நல்ல நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும்!
நாள் முழுதும் இன்பமாக வாழ வேண்டும்!
அல்லல்களைப் போக்கும் சக்தி எம்மிடத்திலே
அடங்கி ஒடுங்கிக் கிடப்பதையே உணர வேண்டும்!
வில்லங்கத்தை எவருமிங்கே விலக்க வேண்டும்
வீதியிலே இறங்கும் போதும் அமைதி வேண்டும்!
மெல்ல மெல்லத்தான் வாழ்வில் உயர வேண்டும்!
மேதினியில் புகழ் நிலைக்க உழைக்க வேண்டும்!
பொய்யாலே கோட்டை கட்டியவர் வாழ்ந்ததுமில்லை!
போதுமென்ற மனம் படைத்தவர் தாழ்ந்ததுமில்லை !
மெய்யாலே மேன்மை குன்றிப் போனதுமில்லை!
மிருதுவான நற்குண மிருந்தால் தொல்லையுமில்லை !
கொய்யாதே பிறர் வாழ்வு கூந்தலுமில்லை!
கோவத்தால் ஆனதிங்கே ஒன்றுமேயில்லை !
தொய்யாத பண்புள்ளவர் தோத்ததுமில்லை!
தோல்வி என்ற வாசகத்தைப் பார்த்ததுமில்லை !
எண்ணாதே எவருமிங்கே சளைத்தவரில்லை!
இறுமாப்பு உடையவர்கள் பிழைத்ததுமில்லை !
மண்ணாசை பெண்ணாசை தந்த பெரும் தொல்லை
மானத்தை எந்நாளும் விட்டு வைத்ததேயில்லை !
வணக்கம் !
ReplyDeleteஎனது அன்பார்ந்த வலைத்தள சொந்தங்களே அனைவரினதும் நல்
வாழ்த்திற்கும் நலன் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி ! இப்போது உடல்
நலன் நன்கு தேற்றம் அடைந்து வருகின்றது கவலை கொள்ள வேண்டாம் உறவுகளே தங்களின் பேராதரவிற்கும் அன்பிற்கும் நான் தலை வணங்குகின்றேன் வாழ்க வளமுடன் !
தங்கள் உடல் நலம் தேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி! சகோதரி! இறைவன் அருள்வார் சகோதரி!
ReplyDeleteகண்ணாலே காண்பதுதான் உண்மையு மில்லை
கருணைக்கு இட மளித்தால் துன்பமு மில்லை!
இறுமாப்பு உடையவர்கள் பிழைத்தது மில்லை !
மண்ணாசை பெண்ணாசை தந்த பெரும் தொல்லை//
அருமையான வரிகள் ! ஓங்கு தமிழில் உரைத்திட்டீரே பாங்காய் ஒருகவிதை!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
கவிதையின் வரிகளில் இரசனை சொட்டுகிறது .. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள்! ஆசையை துறக்க வேண்டும் அருமையாக உணர்த்தியது கவிதை! நலமுடன் பல நல்ல கவிதைகளை படைக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteகடைசி இரு வரியும் சரியான சாட்டை அடி !
ReplyDeleteஉடல்நலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி !
(த ம வாக்களிக்க முடியவில்லையே ,ஏன் ?)
t:m 2
ReplyDeleteezhuthu varavillai......
piragu varougiren thozhi.
ஆஹா உடல் நலம் பற்றிய பதில் இங்கேவா. உடல் தேறியமையில் மிக்க மகிழ்ச்சி தோழி.
ReplyDeleteஅருமையான அறிவுரை அனைத்தும் உண்மை பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்...!
நல்ல நல்ல பிள்ளைகளை வரவேற்று எழுதிய குழந்தைப் பாடலாய்த் தொனிக்கிறது.
ReplyDeleteத.ம.3
சகோதரியாரே தாங்கள் உடல் நலம் பெற்றமை அறிந்து மகிழ்கின்றேன்
ReplyDeleteபொய்யாலே கோட்டை கட்டியவர் வாழ்ந்தது மில்லை
ReplyDeleteபோதுமென்ற மனம் படைத்தவர் தாழ்ந்தது மில்லை !
முற்றிலும் உண்மை!
சகோதரி,
ReplyDeleteவணக்கம். வியந்து நிற்கிறேன்.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இளமதியார் , சகோதரி இனியா இவர்களுடன் நான் மரபுத்தடத்தில் இன்னுமொரு பெண்பாவலர்.
மகிழ்ச்சி!
மகிழ்ச்சி!
பாடலை வாய்விட்டுப் படித்துப் பார்க்கிறேன்.
அருமை!
பகிர்விற்கு நன்றி!
மெல்ல மெல்லத்தான் வாழ்வில் உயர வேண்டும்
ReplyDeleteமேதினியில் புகழ் நிலைக்க உழைக்க வேண்டும்!//
நன்றாக சொன்னீர்கள்.
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.