண்ணகித் தாயம்மா....
கண்ணே பாரம்மா.... கண்ணகித் தாயம்மா....
                                        (அம்மா அம்மா கண்ணகியம்மா)
கருமாரி உருமாறி கவலைகள் தீர்ப்பவள் நீ..........
கண்கொண்ட்டும் காணோமே கல்லாயானாயோ....  
கஸ்ரம் தீர்ப்பாயோ.... எம் கவலைகள் பார்ப்பாயோ....
கண்ணகித் தாயம்மா..... எம் கண்ணே நீயம்மா.....
                                         (அம்மா அம்மா கண்ணகியம்மா)
விரித்த சடைமுடி தொடுத்து முடிக்கும் முன் எடுத்த சபதம் முடித்தவளே.
தரை நடுங்க நடு கடல் எழும்ப நடனம் ஆடி மதுரையை எரித்தவளே ..
சங்கு சக்கரம் அம்பும்,வில்லும் சகலதும் தாங்கியே விழிகளிலே...
அன்பு பெரிதென ஆர்ப்பரித்து மனம் அகிலம் நடுங்க நின்றவளே...
காப்பிய நாயகியே...... கண்ணகித் தாயம்மா........
போற்றியே தொளுதேற்றும்....பக்த்தர்கள்  குறை தீர்ப்பாய்.....   
                                           (அம்மா அம்மா கண்ணகியம்மா)
தினம் தோறும்.... சுமை தாங்கும்.... உள்ளம் சருகாகும்....
உன்னை நாளும்... துதித்தேதான்... எண்ணம் நிறைவேறும்
எமதெண்ணம் நிறைவேறும்........
                                              (அம்மா அம்மா கண்ணகியம்மா)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/15/2010

காணாத காட்சி

காணாத காட்சி கண்டேன் 
கன்னியா குமரியில் -ஆழியும் 
புகழ் பாடும் அன்னையின் 
திருக்கோலம்-வாடாத முல்லைச்  
சிரிப்பெழிலால்   பாதம் தன்னில் 
யாரும் காணாத இன்பம் கண்டு 
கசிந்தது என் மனமே......
கங்கையும் யமுனயும்                                                                            காவிரியும் சங்கமிக்கும்
ஓர் அங்கமாய் விளைந்த தேசம்
அமர்ந்திருக்கும் தேவியவள்
மங்கையர்க்கு  அருள் புரிவாள் 
மானிடர் தம் குறை தீர்ப்பாள்
கங்கையில் அம்மர்ந்த கன்னித் 
தாயவள் பதம் போற்றி போற்றி......  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

ஒற்றுமை என்றொரு தேர் இழுத்து

ஒற்றுமை என்றொரு தேர் இழுத்து
உலகைக் கட்டியே காத்திடு மானிடனே....
நித்தமும் நித்தமும் போர் புரிந்து 
இங்கு செத்தவர் யாவரும் ஓரினமே!...

விழி கற்பது கல்வியை ஏன் எதற்கு?.....    
விழி கற்பது கல்வியை ஏன் எதற்கு-இந்த                                    அற்புத பூமி மாள்வதர்க்கோ?..........
அற்புத பூமி மாள்வதர்க்கோ!!!..........

சத்தியம் தர்மங்கள் நூலினிலே மட்டும் 
சரித்திரம் ஆவது மாறட்டுமே!.....
சத்தியம் தர்மங்கள் நூலினிலே மட்டும் 
சரித்திரம் ஆவது மாறட்டுமே!.....

எத்தனை பிறவி எடுத்திடினும் 
மனிதன் ஒற்றுமையாக வாழட்டுமே!!....
                                                                                                 உலகினில் சமநிலை தோன்றட்டுமே
நல்ல உயிரினம் அன்பாய் வாழட்டுமே.....
தனதனதென்றெண்ணித்   தன்னுயிர் போல 
இன்னுயிர் காத்து வாழ்ந்திடுவோம்

வாழ்ந்திடுவோம் இங்கே ¨
வாழ்ந்திடுவோம்............
வாழ்ந்திடுவோம்இங்கே 
வாழ்ந்திடுவோம்.......                                                                                                                                              
                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/14/2010

ஆதி சக்தி ஆனவளே....

ஆதி சக்தி ஆனவளே அம்மா தாயே....
உன்னை அகிலம் எல்லாம்  வணங்குதடி அம்மா தாயே....    
நீதி இது நீதி என்று காப்பாய் தாயே.....
இந்த நிலை குலைந்த வாழ்வுதனைப் பார்ப்பாய் தாயே.....

நம் சாதி சனம் அத்தனையும் சங்கடத்திலே -தினம் 
சக்கரமாய் சுத்துதடி அம்மா தாயே.............
வேண்டி வந்த சாபமெல்லாம் அம்மா தாயே.....      
இங்கே வினை முற்றி நிக்குதடி அம்மா தாயே....

 பேதமை இல்லையடி அம்மா தாயே......
உன்னைப் போற்றியவர்  தோற்றதில்லை அம்மா தாயே....
சீதைக்கு வந்த நிலை அம்மா தாயே....
இன்றும் சீர்தூக்கி நிற்குதடி அம்மா தாயே....

பத்தி மனம் எரியுதடி அம்மா தாயே....
உந்தன் பக்தர் குறை தீர்க்கும் வரம் தருவாய் தாயே
கற்பிற்கு அரசியான கண்ணகித்தாயே
வரும் கஸ்ரங்களைப் போக்கி அருள் தருவாய் தாயே.....

நீதி சொல்லி உன் அருகே வந்தோம் தாயே...
நித்தம் ஒரு தைரியத்தை தருவாய் நீயே.... 
நேர்வழியில் செல்பவர்க்கு அம்மா தாயே
என்றும் நிறைகுடமாய் நிற்பவள் நீ அம்மா தாயே

ஊர்ப்பளியைப் போக்கிடுவாய் அம்மா தாயே
என்றும் உத்தமியைக்  காத்திடுவாய்  அம்மா தாயே...
சிலம்பெடுத்து சீக்கிரமாய் வருவாய் தாயே
வரும் சிக்கல்களைப் போக்கி அருள்  தருவாய்  தாயே
                                                                (ஆதி சக்தி ஆனவளே) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

ஒரு நூறு கவிதை......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

பருவக்காற்று வீசயிலே....

                  
பருவக் காற்று வீசயிலே பலர் 
பாதைகள் இங்கே மாறுதடா 
உருவம் பார்த்து வந்த காதல் 
உயிரைக் குடிக்கப் பார்க்குதடா 
தினமும் அழுத கண்ணீரால் பல 
தீத்தக்கரைகள் ஓடுதடா!                                      
                                         
...............................................(பருவக்காற்று) 

நீரில்லாத மீனென்பார்!
நிலவில்லாத வானென்பார்!
வேரில்லாத மரம் என்பார்! 
விடியலை இழந்த பறவை என்பார்!
யாவும் துறந்த துறவியைப் போல்......
யாவும் துறந்த துறவியைப் போல்.......... 
தினம் மரண யாசகம் கேட்கும்
மனிதர்கள் பார்!
                                          (பருவக்காற்று)

விதியோ சதியோ என் சொல்வேன்! 
இதில் விதை விதைத்தவன் 
துணையையும் காணமடா!
காலம் நேரம் கூடும் போது 
காலமும் நேரமும் கூடும்போது
காதல் இங்கே மலர்கிறதே!

                               (பருவக்காற்று) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.