9/21/2015

மரண ஓலம் கேட்கிறதே !!


மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......

                                       (மரண ஓலம் கேட்கிறது )

குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....

மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......

                                        (மரண ஓலம் கேட்கிறது )

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....

                                       (மரண ஓலம் கேட்கிறது )

மதம் என்ன?.. இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன?..
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த தேசத்தில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....


                                              (மரண ஓலம் கேட்கிறதே....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5 comments:

  1. இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
    இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

    ,இதயம் துடிக்கத்தான் செய்கிறது சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
  2. ஆறுதல் படுத்த முடியாத செய்திகள்!
    உள்ளத்தை உலுக்கும் கவிதை தோழி!

    விடியல் கிட்டும்! காத்திருப்போம்!

    ReplyDelete
  3. வேதனைகள் ஓயவேண்டும்! நல்ல விடிவொன்று பிறக்கவேண்டும்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. என்னதச்சொல்ல ஓலம் தனித்தொடர் போல இவ்வுலகில்! கவிதை அருமை!

    ReplyDelete
  5. இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
    இருதயம் துடிக்க வேண்டுமடா ...........// உலகத்தின் இருதயமே துடித்தாலும் துடிக்க வேண்டியவரின் இருதயம் துடிக்க வேண்டுமே! துடித்து வேதனைகள் எல்லாம் அகன்றால் விடிவெள்ளி தோன்றிடாதோ....

    பிரார்த்தனைகள்....வாழ்த்துகள்...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........