11/15/2010

ஒற்றுமை என்றொரு தேர் இழுத்து

ஒற்றுமை என்றொரு தேர் இழுத்து
உலகைக் கட்டியே காத்திடு மானிடனே....
நித்தமும் நித்தமும் போர் புரிந்து 
இங்கு செத்தவர் யாவரும் ஓரினமே!...

விழி கற்பது கல்வியை ஏன் எதற்கு?.....    
விழி கற்பது கல்வியை ஏன் எதற்கு-இந்த                                    அற்புத பூமி மாள்வதர்க்கோ?..........
அற்புத பூமி மாள்வதர்க்கோ!!!..........

சத்தியம் தர்மங்கள் நூலினிலே மட்டும் 
சரித்திரம் ஆவது மாறட்டுமே!.....
சத்தியம் தர்மங்கள் நூலினிலே மட்டும் 
சரித்திரம் ஆவது மாறட்டுமே!.....

எத்தனை பிறவி எடுத்திடினும் 
மனிதன் ஒற்றுமையாக வாழட்டுமே!!....
                                                                                                 உலகினில் சமநிலை தோன்றட்டுமே
நல்ல உயிரினம் அன்பாய் வாழட்டுமே.....
தனதனதென்றெண்ணித்   தன்னுயிர் போல 
இன்னுயிர் காத்து வாழ்ந்திடுவோம்

வாழ்ந்திடுவோம் இங்கே ¨
வாழ்ந்திடுவோம்............
வாழ்ந்திடுவோம்இங்கே 
வாழ்ந்திடுவோம்.......                                                                                                                                              
                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2 comments:

  1. ஒற்றுமை எனும் தேரிழுத்து
    நற்றமிழ் கவி தந்தவரே
    கற்றவர்கூட எண்ணாமல்
    கண்ணை மூடி வாழ்கையிலே
    ஒற்றுமை கவி வடித்தீரே
    உமக்கு என் பாராட்டு.

    வதிரி.சி.ரவீந்திரன்.

    ReplyDelete
  2. பாராட்டுக்கு மிக்க நன்றி கவிஞரே!....தங்களது
    ஆக்கங்கள் மிகச் சிறந்தவை என்பதை நான் அறிவேன்.
    தங்களைப் போன்றவர்களின் கருத்துரைகளும் பாராட்டுமே
    எனது படைப்புகளின் உயர்ச்சிக்கு உறுதுணையாக நான்
    கருதுகின்றேன்.தாய்போல் வந்து நான் கொண்ட தமிழ்ப் பற்று
    மேலோங்க நல் ஆசிகள் வழங்குமாறு என் தமிழ்த்தாய் உறவுகள்
    உங்கள் அனைவரையும் மனமுவர்ந்து அழைக்கின்றேன்............

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........