8/29/2014

கவிதைப் போட்டி -2014 (அம்பாளடியாளின் கவிதைகள் )

                                                       (  பட இணைப்பு -1)


தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் ஐயா இணைத்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2014க்குரிய கவிதை இதோ ...


                               திருடா திருடா    

தேன் சுரக்கும் பார்வை என்றன்  பார்வையோ!
தீந்தமிழில் நீ வடிக்கும் கோர்வையோ?
வான் பரப்பில் வந்து போகும் தென்றலே
வர்ண ஜாலம் காட்டு என்றன்  முன்றலில்

மான்  விழியின்  ஒளிநுதல் நீயல்லவா?
மறைந் திருந்து பார்பதிலே வல்லவா !
நான்  விரும்பும் ஓவியமே என் மன்னவா இங்கு
நோன்பிருந்து பார்த்த கதை சொல்லவா ?

பால் மணக்கும் பாவை இவள்  முகத்திலே
பார்த்ததெல்லாம் நிறைந்திருக்கும் உன் அகத்திலே
கால் முளைத்து கை முளைத்து கற்பனை
கனவு காண வைத்ததுவா என் அப்பனை?

வேல் முருகன் மால் மருகன் நீயடா!  உனக்கு
வள்ளி என்றும் வாழ் நாளில் நான்தானடா!
தோல் சிவக்கும் முன்னாடி வந்திங்கே உன்றன்
தோல்வி தனை ஒப்புக்கொள்ளத்  தென்பெங்கே?

திண்ணையிலே காத்திருக்கும் எழில் ஓவியமே! எனைத்
தெம்மாங்குப்   பாட வைக்கும்  காவியமே !
வெண்ணையினைத் தான் திருடிச் செல்ல வந்தேன் உன்றன்
விழியொளியில் அகப்பட்டேன் திருடன் ஆனேன்!

கண்ணெதிரே  காண்பதெல்லாம் கனவா!  நினைவா !நீ
கண்டாங்கிச் சேலை கட்டிய மலரா! நிலவா!
பெண்ணழகை பேரழகை என்ன சொல்வேன்! -இன்னும்
பெருமைகொள்ள வைக்குதடி என்றன்  உயிரே !

                                                                                                                
இப் போட்டியை நிகழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கும் இப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் !

                                      வாழ்க தமிழ் !வளர்க நின் பணி !
                      http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

44 comments:

 1. வணக்கம்
  தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
  நன்றாக உள்ளது .. கவிதை.த.ம 1வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரா !

   Delete
 2. வணக்கம்
  அம்மா.
  போட்டியின் நிபந்தனையை ஒருதடவை பாருங்கள்.. 1 போட்டியாளர் இரண்டு கவிதைகள் எழுத வேண்டும்.... பார்வையிட முகவரி

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   ப...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாகச் சகோதரா !:)நீங்கள் சொல்லிச் சென்றுள்ள நிபந்தனைகளை நானும் அறிவேன் நாளை கட்டாயமாக அடுத்த கவிதையினையும் வெளியிட்டுத் தங்களுக்கும் அனுப்பி வைக்கின்றேன் .மிக்க நன்றி சகோதரா தகவலிற்கு .

   Delete
 3. அருமை
  வெறிபெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம2

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete

 4. வணக்கம்!

  திருடா.. திருடா.. கவியடிகள் கண்டேன்!
  அரும்பா அமுதெனும் ஆறு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

   Delete
 5. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
 6. அதானே அம்பாளா கொக்கா அடேங்கப்பா ...!

  ஒரு நாடகமே நடக்குதம்மா இங்கே
  இந்நாடே உன்கவி நடையில் வீழ்ந்திடுமே.......!

  பாடிப் பார்க்க சூப்பராக வருகிறது அம்பாள். வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் தோழி ...!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அன்புத் தோழி இனியா தங்களின் வருகைக்கும் மனமார்ந்த நல் வாழ்த்திற்கும் .

   Delete
 7. நானும் கவிதை எழுத முயற்சிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்...நல்ல வேளை,உங்களின் கவிதை கண்ணில் பட்டது .நான் எழுதினாலும் பரிசு உங்களுக்குத்தான் என்பதால் ஓடி ஒளிஞ்சிக்கிறேன் !(பரிசு நிச்சயமான பின் இன்னொரு கவிதை சோடைப் போக வாய்ப்பில்லை )
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ...எப்போதும் போல மனம் திறந்த பேச்சு மனதை மகிழ வைத்துள்ளது சகோதரா :)) தங்களின் வருகைக்கும் மனமார்ந்த நல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா .

   Delete
 8. ஆஹா அம்பாளா கொக்கா அதானே பார்த்தேன் ம்..ம்.. ம் அசதிட்டீங்கம்மா தோழி ! வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...! இனியா தோழியே

  ReplyDelete
 9. //கண்ணெதிரே காண்பதெல்லாம் கனவா.. நினைவா.. நீ
  கண்டாங்கிச் சேலை கட்டிய மலரா..நிலவா..
  பெண்ணழகை பேரழகை என்ன சொல்வேன்.. இன்னும்
  பெருமை கொள்ள வைக்குதடி எந்தன் உயிரே!..//

  அழகான வர்ணனை.. நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் !

   Delete
 10. கண்ணெதிரே காண்பதெல்லாம் கனவா! நினைவா !
  நான் ரசித்த வரிகள் போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  தொடர் கவிதையை உடன் வெளியிடுக,,, நாளை கடைசிநாள்.
  போட்டிக்கு அனுப்பிய எனது கவிதையையும் காண வேண்டுகிறேன்.
  அன்புடன்
  கில்லர்ஜி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் !
   நான் உடனும் அனுப்பி வைக்கின்றேன் நிட்சயமாகத் தங்களின்
   கவிதைகளையும் கண்டு மகிழ்வேன் .

   Delete
 11. அருமை சகோதரியாரே...வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி தங்களின் வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
 12. ஆஹா! வலைத்தளத்தில் சரியான...சபாஷ் போட்டி! அருமையான கவிதை சகோதரி!
  வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அன்புச் சகோதரரே தங்களின் வருகைக்கும் மனமார்ந்த நல் வாழ்த்திற்கும் !

   Delete
 13. அடடா!.. அடடா! என எங்களை ஆச்சரியப்பட
  வைத்த பாடல்! மிக அருமை!

  போட்டியில் வெற்றி வாகை சூட உளமார வாழ்த்துகிறேன் தோழி!

  ReplyDelete
  Replies
  1. என் தோழியின் அன்பில் கலந்த நல் வாழ்த்தினைக் கண்டு உள்ளம்
   குளிர்ந்தது இன்றும் ! மிக்க நன்றி தோழியே வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 14. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

  போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete


 15. சிந்திக்க வைக்கும் பாவடிகள்
  சிறப்பாக மின்னுகிறது
  முடிவுகள் நடுவர் கையில்...
  வெற்றி பெற வாழ்த்துகள்

  எண்ணப் பகிர்வுக்கான
  கவிதை இது
  வண்ணப் படத்திற்கான
  கவிதையைக் காணவில்லையே!

  ReplyDelete
 16. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !
  வண்ணப் படத்திற்கான கவிதையும் வெளியிட்டுள்ளேன்
  மகிழ்வோடு காண வாருங்கள் ஐயா .இதோ ..
  http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html

  ReplyDelete
 17. வண்ணவிழி தேடும் வருகையெண்ணி வார்த்தகவி
  எண்ணங் குவிந்த எழில் !

  அழகு கவிதை மிக அருமை
  வெற்றி உமதே வெற்றி உமதே
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம 9

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா மனமுவந்து பாராட்டிய பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 18. அழகிய கவிதை! இரசித்தேன்! வெற்றிபெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 19. மிகவும் இரசித்தேன். அழகான கவிதை.

  போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 20. அட..அட...எவ்வளவு அழகான ஆக்கம்! // எனைத்
  தென்மாங்கு பாட வைக்கும் காவியமே !
  //
  படத்திற்கு மட்டுமல்ல, உங்கள் கவிதைக்கும் பொருந்துகிறதே..வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 21. திண்ணையிலே காத்திருக்கும் எழில் ஓவியமே! எனைத்
  தென்மாங்கு பாட வைக்கும் காவியமே !
  வெண்ணையினைத் தான் திருடிச் செல்ல வந்தேன் உன்றன்
  விழியொளியில் அகப்பட்டேன் திருடன் ஆனேன் !//

  அருமையான் கவிதை
  . இதயச்சிறையில் காலமெல்லாம் இருக்கட்டும் திருடன்., வாழ்க வளமுடன்.
  வாழ்த்துக்கள் வெற்றிபெற.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 22. அருமையா இருக்கு.. வெற்றீ அம்பாளடியாளுக்கே... வாழ்த்துக்கள் + வோட்டும் போட்டிட்டேன்ன்ன்.. ரீ ஒரு கப் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்>.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ என் அன்புச் சகோதரியே ரீ என்ன பாயசமே தருகின்றேன் :)))அமோகமான இந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றிடா ..

   Delete
 23. அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........