10/06/2011

வடபழனி அம்மன் ஆலயம் ...........

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
மனம் தொழுதே தினம் தொழுதே....
அவள் மகிமைகளைச் சொல்லிடவா...
இறைவனில்லை இறைவனில்லை 
என்றவரும் தொழுதனரே ...............

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

சிலையென இருப்பவள் நிஜ அம்மனென்றோ..
எம் சிந்தையை மயக்கிடும் செல்வியன்றோ 
அழுபவர் விழிகளைத் துடைக்கின்றாள்
நல் ஆறுதல் தந்து அணைக்கின்றாள்.....

அடியவர் கூட்டம் மனம் மகிழ்ந்து 
ஆடிடப் பாடிட நான் கண்டேன் 
சிறியவர் பெரியவர் முதற்கொண்டு 
தேவியின் பாதம் தொக்கண்டேன் 

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

என் கனவினில் நினைவினில் தாயவளின் 
கரம்தொடும் உணர்வினை நான் கண்டேன் 
ஒருமுறை கண்ட விழியிரண்டும் 
பலமுறை காணத் துடிப்பதென்ன ................

சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று 
சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....
அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில் 
ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

41 comments:

 1. வணக்கம் மேடம்! கும்புடுறேனுங்க! வடபழனி அம்மன் பற்றி அருமையான பாடல் எழுதியிருக்கீங்க! மிகவும் நல்லா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. சிலையென இருப்பவள் நிஜ அம்மனென்றோ..
  எம் சிந்தையை மயக்கிடும் செல்வியன்றோ
  அழுபவர் விழிகளைத் துடைக்கின்றாள்
  நல் ஆறுதல் தந்து அணைக்கின்றாள்.....///////

  அருமையான வரிகள்!

  ReplyDelete
 3. இந்த ஃபோட்டோவில் இருப்பதுதான் நீங்களா? நான் நினைத்தேன் நீங்கள் மிகவும் பெரிய ஆளாக இருப்பீர்கள் என்று! முகத்தில் ஒரு ஞான ஒளியும், பிரகாசமும் வீசுது!

  மனதில் உள்ள இறைபக்தி முகத்தில் தேஜஸ்ஸாக தெரியுது! நிஜமாத்தான் சொல்கிறேன்!

  ReplyDelete
 4. வடபழனி அம்மன் பற்றிய இந்த பாடல் அருமை. இன்னும் அம்மனைப் பார்க்கத் தான் நேரம் வரவில்லை....

  ReplyDelete
 5. ஆஹா! அருமை, அற்புதமானக் கவிதை..
  மிகவும் அருமையாக உள்ளது..
  சக்தி அவளின் சித்தியால் புத்தியில் விளைந்த முத்துக்களாய் அற்புத உணர்வுகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன என் சகோதிரி.
  ....... இப்படி எழுதிய இடங்களில் ! இப்படி ஆச்சரியக் குறியை போட்டிருந்தால் இன்னும் ஆச்சரியத்தைக் கூட்டும் என்பதில் ஆச்சரியமும் இல்லை.
  "இறைவனில்லை, இறைவனில்லை என்றவரும் தொழுதனரே!" ஆம், இல்லை என்றாலும் உண்டு என்றாலும் அதுவே... அருவமாகவும் உருவமாகவும் இருப்பவள் தானே அந்த சக்தி... அம்மாவின் குரலுக்கு மதிப்பளிக்காது கடற்கரைக்கு தனியாக முந்தியோடும் குழந்தைகள் அவர்கள்... ஒரு சிறிய ஆள் உயர அலை வந்தால் போதும் அலறி அடித்துக் கொண்டு வந்து அவளின் முன்னே நிற்பார்கள்...

  "கடவுள் இல்லை என்பது மனதிற்குள் புகுந்த மாயை" என்பான் மகாகவி சுப்ரமணிய பாரதி.

  அற்புதமான பாடல் அன்னையின் கடாட்சம் அன்றி வேறு யாது!

  நன்றிகள் சகோதிரி.

  அன்புடன்,
  தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.
  http://tamizhvirumbi.blogspot.com/

  ReplyDelete
 6. வடபழனி முருகன் பற்றி அருமையான கவிதை மேடம்.ஜடியா மணி சொன்ன மாதிரி உங்கள் முகத்திலும் இறைபக்தி தெரிகின்றது.

  ReplyDelete
 7. வடபழனி அம்மன் பற்றி அழகிய கவிதை அருமை

  தமிழ் மணம் நான்கு

  ReplyDelete
 8. வடபழனியில் குறிப்பாக எந்த கோவில் என்று குறிப்பிடவில்லையே சகோ!

  ReplyDelete
 9. அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில்
  ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......//

  அம்மன் மீதுள்ள பக்தி மிளிரும் அற்புத வரிகள்

  ReplyDelete
 10. அம்மன் மீது தீராத பக்தி கொண்டுள்ள தங்களுக்கு எப்பொழுதும் அம்மன் அருள் கிடைத்துக்கொண்டே இருக்கட்டும்.... வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 11. என்ன திடிரென்று அம்பாளடியாள் தரிசனம் ஹா ஹா... வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 12. நல்ல கவிதை... கூடவே அம்பாள் தரிசனம்...

  ReplyDelete
 13. இன்னைக்கு இதுவரை எல்லோருக்கும் நான் போட்ட தமிழ்மணம் ஒட்டு ஏழாவதாவே இருக்கே...

  ReplyDelete
 14. உங்களை முழுமையாய் ஆட்கொண்ட அன்னை.

  ReplyDelete
 15. பக்திப் பாமாலை மனதை கொள்ளை கொள்ளுகிறது சகோதரி.

  ReplyDelete
 16. திருமுகத்தில் பூரணநிலவு
  கண்ட உங்கள் மனம்
  சௌபாக்கியத்தின் அடைக்கலம் ஆகட்டும்.

  ReplyDelete
 17. கீழே இருப்பது உங்கள் போட்டோவா...?? சூப்பரா இருக்கே!!!!

  ReplyDelete
 18. வணக்கமம்மா..!! அம்மன் கவிதைக்கு வாழ்த்துக்கள்... அண்மையில் இந்தியா சென்று வந்தீர்களா..??


  என்ன அம்பாள் போட்டோவெல்லாம் போட்டுட்டீங்க!!!
  சிறுமியின் படத்தை மாற்றும்போதே. எனக்கு தெரியும் பூணை வெளிவந்துவிடும்ன்னு.!!  அந்த சின்னப்பெண் உங்கள் மகளா?அழகாய் இருக்கிறாள்..!! நீங்கள் பக்தி மயமா காட்சியளிக்கிறீர்கள்...!!! நானும் ஏதோ அம்பாள் என்னுடய வயசுக்காரராக இருப்பாளோன்னு பார்த்து ஏமாந்து போனேன்..!!ஹி ஹி

   நான் மற்றவர்கள் போலல்லாது ஆல் ரெடி ஒரியினல் போட்டோவோடுதான் இருக்கிறேன்!!!!!!))) ஹி ஹி

  ReplyDelete
 19. சகோ அழகான பாடலுடன் பகிர்ந்த விதம் நல்லா இருக்கு நன்றி!

  ReplyDelete
 20. அம்பாளடியாள் நல்ல கவிதை நானும் வடபழனி முருகனைப்பற்றித்தேன் கேள்வி பட்டிருக்கேன் இது எந்த அம்மன் கோவில் ?

  ReplyDelete
 21. வடபழனி அம்மனின் அருளால் இன்னைக்கு எங்களுக்கு ஒரு அழகிய பாடல்
  tm 13

  ReplyDelete
 22. அம்மன் மீதான கவிதை சிறப்பானது !
  நீங்கள் கூறும் அம்மன் எனக்கும் குழப்பமாக இருக்கு வடபழனியில் முருகனை தரிசித்தேன் அங்கே அருகில் ஏதாவது அம்மன் இருப்பது நான் அறியவில்லை தகவல் தந்தால் மறுமுறை போகும் போது தரிசிக்கலாமே!
   போட்டோ மிகவும் பக்தி ஞாணம் இருக்கும் ஒருவரை சுட்டி நிற்கின்றது நிச்சயம் நீங்கள் இல்லைத் தானே!?

  ReplyDelete
 23. கவிதை அருமை.ஃபோட்டோவில் நீங்களா?

  ReplyDelete
 24. //சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று
  சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....//

  ஆம ந்ம் எல்லோரையும் வழி நடத்துவது தெய்வம்தானே?
  அருமையான பாடல் அம்பாள்.
  வடபழனி முருகன் கோவிலுக்கு போகவில்லையா?

  ReplyDelete
 25. வணக்கமம்மா..!! அம்மன் கவிதைக்கு வாழ்த்துக்கள்... அண்மையில் இந்தியா சென்று வந்தீர்களா..??


  என்ன அம்பாள் போட்டோவெல்லாம் போட்டுட்டீங்க!!!
  சிறுமியின் படத்தை மாற்றும்போதே. எனக்கு தெரியும் பூணை வெளிவந்துவிடும்ன்னு.!! அந்த சின்னப்பெண் உங்கள் மகளா?அழகாய் இருக்கிறாள்..!! நீங்கள் பக்தி மயமா காட்சியளிக்கிறீர்கள்...!!! நானும் ஏதோ அம்பாள் என்னுடய வயசுக்காரராக இருப்பாளோன்னு பார்த்து ஏமாந்து போனேன்..!!ஹி ஹி

  நான் மற்றவர்கள் போலல்லாது ஆல் ரெடி ஒரியினல் போட்டோவோடுதான் இருக்கிறேன்!!!!!!))) ஹி ஹி //////////

  என்னது இது உங்களது ஒரிஜினல் ஃபோட்டோவா காட்டான் சார்????? ம்...... டிசம்பர் 31 ம் தேதி, இரவு, இதே கோலத்துடன் ஈஃபில் டவர் பக்கம் வரமுடியுமா???? ஹி ஹி ஹி !!!! 2012 ஐ வர வேற்க!

  ReplyDelete
 26. வணக்கம் மணிசார் நீங்க சொன்னமாதிரியே 2012ஐ வரவேற்க ஈஃபில் டவருக்கு இதே கோலத்தோட வர்ரேன்யா!!!!???? ஆனா மாட்டு வண்டிய விட்டு கீழ இறங்க மாட்டேன்யா ஓக்கேவா!!!

  சரி சரி விடய்யா இது அம்பாளின் கடை பெண்கள் நடமாட்டம் கூடின இடம் நாம வெளியாள இதைப்பற்றி கதைப்போம்...!!!!)) ஹி ஹி

  ReplyDelete
 27. //சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று
  சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....
  அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில்
  ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......//

  அமாவசையிலேயே பௌர்ணமிநிலவை தோன்றச்செய்தவளாயிற்றே....

  வடபழனி அம்மனின் பெயரைக்குறிப்பிட்டிருந்தால் அடுடத்தமுறை அங்குசெல்லும்போது பார்க்க வசதியாயிருந்திருக்கும். நல்ல இனிமையான பாடல் சந்தத்தோடு..

  ReplyDelete
 28. அருமையான அம்மன் பாடல்
  எந்தப் பொருள் குறித்தும் மிக அழகாக
  எழுதும் ஆற்றல் குறித்து வியப்பாயிருக்கிறது
  இது கூட வட பழனி அம்மன் அருளாய் இருக்கலாம்
  வாழ்த்துக்கள்
  த,ம 16

  ReplyDelete
 29. அருமையான பாடல் .வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. அகம் முணர்ந்த
  இறை தரிசனத்தில்
  உதிர்ந்த பக்தி வரிகள்

  மனிதனுக்கான
  இறைவனின் தரிசனமும்
  இறைவனுக்கான
  மனிதர்களின் வணக்கங்களும்

  இறைவன் மனிதர்கள் இடையிலான உறவையும்
  உலக வாழ்வையும் மேன்படுத்துகிறது

  உங்கள் பக்திப் பாடல் அருமை தோழி

  ReplyDelete
 31. அருமையான பாடல்
  அழகா சொற்கள்
  வாழ்த்துகள் மகளே உன்படம் கண்டேன்
  கவிதையில் உதித்து வரும்
  சொற்களைக் கண்டு சற்று வயதாகி இருக்குமோ
  என்று எண்ணியதுண்டு
  முகத்தில் அம்பாளின் அருள் ஒளிர்கிறது
  நீ,நீண்ட நாள் வாழ வேங்கடவன் அருள் புரிவான்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 32. //சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று
  சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....
  அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில்
  ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......//

  நன்றி சகோ நல்லதோர் பகிர்விற்க்கு

  நன்றியுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 33. எங்கள் குடும்பமும் அம்பாள் பக்தர்கள் நிரம்பியது. உங்கள் பாடலுக்கு டியூன் உள்ளதா என்று விசார்க்கிறார்கள். அருமையான வரிகள். உங்கள் சேவை தொடர எங்கள் வல்வை முத்துமாரி அம்மன் அருள்புரிவாளாக...

  ReplyDelete
 34. சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று
  சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....
  அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில்
  ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......

  அற்புதச் சொற்களால் நிரைந்தது
  அம்பாளின் கருணை -வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. அட அம்பாளடியாள் அம்பாள் தரிசனும் கிடைத்தது...
  அம்பாளடியாளின் தரிசனமும் கிடைத்தது....

  வடபழனிக்கு வருடாவருடம் போய் அர்ச்சனை செய்துவிட்டு வருவதுண்டு... ஆனா முருகனுக்கு தான் செய்திருக்கிறோம். அம்பாளையும் கண்டுக்கோங்கன்னு க்யூட்டா சொல்ல வைத்த அழகு வரிகள் அம்பாளடியாள்...

  அம்மனின் திருமுகத்தில் தெரியும் கம்பீர ஒளியும்
  புன்னகை கீற்றும் நானிருக்க பயமேன் என்ற தைரியமும்
  இன்றுவரை வழி நடத்தி வெற்றியை தந்ததும்

  பக்தி பரவசத்தில் வரங்களை அள்ளித்தரும் தாயவள் என்ற உருக்கமான உங்கள்கவிதை வரிகள் மிக மிக அருமை.. பாடலாய் பாடவைத்த பெருமையும் உம்மையே சேரும்பா....

  அழகு அழகு அம்பாளின் திருமுகம் அழகு....
  அடக்கமான அழகு அம்பாளடியாளின் அமைதி தவழும் முகமும் அகமும் அழகு....

  இறைவனின் அருளால் என்றும் நலமுடன் வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் அம்பாளடியாள்...

  ReplyDelete
 36. ''..ஒருமுறைதான் சென்றேன் அங்கே
  என் உணர்வுகளை வென்றாள் அம்மை....''
  நல் வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www,kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 37. அம்மனின் அருள் என்றும் உங்கள் நிறைந்திருக்க வேண்டுகிறேன்...

  உணர்வு பூர்வமான பக்திப்பாடலாய் வரிகளும் செவிகளுக்கு உணவாய்...

  ReplyDelete
 38. ஓ! வந்தேன்! அதே பதிவு நலமா? மீண்டம் வருகிறேன் வணக்கம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........