1/16/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து மலர்கவே

               
                          

எந்தமிழ் ஈழத்தார் ஏந்தி வளர்க்கின்ற 
செந்தமிழ்ச் சோலை செழிப்புறுக !-சிந்தையிலே 
மண்ணின் மணம்கமழ்க !மார்பில் மறங்கமழ்க !
தொண்டில் சுடர்க தொடர்ந்து !

ஈழம் என்றால் வீரமென 
    இந்த உலகம் உணர்ந்ததுவே !
வேழம் போன்றே அஞ்சாத 
   வேங்கை நம்மின் அடையாளம் !
ஆழம் அகலம் நன்காய்ந்தே 
   அமைப்போம் பாலம் இனி ..நம்முன் 
ஊழும் என்ன எதிர்கின்ற 
   உலகும் என்ன ?..இணைந்திடுவோம் !

சங்கே கொண்டு முழங்கிடுவோம் 
  தலைவன் நெறியை உரைத்திடுவோம் !
எங்கே இருந்த பொழுதினிலும் 
   இன்பத் தமிழை வளர்த்திடுவோம் !
அங்கே நம்மின் சொந்தங்கள் 
   அடைந்த துயரைத் துடைத்திடுவோம் !
இங்கே இயங்கும் செந்தமிழின் 
    சோலை செழிக்க உழைத்திடுவோம் !

தேனின் இனிய செந்தமிழைத்  
  திசைகள் எட்டும் தாங்கட்டும்!
வானின் விளிம்பைத் தொட்டுவரும் 
   வன்மை நெஞ்சுள் ஓங்கட்டும் !
ஊனில் உயிரில் இனப்பற்றே 
    ஊறி நன்றே  தேங்கட்டும் ! 
கானின் மணமாய் நம்வாழ்வு 
    கமழ இணைந்து செயற்படுவோம் !

நம்மால் இயன்ற உதவிகளை 
    நாட்டுக்கு அளித்தல் முதற்கடமை !
செம்பால் நிகர்த்த செந்தமிழின் 
    செம்மை காத்தல் நம்முடமை !
அம்பாய் விரைந்து பணியாற்றும் 
     ஆற்றல் தரித்தால் வரும்பெருமை !
அம்பாள் அடியாள் அனைவரையும் 
     அன்பால் வணங்கி வாழ்த்துகிறேன் !

                                

                                              வாழ்க தமிழ் !வளர்க தம் பணி !
                                                                             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

 1. அருமை சகோ த ம1

  ReplyDelete
 2. வணக்கம்
  அம்மா
  இனியமையாக கவிபாடிய விதம் கண்டு மகிழ்ந்தேன் நிகழ்வு சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 3. வணக்கம்
  த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 4. நம்மால் இயன்ற உதவிகளை
  நாட்டுக்கு அளித்தல் முதற்கடமை !
  உண்மை அருமை
  கடமையாற்றிடுவோம் சகோதரியாரே

  ReplyDelete
 5. விழா சிறக்க எமது வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. அற்புதம்
  கவி மழையில் சொட்டச் சொட்ட நனைந்தேன்
  ஒவ்வொரு வரியையும் இரசித்து இரசித்து மகிழ்ந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நம்மால் இயன்ற உதவிகளை
  நாட்டுக்கு அளித்தல் முதற்கடமை !
  செம்பால் நிகர்த்த செந்தமிழின்
  செம்மை காத்தல் நம்முடமை !//

  அருமையான பா! தமிழ் காக்கும் விழாவிற்கு எங்கள் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 8. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 10. வணக்கம்!

  நாட்டின் உணா்வேந்தித் தீட்டிய நற்கவிதை
  காட்டும் கடமையைக் காண்!

  ReplyDelete
 11. நம்மால் இயன்ற உதவிகளை
  நாட்டுக்கு அளித்தல் முதற்கடமை !//

  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........