8/21/2013

கழுகுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை !!



கழுகினைப்  போல் காத்திருந்து
கண்களிரண்டும் பூத்திருந்து
அருந்தும் இரத்தம் ஒன்றே சொர்க்கம்
என அறிந்தவர்க்கு ஏது துக்கம் !

வலையில் வீழும் குஞ்சினத்தில்
வண்ண நிறம் அது எதற்கு!
எலும்பும் சதையும் போதுமிங்கே
எச்சில் ஊறத் தின்பதற்கு!

கொழு கொளுத்த கழுகினைத்தான்
கொத்தித் தின்ன யாருமில்லை!
பரிதவிக்கும் இனத்தைப் பார்த்து மேலும்
பரிகசிக்குது இது என்ன  கூத்து!

அறிவிழந்த கழுகுக்கென்றும்
அடுத்தடுத் துன்பம் வந்தால்
தெரிந்து கொள்ளும் எங்கள் துயரைத்
தெரிவிப்பவர் யார் தான் இங்கே!

மது மயக்கம் மனதை மயக்க
மதியிழந்து செய்த செயலால்
கொதி கொதித்துப் போனது உள்ளம் இந்தக்
கொலைக்களம்தான் மாறுவதெப்போ!

அருவருப்பாய் பெண்ணினத்தை
அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
தொழுவத்திலே கட்டி வைத்துத்
தோலுரிக்க வேண்டுமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

  1. பரிதவிக்கும் இனத்தைப் பார்த்து மேலும்
    பரிகசிக்குது இது தான் கூத்து//
    அவமானம் ! அவமானம்!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். இரக்கமற்ற இந்தச் செயல் மனித குலத்திற்கே அவமானமானதொரு செயல் தான் சகோதரரே .மிக்க நன்றி முதல் வருகைக்கும் கருத்திற்கும் .

      Delete
  2. "அருவருப்பாய் பெண்ணினத்தை
    அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
    தொழுவத்திலே கட்டி வைத்துத்
    தோலுரிக்க வேண்டுமிங்கே"

    பலரின் மனக்குமுறல்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது கவிதை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete

  3. அருவருப்பாய் பெண்ணினத்தை
    அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
    தொழுவத்திலே கட்டி வைத்துத்
    தோலுரிக்க வேண்டுமிங்கே .//

    அறச்சீற்றத்திலும் வரிகள் அருமையாக
    விழுந்துள்ளதை மிகவும் ரசித்தேன்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்


    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  4. வீறுகொண்ட வார்த்தைகள்..
    தேவையிங்கு இப்போது...

    ReplyDelete
  5. //அருவருப்பாய் பெண்ணினத்தை
    அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
    தொழுவத்திலே கட்டி வைத்துத்
    தோலுரிக்க வேண்டுமிங்கே ...............
    //

    அதை நான் வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  6. முடிவில் சொன்னது நடக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் கருத்திற்கும் .

      Delete
  7. அருமையான ஆக்கம். குமுறும் வார்த்தைகளின் கொந்தளிப்பு புரிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    தலைப்புத்தேர்வு வெகு அருமை.

    கழுகுகளாவது சுற்றுப்புறச்சூழலை பராமரிக்க மிகவும் உபயோகமாக இருப்பதாக சமீபத்தில் ஓர் மிகப்பெரிய கட்டுரையில் படித்து மகிழ்ந்தேன்.

    இந்த கேடுகெட்ட மனிதர்களை கழுகுகளுடன் கூட ஒப்பிடக்கூடாது என நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா .மிருகத்தனமானவகள் என்று கூடவும் நாம்
      ஒப்பிட முடியாத அளவிற்கு மனிதனின் மனிதாபிமானம் அற்றுப்
      போய்க்கொண்டே தான் இருக்கின்றது இந்நாளில் :(((

      Delete
  8. "அருவருப்பாய் பெண்ணினத்தை
    அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
    தொழுவத்திலே கட்டி வைத்துத்
    தோலுரிக்க வேண்டுமிங்கே!.."

    சிறு நெருப்பென கனன்ற சீற்றம் -
    ஒருநாள் பெரு நெருப்பென ஆகி
    புல்லரை - பொடிச் சாம்பலாய்
    புழுதிக் காற்றினில் ஊதிடும் நிச்சயம்!..

    ReplyDelete
  9. அருவருப்பாய் பெண்ணினத்தை
    அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
    தொழுவத்திலே கட்டி வைத்துத்
    தோலுரிக்க வேண்டுமிங்கே!.."//

    அவர்கள் மனநோயாளிகள்.
    மனநோயாளிகளை புறம் தள்ள வேண்டும்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........