11/20/2012

ரோஜா மலரே ரோஜா மலரே.....ரோஜா மலரே ரோஜா மலரே
முள்ளில் ஏனடி விழுந்தாய் நீ...
உடல் கீறிக் கிழித்து பாயும் இரத்த
வெள்ளம் கண்டால்  தாங்காதே !....

கோலம் போடும் கண்ணே  உந்தன்
மனக் கோட்டை சிதைந்தது எதனாலே
அந்த ஆளும்கட்சி தூளாய்ப் போகும்
அடி அடிமைப் பெண்ணே  கலங்காதே !:......
                                       (ரோஜா மலரே ரோஜா.....)

வீரத்தாயின் புதல்வி அம்மா
உன்னை உலகம் அறியாது உன்னை
அறியும் காலம் வந்தால் போதும்
இங்கு  அரக்கர் மனமும் தாங்காது !.......

நீலக் கடல் என சொல்வார் உலகில்
நீருக்கிங்கே நிறம் ஏது இதைப்
பாளாய்ப் போன மனம் உணர்ந்தாலும்
சொல்லும் பழக்கம்  என்றும்  மாறாது !...

வீணாய்ப் போகும் மனிதர் பேச்சு
அவர்கள் விருப்பம் போல  இருக்கட்டும்
பெண்ணே உந்தன் உள்ளத்தழகு
அது என்றும் உயர்ந்தால்  போதுமடி ...

கோளைக்கில்லை பெருமை இங்கே
பொறுமைதானடி வெல்லும் என்று
உன் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்த
ஒற்றை நாணயம் அது பதில் சொல்லும்!....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5 comments:

 1. அழகான கவிதை வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. கருத்துள்ள பாட்டு...

  வாழ்த்துக்கள்...
  tm1

  ReplyDelete
 3. நீருக்கேது நிறம் அழகா சொன்னீங்க.
  வீனர் பேச்சுக்கு செவிமடுக்காதிருக்க வேண்டும்.

  சிறப்பான தாலாட்டு சகோ.

  ReplyDelete
 4. வாடிய கவிதை...!
  வாட்டியக் கவிதை...

  ReplyDelete
 5. கருத்துள்ள அழகான பாடல்... தொடருங்கள்...

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........