4/21/2014

சிவன் இன்றிச் சீவன் ஏது ...

                                 

துன்பம் வரும் போதினிலும் சிவன் நாமம்
துவண்டு விழும் போதினிலும் சிவன் நாமம்
இன்பம் வரும் போதினிலும் சிவன் நாமாம்
ஈற்றில் செல்வம் வரும் போதும் சிவன் நாமம்

சிந்தையிலே சிவன் இருக்கப் பயமேது ?...
சீற்றம் கொள்ளும் நாகம் முன்னும் கிடையாது !!
எந்தன் உயிர் என்னிடத்தில் இல்லையடி
ஏழ்பிறப்பும் வேண்டும் இந்தத் தொல்லையடி

அம்மையப்பன் பதம் பற்றி வாழ்ந்திடவே
ஆகுதியாய் இவ்வுடலை நான் துறப்பேன்
செம்மையான நினைப்பிது தான் மாறாது
சிவன் அருளைப் பெறும் வரைக்கும் ஓயாது ...

ஒளவையைப் போல் மன உறுதி வேண்டுமிங்கே
அடைக்கலமாய் அவனருளை நாம் பெறவே
சிந்தையிலே நாண் ஏற்றி எக்கணமும்
சீர் பெற்றார் அறுபத்தி மூவரும் தான் !!

விந்தையான அவன் நாமம் சொல்லச் சொல்ல
விரும்பிய நற் பொருள் கூடும்  மெல்ல மெல்ல
இந்த சுகம் இன்ப சுகம் இணையே அற்ற
ஈசனருள் பெற்றவர்க்கும் அடிமை நானே....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

  1. வணக்கம் என் அன்பார்ந்த வலைத்தள உறவுகளே பணிச்சுமை காரணமாக ஆக்கத்தை மட்டும் வெளியிட்டு விட்டுச் செல்கின்றேன் தங்களின் இனிய நற் கருத்துகளிற்கும் தொடர்ந்தும் எனக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புகளிற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிதுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி உறவுகளே !

    ReplyDelete
  2. இந்த சுகம் இன்ப சுகம் இணையே அற்ற
    ஈசனருள் பெற்றவர்க்கும் அடிமை நானே....
    >>
    அவன் அடிமைன்னு சொல்லிக்கொள்வதில்தான் எம்புட்டு பெருமை!?

    ReplyDelete
  3. அன்புடையீர்..
    சிறப்பான கவிதையைப்
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி..
    விரைவில் நலமாய் வருக..
    கவிமழை மீண்டும் பொழிக!..

    ReplyDelete
  4. சிவ நாமம் சொல்லிடவே சீக்கிரமே விலகிடும் துன்பம் எல்லாம்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. // ஒளவையைப் போல் மன உறுதி வேண்டுமிங்கே... //

    அருமையான வரிகள் பல...

    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  6. சீவனார் சிவனாரை அறிந்தபின்
    சீவனார் சிவனாயிட் டிருப்பரே

    சுமை குறையும்போது வாருங்கள்

    ReplyDelete
  7. வணக்கம்!

    பொல்லா வினைபோகும்! போந்த துயா்தீரும்!
    எல்லாம் அவனென்று இரு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. சிந்தையிலே சிவன் இருக்கப் பயமேது ?...

    ReplyDelete
  9. நீங்கள் சிவனைப் பற்றி எழுதி இருக்கும் நேரத்தில் என் தளத்திலும் பிள்ளைக் கறி கேட்ட சிவனைப் பற்றித்தான் !>>http://www.jokkaali.in/2014/04/blog-post_21.html
    த ம 3

    ReplyDelete
  10. விந்தையான அவன் நாமம் சொல்லச் சொல்ல
    விரும்பிய நற் பொருள் கூடும் மெல்ல மெல்ல
    உண்மை தான் தோழி சிந்தையில் சிவனை நிறுத்தி செவ்வனே வாழ்வோம் சிவன் அருள் பெற்று. தோழி நன்றி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  11. பணிச்சுமை முடிந்த பின் வாங்க!

    ReplyDelete
  12. சிவனைப் பற்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  13. தென்னவனே மூவுலகின் தேவனென்றே உள்ளுணர்வில்
    முன்னிறுத்திப் பாடும் மொழிகேட்டால் -பொன்னெழில்
    மின்னும் புகழ்சேரும் வாழ்வினிக்கும்! மீழாத
    இன்னலறும் என்றும் இனித்து !

    தவத்தில் பெரிதே தனத்தில் பெரிதே
    சிவநீந்த மானிடர்சீ வன் !

    அருமை என்று சொல்வதை தவிர வேறேதும் இல்லை
    என்றென்றும் இறைபாட்டு தொடர நெஞ்சார வாழ்த்துகிறேன்

    வாழ்க வளமுடன் 5

    ReplyDelete
  14. பாட்டுச் சத்தம் கேட்கலையா !!!

    சுப்பு தாத்தா.

    http://menakasury.blogspot.in/2014/04/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுப்புத் தாத்தா தங்களின் இனிமையான குரல் வளத்தால் மிகவும் அழகாகப் பாடியுள்ளீர்கள் நான் மிகவும் ரசித்தேன் சந்தோசம் .

      Delete
  15. அருமையான பாடல்.

    அன்பே சிவம்....

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........