9/02/2015

பாவலர் பட்டம் !

                                                                               
                                                           

                                        
                                               
நன்றியென்று நானுரைக்க நாள்முழுதும்  போதாதே !
என்றுமிதை நான்மறவேன் என்குருவே !-கன்னல்
கவிபுனையும் ஆற்றலினைக்  கற்றிடச் செய்து 
புவிபோற்றச் சேர்த்தாய் புகழ் !

எண்ணத்தில் தேன்சிந்தும் இன்றுவந்த சேய்தியினால்  
             இனிக்கும் நெஞ்சம் !
மண்மீது நான்பெற்ற மாதவத்தால் வந்தபட்டம்
             மகிழ்து  ஏற்றேன் !
கண்ணான என்குருவே காரணம்நீ  இன்றிதனைக்
            கைகள் ஏந்த!
விண்ணவரும் பூத்தூவ வீழ்கின்றேன்  பாதத்தில்
            விரைந்தே  வாழ்த்து !




அன்பு உள்ளங்களே !
வான்போற்றும் வல்லகவி பாரதி தாசனார் 
நான்மகிழத் தந்திட்டார் நற்பட்டம்  !-மீன்போல்
எனதுள்ளம் நீந்துதே! இன்றிதனைக் கண்டு 
மனதாரச் சொல்லுங்கள் வாழ்த்து !

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.

கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து, 
செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில் 
பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்  

இணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு

அன்பு உள்ளங்களே! இன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை !இத்தனைக்கும் காரணம் வலைத் தளத்தில் நாம்  பெற்ற வரம் எங்கள் பாரதி தாசன் ஐயாவும் என் வலைத்தள சொந்தங்களும் தான் !இந்த நன்றியினை ஒரு போதும் நான் மறவேன் வாழ்த்துங்கள் சொந்தங்களே தங்களின் வாழ்த்தினைப் பெற்று மேலும் நான் வளம் பெற இங்கே ..

                                  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !
                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

25 comments:

  1. ஆஹா! வலையெங்கும் பாவலர்களாக உலா வரச்செய்த ஆசானுக்கு எனது வணக்கத்தையும். அன்புத்தோழிக்கு எனது அகமகிழ்வான வாழ்த்தும். கம்பன் விழாவிற்குச் சென்று என் சார்பாக வாழ்த்தினையும் சொல்லுங்க தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  2. வாழ்த்துக்கள் அம்பாளடியாள்..!! மிக்க மகிழ்ச்சி மென்மேலும் உயர்வு பெற என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  3. வணக்கம் அன்பு உள்ளங்களே !
    என்னுடைய ஆக்கத்தினைத் தமிழ் மணத்தில் சேர்க்க இயலவில்லை தயவு செய்து இதனைத் தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்துச் செல்லுங்கள் மிக்க நன்றி ஆதரவிற்கு .

    ReplyDelete
    Replies
    1. சரி திரும்பவும் வாழ்த்திவிடுகிறேன்.
      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்! அம்பாளே மேலும் சிறந்து விளங்கிடவும் புகழ் ஓங்கிடவும் மனமார வாழ்த்துகிறேன்.! நன்றி!

      Delete
  4. உளம் நிறைத்துச் சொல்வேன்!
    உரக்கச் சொல்வேன் தோழி!
    களம்பல கண்டு பலபல பட்டங்கள் பெற்றோங்கி
    வாழ்வாங்கு வாழ்க! வாழ்க!

    என்றென்றும் உங்கள் உயர்வு கண்டு மகிழ்கின்றேன்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பட்டம் பெறுவதறிந்து மகிழ்ச்சி. தங்களின் எழுத்தும், ஈடுபாடும், பழகும் பாங்கும் தங்களை இந்த நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. மென்மேலும் வளரவும், சாதனை புரியவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மிகவும் மகிழ்ச்சி..

    மேலும் பல விருதுகளைப் பெறுதற்கு வாழ்த்துகின்றேன்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. www.youtube.com/watch?v=fJ6CJp2Zrf0கு என்றால் இருட்டு.
    ரு என்றால் அதைப் போக்குபவர்.

    பாரதிதாசனைப் போன்ற ஒரு புலவரைத் தமது குருவாக, ஆசானாகப் பெறுவதே பெரும் பேறு ஆகும்.



    குருவுக்கு நன்றி எனச் சொல்லி, தங்களது காணிக்கையாக இந்த பாடலை இயற்றிய தன்மைக்கு எனது உளமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.

    இதோ உங்கள் பாடல் இங்கு ஒலிக்கிறது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  8. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உற்சாகமாகச் சிறகடித்துப் பறக்கவும்

    ReplyDelete
  9. மகிழ்ச்சி அம்மா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. மனம் நிறைந்த அன்புடன் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  11. தகுதியானவருக்கு
    தகுதி நிறைந்தவரால்
    வழங்கப் பெறும்
    சீர்மிகு பட்டம்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  12. வணக்கம் சகோ !

    வாழ்த்துக்கள் தாங்கள் பாவலர் பட்டம் பெறுவதை இட்டு மிக மகிழ்கின்றேன் ! மென்மேலும் புகழ்பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    தம +!

    ReplyDelete

  13. வணக்கம்!

    பொங்கும் புகழ்த்தமிழை எங்கும் பரப்புகின்ற
    உங்கள் உளங்கண்[டு] உவகின்றோம்! - மங்கை..நீ
    வார்க்கும் கவியனைத்தும் வண்ணத் தமிழுக்குச்
    சேர்க்கும் உரத்தைச் செழித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  14. மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்கள் அம்மா!

    ReplyDelete
  15. ஆஹா! ஆஹா! நீங்கள், இளமதி, சசி என்று என் அன்புத் தோழிகளுக்குப் பாவலர் பட்டம்! அத்தோடு சகோ சீராளனுக்கும்! மிகுந்த மகிழ்ச்சியுடன் மனமார்ந்த வாழ்த்துகள் தோழி! இன்னும் பல பட்டங்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  16. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்பாளடியாள்!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் இன்னும் பல பட்டங்கள் தேடி வரட்டும் கவிதாயினி அம்பாளடியாள்!

    ReplyDelete
  18. பாவலர் அம்பாளடியாள்! அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அம்பாளடியாள்..!! மிக்க மகிழ்ச்சி மென்மேலும் உயர்வு பெற என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வாழ்த்துகள் சகோதரி! மனம் கனிந்த வாழ்த்துகள்! மேன்மேலும் விருதுகள் பெறவும்!!!

    ReplyDelete
  22. வணக்கம் !
    வாழ்த்துச் சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........