பொங்கி எழு தமிழா !
வருகின்ற துயரனைத்தும் விலகி ஓட
வறுமையிலும் ஒற்றுமையைப் பேணல் வேண்டும் !
தருமநெறி காக்கின்ற செயலைச் செய்து
தமிழர்நாம் தமிழராக வாழ்தல் வேண்டும்!
பெருமையுடன் தாய்மொழியைப் பேணல் வேண்டும்
பெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
இருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்
எம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் !
கருமமதைக் கண்ணாகக் கொள்ள வேண்டும்!
களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் !
உருகாதோர் மனமுருகச் செய்ய வேண்டும்
உரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் !
அரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்
அறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் !
விரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி
வீறுகொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும் !
நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
நாட்டமுடன் காத்துநிதம் செல்ல வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க
மனமொத்துப் பணியாற்றிச் செல்ல வேண்டும் !
அடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்
அடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்
தடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்
தரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே !
இப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.
இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும்
வெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி
வராது என்றும் உறுதி அளிக்கின்றேன் !
இப்படிக்கு
உண்மையுள்ள
அம்பாளடியாள்
நன்றி .
தாங்கள் தேர்வு செய்த படமும் சொல்லிச்சென்ற கருத்துகளும் வெகு சிறப்புங்க தோழி. தங்கள் உடல் நலனை முதலில் கவனியுங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteமுதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி தோழி !
Deleteகடமைகளைச் செயற்படுத்தப் பொங்கி எழச்சொன்னீர்கள்.
ReplyDeleteமிக மிக அருமை தோழி!
வெற்றியீட்ட வாழ்த்துக்கள்!
வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !
Deleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !
Deleteஅருமை! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் !
Delete"நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
ReplyDeleteநாட்டமுடன் காத்துநிதம் செல்ல வேண்டும்!" என்ற
கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் !
Deleteவணக்கமா, நலமா,
ReplyDeleteமடைத்திறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் ஓட்டம்,
ஆஹா அருமையான அழகான வார்த்தைக் கோர்வை,,,,,,
வாழ்த்துக்கள்,
போட்டியில் வெல்க என வாழ்த்துகிறேன்.
நான் நலமே ! மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !
Deleteநல்ல கருத்துள்ள கவி வரிகள். பாராட்டுகள் அம்பாளடியாள். போட்டியில் வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !
Deleteவணக்கம் சகோ !
ReplyDeleteஅழகான விருத்தப் பா இளையோர் கற்க வேண்டிய பாடம்
வெற்றி உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
தம +1
.....
மிக்க நன்றி சகோதரா தங்களின் வாழ்த்தினைக் கண்டு மகிழ்ந்தேன் !
Deleteமரபு கவிதை மறக்க முடியாத கவிதை ...போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா தங்களின் வாழ்த்தினைக் கண்டு மகிழ்ந்தேன் !
Deleteஅருமை.வெற்றி பெற வாழ்த்துகள்(தாத்தா என்றால் வாழ்த்து வாபஸ்)!!
ReplyDeleteஎன்னுடைய அன்புத் தாத்தா பதினாறு வயதிற்கு உட்பட்டவர் அது எல்லாருக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அதனால ஒன்றும் இல்லை :))) வாழ்த்திற்கு மிக்க நன்றி
Deleteகுட்டித் தாத்தா :))
எளிமை ! அருமை ! வாழ்த்துக்கள் !
Deleteமிக்க நன்றி சகோதரா !
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் !
அழகிய மரபுக் கவிதை சொல்லாடல் வெகு சிறப்பு உளமார்ந்த வாழத்துக்கள் வெற்றி பெற !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !
Deleteஅருமையான படைப்பு! வெற்றிபெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் தோழி!!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !
Deleteஅருமையான ஆக்கம்.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !
அம்மா தங்களை விமர்ச்சிக்க வயதில்லை இருந்தும் கவிதை மிகவும் அழகு
ReplyDeleteதாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !
செய்தி அறிந்தேன்;விரைவில் முழு நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteமிக்க நன்றி தாத்தா !
Deleteஆற்றொழுக்காய் அமைந்த உங்கள் கவிதை அருமை அருமை.
ReplyDeleteவணக்கம் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா !
Deleteபொங்கி எழுந்துமனப் பார்வை கவர்ந்துயிரில்
ReplyDeleteதங்கி இனிக்கும் தமிழமுது! - கங்குல்
கலைக்க வருகதிராய் காண்போரை வென்று
நிலைக்கட்டும் இம்மா நிலம்!
அருமையான விருத்தப்பாக்கள் பாவலரே!
தங்களின் படைப்புப் போட்டிக்குச்
சென்றுபுலம் வென்றுவரட் டும்!
நன்றி
வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !
Deleteஅருமையான முழக்கக்கவிதை.போட்டியில் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎளிமையான கரு, இனிமையான கவி.
ReplyDeleteபாராட்டுக்கள்.