9/28/2013

அன்பு நிறைந்த நெஞ்சங்களே வாழ்த்துச் சொல்ல வாருங்கள்பூவொன்று மலர்ந்ததென்று ஒரு 
பூந் தோட்டமே சிரிக்குது இங்கே 
வாவென்று அழைத்து எம்மோடு 
வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள் உறவுகளே !!


தங்கப் பாதம் தவண்டு வரத்  
தரணி எங்கும் பூப் பூக்கும் 
எங்கள் அரும்பு நலமாக 
எல்லா வளமும் பெற வேண்டும் !

மங்காப் புகழும் கீர்த்தியும் 
மரு மகளே உனக்கு அவள் அருள்வாள்! 
பொங்கும் புன்னகை எந்நாளும்
பொலியப் பெற்ற சரஸ்வதியே !

அங்கம் ரோஜா இதழே தான் இதை 
அன்பாய் அணைத்திட நாமுள்ளோம் 
எந்தன் மருமகள் உன் வரவால்
எங்கள் வீடே சிரிக்கிறது .......

வண்ணக் கனவு மலர்ந்திங்கே 
வசந்த வாசலைத் திறக்கிறது இனி 
எம் எண்ணம் எல்லாம் நிறைந்திருக்கும்
எங்கள் வீட்டு எழில் அரசியே  நீ வாழியவே........


                                                         
                                                       இனிப்பான இதயத்தால் 
                                  இனியன சொல்லி வாழ்த்துங்கள் உறவுகளே !!என்னை "அத்தை" என்று அழைத்திட ஒரு 
செல்ல மருமகள் பிறந்திருக்கிறாள் 
அவளை வாழ்த்த வந்த அன்பு நெஞ்சங்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .......தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

32 comments:

 1. இப்புவிதனில்
  மலர் பாதம் பதித்திட்ட
  தங்களின் செல்ல மருகளுக்கு
  அன்பு நிறை வாழ்த்துக்கள்.
  தங்களின் அன்பு மருகளால்
  வசந்தம் வீசட்டும்
  மகிழ்ச்சி பொங்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
   சகோதரரே .......

   Delete
  2. அத்தை பிரமோஷனை அள்ளி வழங்கியுள்ள குட்டிப்பாப்பாவுக்கு [உங்கள் மருமகளுக்கு] என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   >>>>>

   Delete
  3. படங்களும், கவிதையும், அத்தைமடி மெத்தையடி பாடலும் எல்லாமே அழகோ அழகு தான். பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

   >>>>>

   Delete
  4. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8942.html

   ’பிரமோஷன்’ என்ற தலைப்பில் ஓர் குட்டியூண்டு கதை எழுதியுள்ளேன். படியுங்கள், சிரியுங்கள், கருத்தளியுங்கள்.

   அன்புடன் கோபு

   Delete
  5. தங்கள் அன்பு கலந்த நல் வாழ்த்திற்கும் மன மகிழ்வை
   அள்ளி அள்ளிக் கொடுத்த நற் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க
   நன்றி ஐயா ..

   Delete
 2. பஞ்சுப் பாதம் கொஞ்சும் குளிர்ரோஜா
  விஞ்சும் பேரழகி உம்நெஞ்சம் நிறைந்தவளை
  தஞ்சம் நீரடையும் தாயவள் அபிராமி
  பஞ்சமின்றிக் காப்பாள் பல்லாண்டு வாழ்ந்திடுக!..

  அன்பு மருமகளுக்கு இந்த அத்தையின் வாழ்த்துக்களும் தோழி!
  உங்கள் கவியில் அந்த கொஞ்சும் அஞ்சுகத்தை மனக்கண்களில் கண்டேன்!
  வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

  த ம.1

  ReplyDelete
  Replies
  1. கவியாலே ஒரு அழகிய மாலையைக் கருத்தாக வழங்கி
   வாழ்த்திய என் அன்புத் தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாட்டும் .மிக்க நன்றி தோழி ......

   Delete
 3. உங்கள் அருமை மருமகளுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரஞ்சனி அம்மா தங்களின் வாழ்த்தினைக் கண்டு
   எனதுள்ளம் குளிர்ந்தது !

   Delete
 4. அத்தை மடி மெத்தையடி தாலாட்டு பாட ஆர்வம் பிறந்திருக்கும் அல்லவா தோழிக்கு.. வாழ்த்துக்கள் வாழிய கண்மணி.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் :) மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நல்
   வாழ்த்திற்கும் .

   Delete
 5. முதலில் அத்தைக்கு [அத்தை பிரமோஷன் வாங்கியவருக்கு] என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. எனக்கே எனக்கான முதல் வாழ்த்து இதற்கு மிக்க நன்றி ஐயா .

   Delete
 6. அத்தை எனும் அரும்பதவியை அள்ளித்தந்த செல்லமருமகளுக்கு அழகான கவியால் வாழ்த்தப்பெற்றப் பேறு சிறப்பு. அத்தையின் வாழ்த்தோடு எம் வாழ்த்தும் இனிதே சேரட்டும் செல்லப்பெண்ணுக்கு.

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக இந்த வாழ்த்துக்கள் ஒவ்வொன்றும் மன
   மகிழ்வைத் தர வல்லன தோழி .உங்களுக்கும் என்
   மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தோழி .

   Delete
 7. மங்காப் புகழும் கீர்த்தியும்
  மரு மகளே உனக்கு அவள் அருள்வாள்
  பொங்கும் புன்னகை எந்நாளும்
  பொலியப் பெற்ற சரஸ்வதி நீ ....//
  மருமகள் வரவு மகிழ்ச்சி.
  உங்கள் செல்ல மருமகளுக்கு வாழ்த்துக்கள்.
  உங்களை போல கவிதைகள் படைக்கும் சரஸ்வதியாக இருக்கட்டும்.
  பாடலை கேட்டு மகிழ்ந்தேன், இனிப்புகள் எடுத்துக் கொண்டேன்.
  குழந்தையின் பெற்றோர்களுக்கும், குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.
  அத்தைக்கும் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா உள்ளம் குளிர்ந்தது தோழி என் மருமகளுக்கும்
   தங்கள் எண்ணம் போல் இவ் வாழ்த்துக்கள் பலிக்கட்டும் .
   மிக்க நன்றி தோழி மன மகிழ்வு தரும் இனிய நல் வாழ்த்திற்கு .

   Delete
 8. அன்னை அபிராமி காத்தருள்வாளாக!.. குழந்தை எல்லா நலனும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ - அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  வாழ்க வளமுடன்!.. வளர்க நலமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
 9. பின்னூட்டங்கள் அவை இடப்பட்ட நேரப்படி வரிசையாக காட்டப்பட வேண்டும். ஆனால் ஏதோ உங்கள் சிஸ்டத்தில் கோளாறுகள் உள்ளதால் மாறி மாறி விழுந்துள்ளன. முடிந்தால் அதை சரிசெய்து கொள்ளுங்கள்.

  உதாரணமாக நான் முதலில் 1.26 AM க்கு கொடுத்துள்ள கமெண்ட் கடைசியாகக் காட்டப்பட்டுள்ளது பாருங்கோ.

  வை.கோபாலகிருஷ்ணன்September 29, 2013 1:26 AM
  முதலில் அத்தைக்கு [அத்தை பிரமோஷன் வாங்கியவருக்கு] என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஐயா !!.விரைவில் கவனம் எடுக்கின்றேன் .
   மிக்க நன்றி ஐயா இத்தனை கருத்துகள் இட்டு வாழ்த்திய
   தங்கள் அன்பு உள்ளத்திற்கு .

   Delete
 10. அத்தையின் பாட்டை ஆராதிக்க வந்துள்ள குட்டிக்கும் அத்தைக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 11. ஆஹா..... உங்களை அத்தை என அழைக்க வந்த புதுவரவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
 12. வண்ணக் கனவு மலர்ந்திங்கே
  வசந்த வாசலைத் திறக்கிறது இனி
  எம் எண்ணம் எல்லாம் நிறைந்திருக்கும்
  எங்கள் வீட்டு எழில் அரசியே நீ வாழியவே........

  அத்தை மடியை மெத்தையாக்கி
  அன்பு சொல்லவந்த
  அருமைக் குழந்தைக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
 13. வெள்ளி நிலவொன்று
  மேதினியில் வந்துதித்து
  பிள்ளைவரம் என்றே
  பேரின்பம் பெருகவைத்த
  உம்வீட்டு மருமகளின்
  உதடசைந்த நாள்தன்னில்
  உறவுகளின் வாழ்த்தோடு
  உளமார வாழ்த்துகிறேன்...!
  தாரகை போலே
  தண்ணொளி பரப்பி
  ஒளிரட்டும் அவளின்
  எதிர்காலம் என்றென்றும் ..!

  தங்கள் அன்பு மருமகள்
  நிறைசெல்வ செழிப்போடு
  நீடூழி வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன் ..!

  வாழ்கவளமுடன்
  ReplyDelete
  Replies
  1. அருமையான வரிகளினால் இதமான வாழ்த்தொன்று ! மிக்க
   நன்றி சகோதரரா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
 14. என் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க சகோ..:-)

  ReplyDelete
 15. "அத்தை" என்று அழைத்திட பிறந்த
  செல்ல மருமகளை செல்வ செழிப்போடு
  நீடூ வாழ வாழ்த்துகின்றேன் .

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........