11/26/2012

துயிலும் இல்லம் நோக்கி


துயர் படிந்த பாதை எங்கும் மெழுகானார்!
உள்ளத் தூய்மையினால் எமக்கிங்கே உயிரானார்!
பகைவருக்கும்   பணியாத ஒளியானார்!
எம் பாசம் மிகு மாவீரத் திலகங்கள்!


ஒரு கொடியில் பூத்த மலர் மணம் மாறுமா!
ஓங்கு தமிழ்க் குலத்தினது மொழி மாறுமா!
வறுமையிலும் மாறாத பண்பு மாறுமா!
எம்மை மாற்ற எண்ணும் எண்ணம் அது நிறைவேறுமா!

நடந்து வந்த பாதை அதை நினைத்துப் பாரடா!
நம்மவரின் சடலம் இன்றி வேறு ஏதடா!
எரித்த உடல் சாம்பலாகி வானில் பறக்குதே!- இன்னும்
எரியும் உடல் இங்கிருந்து கண்ணீர் வடிக்குதே!

சிலர் நடந்த கதை முடிந்ததென்று பின்னே செல்கிறார்!
நரிகளிடம் கூலி வாங்கி வயிறை வளர்க்கிறார்!
தமிழனது உள்ளமதை வதை வதைக்கிறார் பின்
தரம் இழந்த பின்னாலும்  தமிழன் என்கிறார்!

பரந்த கடல் வெளி எங்கும் பார்த்து நிக்குறார்
பாசம் மிகு காவலராய் எங்கள் மாவீரர்! - அவர்கள் 
இழந்த இரத்தம் உறைவதற்க்குள் இந்த ஆட்டமா!
எம் இனத்தவனே உனக்கு இது நீதியாகுமா!

தவழ்ந்த தரை மறந்து நீயும் தாவிக் குதிக்கிறாய்!
ஏன் தமிழினத்தின் பெயர் கெடுக்க மேலும் அலைகிறாய்!
விரைந்து எப்போ உன் கடனைத் தீர்க்கப் போகிறாய்!
என்றும் விடியலுக்காய் வீழ்ந்தவரை வணங்கிச் செல்லடா.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

  1. வீரத்தை பறைசாற்றும் வரிகள்... அருமை...

    ReplyDelete

  2. கண்ணீரை மையாக்கி எழுதிய கவிதை ! நெஞ்சை வாட்டும்!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........