7/16/2013

பிறந்தநாள் வாழ்த்து எனக்கே எனக்கா :)


அழைத்த அழைப்பிதற்கு ஓடோடி வந்த
அன்பு நெஞ்சங்களே வருக வருக ..........
இன்பத்திலும் துன்பத்திலும் கலந்திருக்கும்
இணையற்ற வலைத்தள உறவுகளே வருக வருக....
                                                   
வகை வகையாய் உணவு செய்து
வற்றாத அன்பு கலந்து
நான் பிறந்த நாளிதனில்
நன்றி சொல்லவே காத்திருந்தேன்

தேன்கொளிக்கும் கருத்து மழையைத்
தேடி வந்து பொழிந்தவர்களே
நான் கொடுக்கும் விருந்திதனை
நாள் முழுதும் சுவைத்திடுவீர் :)))


மச்சம் உண்டு சைவம் உண்டு
மனதிற்கேற்ப வகையில் உண்டு
மிச்சமின்றி உண்டுடுவீர்
மிருதுவான மனம் படைத்தவர்களே ...

அச்சம் வேண்டாம் எண்ணெய்யில்லை
அளவு கடந்த கொளுப்பும்மில்லை
இன்றுமட்டும் எனக்காகவே
இயன்றவரைக்கும்  உண்டு களிப்பீர் .....
                                               

தேனும் பாலும் கலந்து நல்ல
தித்திக்கும் பலகாரமும் உண்டு
போகும் போதும் எடுத்துச் சென்றால்
புன்னகை பூக்கும் என் மனதினில் இன்று ....பார்த்துப் பார்த்து வாங்கி வைத்த
பலவகை இனிப்பு வகைகளும் கொஞ்சம்
ஈற்றில் சிறுவர்கள் வீட்டினில் இருந்தால்
இதையும் எனக்காக எடுத்துச் செல்லுங்கள் :)


பாக்கு வெற்றிலை  போடும் பழக்கம்
இருந்தால் இதையும் எடுத்துக் கொள்ளுங்கள்
பழங்களுண்டு தண்ணியுமுண்டு
பழரசம் வேண்டுமா கேட்டு வாங்குங்கள் .....:))குளிர்களி வேண்டுமா தேனீர் வேண்டுமா ?..
குடிக்கத் தண்ணி ஏதேனும் வேண்டுமா?...
பாட்டுத் தொடர்ந்து கேட்க்கப் பிடிக்குதா ?..
நாஞ்சில் மனோ அண்ணா பாட்டுப் பாடுங்க :)


வாழ்த்துச் சொல்ல வந்த உறவுகளே
வந்தவரைக்கும் நன்றி சொல்லுவேன்
கூட்டம் கலையும் நேரமிப்போ
கொண்டு வந்த பரிசைப் பார்ப்போம் !!:......


ஆஹா அத்தனையும் பாடலா !!!!....
தித்திக்கும் பாடல் நூறு
தெய்வீகக் கதைகள் பாரு !!!!...
எத்திக்கில் நான் சென்றாலுமே
எட்டாத பரிசு இது !!!!...........
                                                         


டிஸ்கி : கற்பனையிலேனும் இப்படியொரு விருந்துபசாரம்
                 செய்த திருப்தி எனக்கு :) சாப்பாடு எப்படி என்று இனி
                 உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள் ?...............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

46 comments:

 1. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்று போல் என்றும் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! வாழ்க வளமுடன்..!! விருந்து சாப்பாடு, பழங்கள், இனிப்பு ,அனைத்தும் அருமை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சொன்ன மாதிரியே குறித்த நேரத்திற்கு வந்து வாழ்த்துச் சொன்ன
   உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் தோழி .

   Delete
 2. சாப்பாடு மனம் நிறைந்தது...

  பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 3. எல்லாம் சரி, நம்ம சகோதரர்களுக்காக முக்கியமான, அவசியமான ஒரு பொருள் இங்கன மிஸ்ஸிங் போல இருக்கு?!

  ReplyDelete
  Replies
  1. ஏன்டீம்மா இது பொம்முனாட்டீங்க குடுக்குற விருந்தாக்கும்
   நோக்குது புரியலியா ?.......:))))))) (இருந்தாலும் கொஞ்சம் அங்கின வச்சிருக்கலாம் தான் !.....:)

   Delete
 4. அருமை... நாங்க உங்க ஊருக்கு வந்தா இவ்வளவும் கொடுப்பீங்களா?

  ReplyDelete
  Replies
  1. ராஜி தண்ணியப் போடாமலே புலம்புறாங்களே !! :)))
   ஆமா இப்ப யார் வீட்டில நின்று இத்தினையும் சுவைத்தீர்கள் சகோ ?...:))))

   Delete
 5. பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா! நானும் திருப்தியாய் சாப்பிட்டு பசங்களுக்கும், அப்பா, அம்மாக்கும் ப்லகாரங்கள் எடுத்திக்கிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி செல்லம் .போற வழியில சாப்பிட்டு முடிக்காமல் வீட்டையும்
   கொஞ்சம் கொண்டு போயிடுங்க அவ்வ்வ்வ்வ் ........

   Delete
 6. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழி.......தங்களது அறுசுவை விருந்தால், மனமும் வயிறும் நிறைந்தன. மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ...மிக்க நன்றி சகோ .வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தியமைக்கு :)

   Delete
 7. மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி .கொஞ்சம் பலகாரமாவது சாப்பிடுங்களேன் ?...:))

   Delete
 8. அத்தனையும் உண்டு மகிழ்ந்தேன்
  அறுசுவையும் உணர்ந்தேன்
  இப்பொழுது வயிறு நிறைந்ததும்
  இனி நீ பல்லாண்டு அல்ல
  பாக்கி ஆண்டுகளும் இணையோடு
  இன்றுபோல் இன்பமாய் வாழ்க

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 9. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

  விருந்து பலமா இருக்கு!

  சுவையான விருந்திற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே என் விருந்துபாசரத்தில் கலந்து கொண்டு
   மகிழ்ந்துண்டு வாழ்த்திய வாழ்த்திதற்கு :)

   Delete
 10. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.
  விருந்துக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வடிவாக சாப்பிட்டீர்களா ?...குறையேதும் இருந்தால் சொல்லுங்கள்
   அடுத்த தடவை சரி செய்து விடுகின்றேன் :) மிக்க நன்றி தோழி
   வருகைக்கும் வாழ்திதற்க்கும் .

   Delete
 11. சாப்பாடு புல் கட்டு கட்டியாச்சு அம்பாள் சகோ......

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. அட என்ன ஒரு சந்தோசமாக இருக்கிறது .என் சமையலை யாரும்
   குறை சொல்லவில்லை சகோதரா :) மிக்க நன்றி சகோ அன்பு
   கலந்த நல் வாழ்திதற்க்கு .

   Delete
 12. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  கொடுத்த உணவும் சுவை! வடித்த கவிதையும் சுவை !

  ReplyDelete
  Replies
  1. இனிய இந்த வாழ்த்திதனால் இதயம் மகிழ்கிறது ஐயா .
   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் நல் வாழ்த்திதற்க்கும் .

   Delete
 13. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... இன்றை விடவும் எதிர்காலத்தில் மகிழ்ச்சியாய் வாழ அன்பு வாழ்த்துகள்....

  விருந்து சாப்பாடு பிரமாதம்... அதிலும் அந்த பொறியல் இருக்கே... அகா ஆகா... என்ன பிரமாதம்...

  ReplyDelete
  Replies
  1. அட போங்க சகோ நல்லாவே ரசித்து உண்டீர்கள் போலும் :)
   அம்பாளடியாளின் சமையலுக்கு இத்தனை மதிப்பா ....!! :))
   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நல் வாழ்திதற்க்கும் .

   Delete
 14. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன் .சாப்பாடு பிரமாதம் உண்ட திருப்தியில் கொஞ்சம் விருந்தில் இருந்து பிடித்த வெற்றிலையும் பாக்கும் கொஞ்சம் சுண்ணாம்பும் சேர்ந்த்து சுருட்டிக்கொள்கின்றேன் ஒரு வெற்றிலைக்கூறு :)))))

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா நான் கஸ்ரப்பட்டு சமைத்தது வீண் போகவில்லை.
   மிக்க நன்றி சகோ என் சபையைச் சிறப்பிக்கும் வண்ணம் மகிழ்ந்துண்டு வாழ்த்திய வாழ்த்திதற்க்கு :))

   Delete
 15. பிறந்த நாள் வாழ்த்துகள்..

  பர்த்டே சமையல் சாதம்.. காய்கறிகளும் பிரமாதம்.. இந்த இணையப் பிரசாதம்.. இதுவே எனக்கு போதும்.. ஹஹஹா..

  ReplyDelete
  Replies
  1. ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டேன் .நான் கஸ்ரப்பட்டு
   சமைத்த சமையல்லவோ :) மிக்க நன்றி சகோதரா அன்போடு
   வாழ்த்திய வாழ்திதற்க்கு .

   Delete
 16. மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் அன்பான வாழ்த்திதர்க்கும் .

   Delete
 17. முகநூலில் கூறிவிட்டேன், பிறந்தநாள் வாழ்த்துக்களை. இங்கே வந்தால் கொட்டிக் கிடக்குது விருந்து. தலைவாழை இலைபோட்டு விருந்தோம்பல் அருமை.

  இன்று போல் என்று வாழ வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அது சரியம்மா எங்கள் வீடு இதுதானே .வடிவாகச்
   சாபிட்டீர்களா ?..:)மிக்க மகிழ்ச்சியாக உள்ளதம்மா .இந்த வரவும் வாழ்த்தும் .மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வாருங்கள் .

   Delete
 18. இன்முகங் கருணை இதமாய் உபசாரம்
  நன்மனம் பண்பாடு நல்விருந் தோம்பலும்
  வந்திட வேண்டியே வரவேற்ற அன்னையே
  செந்தமிழ்ச் செல்வியே சிறப்புடன் வாழ்ந்திடு!!!

  அன்புத் தோழியே!...
  அனைத்து நலன்களும் பெற்று நீடூழி வாழ்ந்திட
  உங்கள் இனிய பிறந்தநாளாம் இந் நன்நாளில்
  உளமார வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மனம் மகிழ வாழ்த்துரைத்த அன்புத் தோழிக்கு என் மனமார்ந்த
   நன்றிகள் உரித்தாகட்டும் .

   Delete
 19. சகோதரிக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  விருந்து செம கலக்கலா இருக்கு,மனமும் வயிறும் நிறைந்தது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் கருதும் வாழ்த்தும்
   கண்டத்தில் .மிக்க நன்றி சகோதரி .

   Delete
 20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  வயிறு நிறைந்தது மனமும் குளிர்ந்தது
  சமையலும் அலங்காரமும் பிரமாதம்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியாக உள்ளதையா தங்களின் கருதும் வாழ்த்தும் கண்டத்தில் .மிக்க நன்றி ஐயா .

   Delete
 21. பல்சுவை விருந்து பறிமாறியமைக்கு நன்றி! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா இனிய நல் வாழ்த்திதர்க்கு .

   Delete
 22. தாமதமாகினும் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. எப்போது வாழ்த்தினாலும் அன்போடு வாழ்த்தும் இந்த வாழ்த்துக்காக
   எவ்வளவு நாளும் காத்திருக்கலாம் .மிக்க நன்றி சகோதரி .

   Delete
 23. ஆத்தீ இம்புட்டு தின்பண்டன்களா ஒருமாசம் உக்காந்து சாப்பிடலாம் போல இருக்கே ? சரி சரி வாழ்த்தை சொல்லிருவோம் முதல்ல.

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் சாப்பிட கிளம்புறேன் எடுங்க அந்த லட்டை முதல்ல.

  ReplyDelete
  Replies
  1. அட நம்ம அண்ணாச்சி !! அப்போ இதுக்கு முன்னால வந்திருதது யாரு ?...ஒரு வேளை பிரம்மையோ :))) சாப்பிடுங்க சாப்பிடுங்க அண்ணாச்சி உங்களுக்கு இல்லாததா ?..:))))) மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........