மீனாட்சி அருளாலே
அந்தக் காமாட்சி அருளாலே
நான் பாட்டுப் பாடுகின்றேன்
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
வாராயோ மகமாயி ...........
வந்து குறை தீராயோ மகமாயி
நாம் ஏறாத மலையில்லை
இனி எங்களுக்கோர் துணை இல்லை ...
மீனாட்சி அருளாலே
அந்தக் காமாட்சி அருளாலே
நான் பாட்டுப் பாடுகின்றேன்
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
ஆறோடும் வீதி எங்கும்
அடி ஆத்தாடி உன் முகத்தை
நாள்தோறும் தேடுகின்றோம்
நமக்கொரு நல்ல வழி காட்டாயோ .....
பௌர்ணமி தினத்தின்று உனக்கொரு
பட்டுடுத்திப் பார்க்கவென்று
பச்சை இலைபோல் மனமும் இங்கே
உன் பக்க துணை தேடுதடி .............
நட்ட நடு ராத்திரியில்
நல்ல சோதி ஆனவளே............
எட்டி அடி வைத்து இங்கே
எழுந்தருளி வாருமம்மா ...........
மீனாட்சி அருளாலே
அந்தக் காமாட்சி அருளாலே
நான் பாட்டுப் பாடுகின்றேன்
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
மீனாட்சி அருளாலே பாடல் அருமை...
ReplyDeleteபாடல் நல்லா இருக்குங்க சகோ!
ReplyDeleteமீனாட்சி பாடல் அருமை
ReplyDeleteதமிழ் மணம் மூன்று
நல்ல பாடல்... அருமையான பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றாக உள்ளது கவிதை.
ReplyDeleteபௌர்ணமி தினத்தின்று உனக்கொரு
ReplyDeleteபட்டுடுத்திப் பார்க்கவென்று
பச்சை இலைபோல் மனமும் இங்கே
உன் பக்க துணை தேடுதடி .............
நல்ல வரிகள்.
பொருள் வேட்டி அல்ல அம்மன்
ReplyDeleteஅருள் வேண்டி வந்த பாடல்
நன்று!
புலவர் சா இராமாநுசம்
அருமை!சகோ!
ReplyDeleteஅசத்தலான கவிதை சகோதரி
ReplyDeleteஅருமையான பாடல் சகோதரி
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
சந்தம் கொண்டு அம்மன் அருளால் பாடல் பாடும் கவிதாயினியின் உணர்வுகளைச் சொல்லும் அருமையான கவிதை
ReplyDeleteத.ம.10
ReplyDeleteமீனாட்சி அருளால்,கவி மழை பொழியுங்கள்!
அருமையான, இதயம் தொட்ட வரிகள். மீனாட்சியின் அருள் உங்களுக்குக் குறைவின்றிக் கிட்டும்.
ReplyDeleteபக்திக்கவிதை
ReplyDeleteஅன்புநிறை சகோதரி ...
ReplyDeleteகடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...
மனம் நிறையும் மீனாட்சி அம்மை பாடல்
குளிரச் செய்தது.
நல்ல பக்திப்பாடல்.
ReplyDelete//மீனாட்சி அருளாலே
அந்தக் காமாட்சி அருளாலே
நான் பாட்டுப் பாடுகின்றேன்
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....//
வாழ்த்துக்கள்.
வணக்கமம்மா..
ReplyDeleteநம்ம அம்பாளுக்கு பக்தி பாடல்ன்னா சொல்லவும் வேண்டுமா..? பாடல் அருமையம்மா வாழ்த்துக்கள்..
பாட்டு நல்லாத்தான் இருக்கு...!!
ReplyDeleteமீனாட்சி அருளாலே
ReplyDeleteஅந்தக் காமாட்சி அருளாலே
நான் பாட்டுப் பாடுகின்றேன்
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
பாடல் அருமை வாழ்த்துக்கள்..
மதுரை அரசாளும் மீனாட்சி!மிக அருமையான பதிவு.
ReplyDeleteபாராட்டுகள்.
எங்கள் ஊர் மீனாட்சி பாடல் அருமை சகோ....
ReplyDeleteமீனாட்சி அருள் புரிவாராக....
ReplyDeleteதேரோடும் வீதியெங்கும் தேடுகின்றோம் -மஞ்ச
ReplyDeleteநீரோடு வேப்பில்லையும் சூடிடவே!
பக்தி ஆறோடும் பாதைதோறும் பாடுகிறோம்
பகவதி பாதம் பணிந்திடவே!
நடுஇரவிலும் நாயகி அவளை நண்ணியகவி
நன்று! நன்று!! நன்று!!!
அருமை..
ReplyDeleteகும்மி பாடல்களை ஒத்த சந்த நயம். நல்ல பாடல். அருமை
ReplyDelete