உன்னை அகிலம் எல்லாம் வணங்குதடி அம்மா தாயே....
நீதி இது நீதி என்று காப்பாய் தாயே.....
இந்த நிலை குலைந்த வாழ்வுதனைப் பார்ப்பாய் தாயே.....
நம் சாதி சனம் அத்தனையும் சங்கடத்திலே -தினம்
சக்கரமாய் சுத்துதடி அம்மா தாயே.............
வேண்டி வந்த சாபமெல்லாம் அம்மா தாயே.....
இங்கே வினை முற்றி நிக்குதடி அம்மா தாயே....
பேதமை இல்லையடி அம்மா தாயே......
உன்னைப் போற்றியவர் தோற்றதில்லை அம்மா தாயே....
சீதைக்கு வந்த நிலை அம்மா தாயே....
இன்றும் சீர்தூக்கி நிற்குதடி அம்மா தாயே....
பத்தி மனம் எரியுதடி அம்மா தாயே....
உந்தன் பக்தர் குறை தீர்க்கும் வரம் தருவாய் தாயே
கற்பிற்கு அரசியான கண்ணகித்தாயே
வரும் கஸ்ரங்களைப் போக்கி அருள் தருவாய் தாயே.....
நீதி சொல்லி உன் அருகே வந்தோம் தாயே...
நித்தம் ஒரு தைரியத்தை தருவாய் நீயே....
நேர்வழியில் செல்பவர்க்கு அம்மா தாயே
என்றும் நிறைகுடமாய் நிற்பவள் நீ அம்மா தாயே
ஊர்ப்பளியைப் போக்கிடுவாய் அம்மா தாயே
என்றும் உத்தமியைக் காத்திடுவாய் அம்மா தாயே...
சிலம்பெடுத்து சீக்கிரமாய் வருவாய் தாயே
வரும் சிக்கல்களைப் போக்கி அருள் தருவாய் தாயே
(ஆதி சக்தி ஆனவளே)
பக்தர்களுக்கேற்ற
ReplyDeleteபக்திமணக் கவிதை.
அருமையாய் பிரார்த்தனைகள். பலித்திட வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி எனது அன்பு உறவுகளே.தங்கள் வரவுக்கும்
ReplyDeleteவாழ்த்துகளுக்கும்........
Nalla vatikal rupika..vaalthukal
ReplyDeleteVetha-Elangathilakam
Denmark.
http://kovaikkavi.wordpress.com/
"ஓம் சக்தி”யைப் பாடும் சிறந்த பாடல், உங்கலது ஆக்கம்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
(யூட்யூப்-இலும் கண்டும்,கேட்டும் மகிழந்தேன்.)