4/09/2014

வார்த்தைக் கடலில் தத்தளிக்கிறேன்


வார்த்தைக் கடலில் தத்தளிக்கிறேன்
வானவில்லைப் போல் முக்குளிக்கிறேன்
மூச்சும் பேச்சும் தளர்ந்து போனதே -விழி
மூடும் எண்ணம் இன்னும் இல்லையே .....

அன்பே அன்பே உன்றன்  ஞபகம்
என்னைக் கொல்லுதடி!
அதை நான் சொல்ல வரும்போதெல்லாம்
அழுகை வருகுதடி!

பெண்ணே பெண்ணே பேசாயோ?
உயிர் மூச்சே நீயும் பேசாயோ?
கண்ணே கண்ணே பேசாயோ?
என் கனவே நினைவே பேசாயோ?

தன்னந் தனிமையில் வாடும் என்னைத்
தரையும் ஏற்க மறுக்குதடி
கண்ணில் இருந்து வடியும் நீரால்
கடலும் இங்கே பெருகுதடி ..

உருகும் இதயம் உன் பெயர் சொல்லி
ஊனுடலை இங்கே வதைக்குதடி
வருடும் காற்றும் வசந்தம் இழந்து
வாழ்வில் தீயை மூட்டுதடி ...

இன்பக் கனவே இனிய நினைவே
என்னைத் தேடி வருவாயோ?
துன்பக் கடலை நான் தாண்டிடவே
துடுப்பாய் இங்கு  வருவாயோ?

முள்ளில் ஆடும் பறவை என்றன்
மூச்சுக் காற்றே நீ வர வேண்டும்
உயிரில் எழுதிய வரியே என்றன்
உணர்வே நீ  வர வேண்டும் ...

வர வேண்டும் வர வேண்டும்
விழி வாசல் தேடி வர வேண்டும்
தர வேண்டும் தர வேண்டும்
என் உயிரை என்னிடம் தர வேண்டும் ...

நீயில்லாமல் நானா சொல்லடி என்
நெஞ்சைத் திருடிய பைங்கிளி ?
ஓ ..ஓ ..பெண்ணே என் கண்ணே
உயிர் மூச்சே இங்கு நீதானடி ...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. இன்பக் கனவே இனிய நினைவே
    என்னைத் தேடி வருவாயோ ....
    துன்பக் கடலை நான் தாண்டிடவே
    துடுப்பாய் இங்கு வருவாயோ ...

    நிச்சயம் வருவாள் துயர் துடைக்க!
    அனைத்தும் அருமை வரிகள் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  2. நல்லதோர் எதிர்பார்ப்புடன் கூடிய ஆக்கம். அருமை.

    //வர வேண்டும் வர வேண்டும்
    விழி வாசல் தேடி வர வேண்டும்
    தர வேண்டும் தர வேண்டும்
    என் உயிரை என்னிடம் தர வேண்டும் ..//

    அதே அதே ......

    வர வேண்டும் வர வேண்டும்
    என் வலைப்பக்கம் தேடி வர வேண்டும்
    தர வேண்டும் தர வேண்டும்
    பின்னூட்டம் [ என்ற இனிமா ] தரவேண்டும் ;)

    ReplyDelete
  3. உருகும் இதயம் உன் பெயர் சொல்லி
    ஊனுடலை இங்கே வதைக்குதடி
    வருடும் காற்றும் வசந்தம் இழந்து
    வாழ்வில் தீயை மூட்டுதடி ...

    இரசித்தேன்.

    ReplyDelete
  4. உருக வைக்கும் வரிகள் அம்மா...

    ரொம்பவும் ரசித்தேன்...

    ReplyDelete
  5. கவிதைக்கு பொருத்தமான படமா ?படத்திற்கு பொருத்தமான கவிதையா ?நல்ல ஜோடிப் பொருத்தம் !
    த ம 2

    ReplyDelete
  6. நல்ல கவிதை..... ரசித்தேன்.

    ReplyDelete
  7. //நீயில்லாமல் நானா சொல்லடி என்
    நெஞ்சைத் திருடிய பைங்கிளி ?.....//

    அருமை சகோ.. சினிமா [பாடல் போல் உள்ளது..

    ReplyDelete

  8. தன்னந் தனிமையில் வாடும் என்னைத்
    தரையும் ஏற்க மறுக்குதடி ...
    கண்ணில் இருந்து வடியும் நீரால்
    கடலும் இங்கே பெருகுதடி .. ஆஹா....

    கவிதை முழுவது அருமை.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  9. "தன்னந் தனிமையில் வாடும் என்னைத்
    தரையும் ஏற்க மறுக்குதடி...
    கண்ணில் இருந்து வடியும் நீரால்
    கடலும் இங்கே பெருகுதடி..." என்ற
    உணர்வு வரிகளே
    கவிதையை அழகுபடுத்துகிறது!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........