9/07/2015

ஒன்றில் நான்கு!



                                                                 
வண்ணக் கவிகள் வழங்கு!

ஒன்றில் நான்கு!


பஃறொடை வெண்பா!

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத்  தமிழணங்கே! ஈடில்லாப் பேரழகே !
துன்பம் துடைத்துத் துணிவூட்டி- என்றென்றும்
வண்ணக் கவிகள் வழங்கு !

நேரிசை வெண்பா   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத் தமிழணங்கே !ஈடிலாப் பேரழகே !
வண்ணக் கவிகள் வழங்கு !

சிந்தியல் நேரிசை வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
வண்ணக் கவிகள் வழங்கு !

குறள் வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
வண்ணக் கவிகள் வழங்கு !

இலக்கணக் குறிப்பு !  
பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க 
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை  வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !

                                                                             

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. அருமை சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. வண்ணக் கவிபாடி வந்தாய் அழகாக!
    எண்ணம் நிறைந்தாய் இனித்து!

    ஒன்றில் நான்கென வந்த வெண்பாக்கள் இனிமையில்
    எனை மறந்தேன்! மிக அருமை தோழி!
    வாழ்த்துக்கள்!

    த ம 2

    ReplyDelete
  3. வண்ணக் கவியெல்லாம் வாய்க்கிறதேம்மா எளிதாய். மேலும் வளமாக வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன் நன்றி தோழி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  4. மிகவும் ரசித்தேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஆசிரியர் ஆகிவிட்டீங்க கவிதையில்))) வெண்பா அழகை ரசித்தேன்.

    ReplyDelete

  6. வணக்கம் சகோ !

    ஒன்றிலே நான்கும் ஒருங்கக் கவிவடிக்க
    என்நெஞ்சக் கூடும் எழிலாகும் - அன்புறவே
    கன்னல் கவிதாசர் காட்டுகின்ற நல்வழியில்
    பொன்னுதிரும் பூப்பொழியும் பொய்கை மணம்பரப்பும்
    மன்றமே ஆடும் மகிழ்ந்து !

    அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் !
    தம கூடுதல் ஒருவாக்கு !

    ReplyDelete
  7. மனம்குளிர்ந்தே வண்ணப்பா தந்துவிட்டாள் இங்கு
    மனம்மகிழ்ந்தே சொல்கிறோம் வாழ்த்து

    அருமை தோழி
    த.ம 6

    ReplyDelete
  8. அழகான கவியை ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  9. அடடா! 2நாள் விடுப்பில் இங்கு வர தாமதமாகிவிட்டது மன்னிக்கவும் தோழி. ஒன்றில் நான்கு ஒப்பிலாச் சுவையைத்தந்தது.
    என்றும் இனிய பாக்கள் புனைய என் வாழ்த்துகளும் தோழி.

    ReplyDelete

  10. வணக்கம்!

    எம்மின் மனமே எழு!

    பஃறொடை வெண்பா!

    அம்பாள் அளித்த அருந்தமிழ்ப் பாப்படிக்க
    எம்மான் உலகில் எழக்கூடும்! - செம்மையுற
    இம்மா நிலத்தில் இனியதமிழ்ச் சீர்காக்க!
    செம்மாந்து நிற்க! சிறப்பேற்க! - தும்பியென
    எம்மின் மனமே எழு!

    நேரிசை வெண்பா

    அம்பாள் அளித்த அருந்தமிழ்ப் பாப்படிக்க
    எம்மான் உலகில் எழக்கூடும்! - செம்மையுற
    இம்மா நிலத்தில் இனியதமிழ்ச் சீர்காக்க!
    எம்மின் மனமே எழு!

    சிந்தியல் நேரிசை வெண்பா

    அம்பாள் அளித்த அருந்தமிழ்ப் பாப்படிக்க
    எம்மான் உலகில் எழக்கூடும்! - செம்மையுற
    எம்மின் மனமே எழு!

    குறள் வெண்பா

    அம்பாள் அளித்த அருந்தமிழ்ப் பாப்படிக்க
    எம்மின் மனமே எழு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  11. அருமை அருமை சகோதரி! மாணவியர் அனைவரும் வீட்டுப்பாடம் எழுதியாயிற்று போலும்..ஹஹஹ் நல்ல மாணவியர்...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........