அருங்கனியில் சிறந்த கனி எக்கனியோ
அதனையுண்ட மகிழ்வினிலே அகம் குளிர்ந்து
விரும்பி மீண்டும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்றேன்
அதனையொத்த விநாயகனைத் துதி பாடும் குரலைக் காண வாரீர்..!!!
பாடியவர் :சுப்புத் தாத்தா
http://menakasury.blogspot.ch/
தும்பிக்கையான் துணையிருக்கத்
துயர்கள் யாவும் மறையட்டும்
நம்பிக்கையே வாழ்வின் முதலாய்
எந்நாளும் இங்கே மலரட்டும் .........
அன்பும் அறமும் தழைத்திருக்க
ஆலய தரிசனம் தொடரட்டும் நாம்
நம்பும் வகையில் வாழ்க்கைச் சக்கரம்
நன்மையை நோக்கி நகரட்டும் ........
இன்பம் துன்பம் எதுவந்தாலும்
இதயம் சமநிலையடையட்டும்
இருளை அகற்றி ஒளியைப் பரப்பும்
இறைவன் நல்லருள் புரியட்டும் ...
தன்பின் தொடரும் உறவையெல்லாம்
தன்னுறவாக மதிக்கட்டும் மனிதன்
தானம் கொடுத்துத் தானும் உயர்ந்து
தரணியில் நன்மைகள் அடையட்டும்....//
பெரும் பேறே பெற்றிருந்தேன் முற்பிறவிதனில் அதனால்
பின் தொடர்ந்தே வந்தளித்த நல்லாசியிது ...........!!!!!!!
வரம் கொடுத்தாற் போல் நல்ல விநாயக சதுர்த்தியிலே
வாழ்வளித்தார் சுப்புத் தாத்தா என் பாடலுக்கு ...!!!!!!!
விநாயகனே நல்லாசிதனைக் கொடுத்தது போல்
விம்மி விம்மி நான் அழுதேன் பெற்ற மகிழ்வினாலே
இளையவர்கள் ஆயிரம் தான் போற்றினாலும் ஒரு
முதியவரின் வாழ்த்தொன்றே வெற்றி தரும் ..........
முதற் பாடல் முக்கண்ணன் முதல்வனுக்கே இதை
முன்னொரு பொழுதும் நான் நினைக்கவில்லை
எனக்காக என் ஜீவன் நீயல்லவோ தானாய்
எங்கிருந்தோ தேடி வந்து பாடிச் சென்றாய் ....!!!!
மறவேனே உன்றன் அன்பை எந்நாளுமிங்கே
மலர் கொன்றை அணிந்தவன் மீது ஆணையிதே
இனி யார் யார் தான் பாடினாலும் என் பாடல்களை
இந்நிகழ்வைச் சொல்லாமல் செல்ல மாட்டேன் !!
வரமொன்று தந்தாயே சுப்புத் தாத்தா இதுவே
வழித் துணையாய் அமையெட்டும் என் முயற்சிக்கெல்லாம்
விழுந்தேனே உன்றன் பாதக் கமலமதில்
வீணாக இவ்வாழ்த்தே வெற்றி தரும் ........
வீணாக இவ்வாழ்த்தே வெற்றி தரும் ........
நன்றி எங்கள் சுப்புத் தாத்தாவிற்கு.....
மிக்க நன்றியுடன்
ReplyDeleteவிநாயக சதுர்த்தி வாழ்த்துக்களும்
நம் சுப்பு தாத்தாவுக்கும்
அருமையான சிறப்புக்கவிதை தந்த
எங்கள் அன்பு அம்பாள்அடியாள் அவர்களுக்கும்...
மிக்க நன்றி ரமணி ஐயா தங்களின் வருகைக்கும் இனிய நல்
Deleteவாழ்த்திதர்க்கும் !
விநாயகருக்கு தங்களின் பாடல் சுப்பு தாத்தாவின் குரலில்... அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள் சகோதரி..
ReplyDeleteத.ம.2
மிக்க நன்றி சகோதரரே தங்களின் வருகைக்கும் இனிய நல்
Deleteவாழ்த்திதர்க்கும் !
சுப்புத் தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...
ReplyDeleteஇனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் !
Deleteநாங்களும் நெகிழ்ந்தோம் லாலி மெட்டு கேட்டு.
ReplyDeleteஇருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி தங்களின் வருகைக்கும் இனிய நல்
Deleteவாழ்த்திற்கும் !
சுப்புத்தாத்தாவின் குரலில் உங்கள் கவிதை மிக மிக அருமை!
ReplyDeleteஅவர்குரலில் மிளிர்வதெல்லாமே சிறப்படையும்!
தொடரட்டும் உங்கள் இருவரின் பயணங்களும்!...
சுப்பு ஐயாவுக்கு என் வணக்கமும்
உங்களுக்கு என் மனமார்ந்த் வாழ்த்துக்களும்!
மிக்க நன்றி தோழி தங்களின் வருகைக்கும்
Deleteஇனிய நல் வாழ்த்திற்கும் !
பாடலும் அருமை! ஏற்ற இசை அமைத்து பாடிய சுப்புதாத்தா அவர்களின் பணியும் அருமை இரசித்தேன்!
ReplyDeleteமிக்க நன்றி புலவர் ஐயா .தங்களின் பாராட்டில் என் உள்ளம் குரிர்ந்தது !
Deleteசுப்பு தாத்தா என்றும் வாழ்க!.. அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteமிக்க அன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஇது ஒரு நல்ல ஆரம்பமாக அமையட்டும். சதுர்த்தியில் பிள்ளையார் சுழி போட்டிட்டீங்க.. பாடல் அமைத்தவருக்கும்.. பாடியவருகும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்நாள் தானாகவே அமைந்த பொன்நாள் தங்கச்சி .மியாவின்
Deleteவருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் .உங்களுக்கும் என்
இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் பாராட்டிற்கும் .
ReplyDeleteநன்றி ரமணி ஐயா
ReplyDeleteவிநாயகருக்கு தங்களின் பாடல் சுப்பு தாத்தாவின் குரலில்...
ReplyDeleteஅருமையான பகிர்வு...
வாழ்த்துக்கள் சகோதரி..
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteகவிதையையும், சுப்பு தாத்தாவின் பாட்டையும் ரசித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteவிநாயகர் பாமாலை அருமை.விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteசுப்பு தாத்தாவின் குரலில்.உங்கள் கவிதை
ReplyDeleteநல்ல முயற்சி. சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஅருமை.. அருமை.. அருமை.. சகோதரியின் விநாயகர் துதிப் பாடலும், சுப்புத்தாத்தாவின் குரலில் பாடலும் அசத்தல்..
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் .
Deleteஉங்கள் அழகான கவிதையை சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்திருக்கிறார். அவருக்கு அற்புதமான நன்றி நவிலல் செய்து நீங்களும் சிறப்பித்திருக்கிறீர்கள். சுப்பு தாத்தா ரொம்பவே ஸ்பெஷல்தான்! உங்களுக்கு வாழ்த்துகளும், அவருக்கு வணக்கங்களும்.
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் .
Deleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் பாடல் வரிகள் அருமை. இணைப்பில் சென்று பாடலைக் கேட்கிறேன்.
ReplyDeleteஎன் வலையிலும் விநாயகர் வெண்பா எழுதி இருக்கிறேன். நேரம் இருப்பின் பார்க்கவும்