ஈழத் தாயின் மடிமீது
காரிருளைப் போக்க வந்துதித்த
கார்த்திகைத் தீபங்கள் கண்முன்னே
காட்சி தரும் இந்நாள் எமக்கு பொன்நாளே !...
வானம் கண்ணீர் மழை தூவ
இவ் வையகம் போற்றும் போர் வீரர்
பாதம் தொட்டு வணங்கிட இன்றே
படை திரண்டு வாரீர் கடல் போல......
ஏழைகள் எங்கள் வாழ்க்கை என்றும்
இருளில் கிடக்கும் நிலை கண்டு
எந்நாளும் துடித்த யீவன்களை
இந்நாளில்க் காண வாரீர் கடல் போல.....
பாழும் மனதில் பெராசையதால்
படு பாவம் செய்த கயவர்களை
எந்நாளும் அழித்து ஒழித்திடவே
எமக்கெனப் பிறந்த போர் வீர்கள்!.....
இவர்கள் தாகம் என்ன தாகம் இது !!!!.........
என்றும் தணியாத சுதந்திர தாகம்
உடல் வீழும் வரைக்கும் தளராததால் தம்
உடலையும் விதையாய் வீழ்த்திச் சென்றனரே!!!!....
போரினில் சிறந்த போர் வீரர்கள்
இப் புவியினில் எவரெனக் கேட்டாலிங்கே
நாளை இந்த உலகம் சொல்லும்
நம்மவர் பெயர்கள் அல்லால் வேறேது !!!!....
தோழில் சுமைகள் தாங்கியபடியே
துரோகிகள் வரவை எதிர்த்து நின்று அன்று
காவல் காத்த தெய்வங்கள் இவர்களைக்
காணக் கடல்போல் திரண்டு வாரீர் ..............:(
எம் மானம் பெரிதென நினைத்தவர்கள்
தம் மனதில் துயரை வடித்தவர்கள்
ஈழத் தாய் எம் தாய் ஈன்றெடுத்த
இனிய புதல்வர்களைக் காண வாரீர்.....!!!!
ஒரு போர் வீரனின் தியாகமே இந்த உலகத்தில் மகத்தானது ! இந்தக் கவிதையைப் படிக்கும் போது எழுந்து நின்று அந்தப் போர் வீரர்களுக்காக வணக்கம் வைக்கத் தோன்றுகிறது ! அருமை !
ReplyDeleteஅவர்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏது...? ஒவ்வொரு வரியும் சிறப்பு...
ReplyDeleteநன்றி...
tm1