1/23/2015

அன்னையின் நல்லாசி அனைவர்க்கும் கிட்டட்டும் !

                                           

மண்ணிலே பிறந்து விட்டோம் 
   மரங்களாய் வளர்ந்தும் விட்டோம் !
எண்ணிய தெதுவும் இங்கே 
   எளிதிலே கிடைப்ப தெங்கே !
கண்ணியம் இழந்த வாழ்வைக் 
   கனவிலும் நினையாப் பண்பு 
உண்மையில் உயர்வைத் தந்து 
   உருப்பட வழிகள் செய்யும் !

தன்னிலை மறந்து வாழும் 
    தரித்திர குணத்தை நீக்கி 
நன்னிலை அடைந்தால் மக்கள்  
    நலமுடன்  திகழ்வார் நாளும் !
அன்னையின் அருளைப் பெற்று 
    அழகுடன் திகழத் தானே 
நன்னெறி வளர்த்தார்  இங்கே 
    நழுவிடல்  முறையோ சொல்வீர் !

காத்திட வருவாள் அன்னை 
   கருணையின் உருவம் தாங்கி !
நேத்திகள் பலவும் செய்தோர் 
    நெகிழ்கிறார் அறிவீர் இன்றும் !
கூத்துகள் களைகட் டத்தான் 
    குவிகிறார் தினமும் பக்தர் !
பாத்திதை உணர்தல் நன்றே 
    பலவகைத் துயரும் நீங்க !  

                                                  


                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

 1. அனைவரின் மனதில் கருணை உருவாகட்டும் அம்மா...

  ReplyDelete
 2. வணக்கம்
  அம்மா
  பக்தி பாமாலை அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. காத்திட வருவாள் அன்னை
  கருணையின் உருவம் தாங்கி !//
  ஆம், உண்மை.
  அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அருமையான பக்தி மாலை.

  ReplyDelete
 5. அன்னைக்கு அழகான பாமாலை பாடி விட்டீர்கள்...நன்று சகோதரி தம 3

  ReplyDelete
 6. நல்லதொரு ஆக்கம் தொடர வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 7. அண்ணைக்கு சூட்டியப் பாமாலை மனதை உருக்கியது. அவள் கடைக்கண் பார்வை நம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்திப்போம் .
  நல்லதொரு கவிதை படைத்ததற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. பக்தியின் மணமும்
  கவிதையின் சுவையும்
  ஒன்று சேர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. //கண்ணியம் இழந்த வாழ்வைக்
  கனவிலும் நினையாப் பண்பு
  உண்மையில் உயர்வைத் தந்து
  உருப்பட வழிகள் செய்யும்!..//

  அழகிய வரிகள்.. அருமை!..

  ReplyDelete
 10. நிச்ச்யமாக நல்லாசி எல்லோருக்கும் கிடைக்கும் சகோதரி! அன்னையின் அருளுடன்! அருமையான வரிகள்!

  ReplyDelete
 11. ஓம் சக்தி ! பக்திப்பாடல் அருமை.

  ஜில்லுன்னு மேங்கோ ஜூஸ் சாப்பிட உடனே வாங்கோ !
  http://gopu1949.blogspot.in/2015/01/11-of-16-61-70.html

  ReplyDelete
 12. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_30.html

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........