அழிவதை நினைவில் தேக்கி
அலைந்திடும் உலகின் போக்கை
விழிகளில் உணரு கின்றோம்
விடைதனைத் தருவார் யாரோ?
மொழிந்ததை ஆய்ந்து நன்றே
முன்வரும் துயரை நீக்கு!
தொழிலுறும் துாய்மை யாலே
தொடர்வினை அகலும் இங்கே !
பயிர்வளம் கருக நாளும்
படர்துயா் வந்தே சேரும்!
உயிர்வளம் தழைப்ப தெங்கே?
உடனிதை உணர்தல் நன்றே!
மயிரிழை போன்றே வாழ்வு!
மனமுதை உணா்தல் வேண்டும்!
துயில்கிறார் கவலை யின்றி
துயரிதைத் தடுக்க வாரீர்!
கயவரை அடக்க எண்ணி
கழிச்செயல் புாிதல் ஏனோ?
உயரிய நெறியை விட்டே
உயிர்களைப் பறித்தல் ஏனோ?
தயவுடன் அறியத் தந்தோம்
தருமத்தைக் காவல் செய்வீா்!
முயற்சியே இன்றி நாட்டை
முடக்குதல் கொடுமை அன்றோ?
குடிமனை எரியக் கண்டு
குமுறுது மனமும் இன்று !
மடிபவர் மனிதர் என்று
மனங்களும் உணர்தல் நன்று!
விடிவினை எதிர்கொள் ளத்தான்
விரைந்தொரு முடிவைத் தேடி
அடிமையெம் அகத்தின் ஓசை
அயர்விலா தொலிக்கு திங்கே !
உடைமைகள் இழந்த மக்கள்
உாிமையைப் பெறவே வேண்டும்!
கடமையை உணர்ந்தே நாடு
கடன்தனைப் புாிதல் வேண்டும்!
மடமைகள் அறிவை மாய்க்க
மனிதனை மனிதன் மேய்ப்பான்
இடரெலாம் நீங்கும் வண்ணம்
இனிதுறும் வழிகள் செய்வீர்!
ReplyDeleteவணக்கம்!
உலகியல் போக்கை உரைக்கும் விருத்தம்
நலமியல் நல்கும் நமக்கு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
நல்ல கோரிக்கை.
ReplyDeleteபாடல் அருமை தோழி. வாழ்த்துக்கள்.
அனைத்தும் நிறைவேற வேண்டும் அம்மா...
ReplyDelete
ReplyDeleteவிடமென அஞ்சா தென்றும்
வடங்களை வீசும் முன்னே
மடையென வெள்ளம் வந்தே
முடைகளை செய்த போதும்
படைகளை திரட்டி வந்து
புரட்சியே வெடித்த பின்னும்
திடம்மெலாம் கொண்டு நீயும்
தடைகளை தகர்ப்பாய் பெண்ணே !
ஆஹா அருமையான விருத்தம் தோழி ! வைத்த கோரிக்கைகளும் மிக மிக நன்றே மேலும் பல பாக்கள் படைக்க வாழ்த்துக்கள் தோழி ! மிக மிக ஆவலாக உள்ளேன். இனிய பாக்கள் அருந்த.
அருமை அருமை புகைப்படம் உள்பட..... வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் தோழி!
ReplyDeleteஇடர்கள் அகல எழுந்த விருத்தம்
படர்க பணியாய்ப் பரந்து!
அருமையான விருத்தம்! சிறந்த நற் கோரிக்கைகள்!
வாழ்த்துக்கள் தோழி!
அருமையான கவிதை சகோதரி! தங்களின் தமிழ் அழகையும், விளையாட்டையும் சொல்லவும் வேண்டுமோ!!!!? வார்த்தைகள் இல்லை சகோதரி! சுவைக்கின்றோம் தங்களின் இனிய தமிழையும், கருத்துக்களையும்!
ReplyDeleteஎண்ணிய முடிதல் வேண்டும்!
ReplyDeleteஅருமை
உடைமைகள் இழந்த மக்கள்
ReplyDeleteஉாிமையைப் பெறவே வேண்டும்! = அருமை. வாழ்த்துகள்.
இன்றைய தேர்தல் முடிவு, உங்கள் கோரிக்கைகளை நிறைவேறச் செய்யுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் !
ReplyDeleteத ம 8