10/27/2014

தமிழின்றி வாழ்வேது !


 

கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ   உயிர்?...வன்னி 
மண்ணின் மணம் குன்றா மலரிவளை 
எண்ணில் அடக்குக   உகந்து !

பொன்னை பொருளை வேண்டேனே
பசி என்னைத் தேடி வருகையிலும் !
அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
 நன்மை செய்வேன் நாளும் !

கரகம் ஆடி வந்தாலும் என்தமிழ் 
விரகம் கொண்டு வீழாது!தரகர் 
தம்மைத் தாம் அறிவீர் !துயரைச் 
செம்மைப் படுத்துக  துணிந்து !

அம்மை அவளே அருந்தமிழ் வளர்த்தாள்  !
எம்மைப் புவிமேல் புகழேந்த !செம்மை யாவும்
தழைத்தோங்கும்! சீர்கொடுக்கும்!அதுவே  
காவும் மனத்தின் துணிவு ! 

தும்பைப் பூப்போல் மனத்தழகை எவரும் 
அம்பை விட்டுக் கொய்யாதீர் !
வம்பை அதுவே தான் வளர்க்கும்
இனி என்றும் மதுவே தோற்க மணந்து !

சொல்லில் பொருளில் நயம் தேற எந்நாளும்  
அல்லிப்  பூவே வந்தருள்வாய் !
கல்லில் முள்ளில் தவழ்கின்றோம் !கயல் விழியே !
இனியும் அள்ளிக் கொடுப்பாய் அறிவு !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

  1. தமிழ் மீதுள்ள தங்களின் பற்றுதல் போற்றுதற்குரியது

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா
    கவிதை வரிகள் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அழகுத்தமிழில் அருமைக்கவிதை..

    ReplyDelete
  4. தமிழ் கமழ்கிறது வரிக்கு வரி..

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி

    ReplyDelete

  5. வணக்கம்!

    தமிழை உயிரென்று தந்த அடிகள்
    அமுதை அளிக்கும் அருந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. "அன்னை மொழியே எனதுயிராம்" ..வரிகள் அருமை..!
    தங்களின் தமிழ்ப் பற்று வியக்கவைக்கிறது..!
    வாழ்க தமிழுடன்..!
    mahaasundar.blogspot.in

    ReplyDelete
  7. "கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
    என்னில் தரித்திடுமோ உயிர்?" என
    உணர்வைப் பகிர்ந்தமைக்கு
    தமிழன் என்ற உரிமையோடு
    பாராட்டுகிறேன்!

    ReplyDelete
  8. அதற்கென்ன குறைச்சல் தோழி அது பெருகிப் பிரவாகமாக பாய்ந்த வண்ணம் உள்ளதே. இன்னும் என்னசந்தேகம் , கவலை அன்னையின் ஆசி பெற்றவர் அல்லவா நீங்கள் வாழ்த்துக்கள் தோழியே ... ...!

    ReplyDelete
  9. தமிழன்னையின் பூரண அருள் உங்களுக்குக் கிடைக்கட்டும்.....

    த.ம. +1

    ReplyDelete
  10. அற்புதமானப் படைப்பு
    தமிழன்னையின் ஆசி தங்களுக்கு
    பரிபூரணமாக உள்ளது
    அதற்குத் தங்கள் கவிதைகளே
    வெளிப்படையான சாட்சி
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வணக்கம் தோழி!

    கன்னித் தமிழ்மறந்து காண்போமோ நல்வாழ்வு
    எண்ணிடச் சொன்னாய் இடித்து!

    அருமை! உணர்வுமிக்க கவிவரிகள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அழகான கவிதை... தும்பை பூவினைப்போல தூய மனமே எவர்க்கும் அதில் அம்பு எய்வதன் பொருட்டே நிகழ்வுகள் அரங்கேற்றம் ... அற்புதம்

    ReplyDelete
  13. தமிழன்றி வேறு ஏது!? அதுதானே இதோ நஹ்ம்மை எல்லாம் எழுத வைத்து இணைத்துள்ளது! அந்தத் தமிழின் அருள் தங்களுக்கும் எப்போதும் கிடைக்க வாழ்த்துக்கள்! சகோதரி!

    ReplyDelete
  14. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (S'inscrire à ce site
    avec Google Friend Connect)

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........