வெண்கொற்றக் குடையின் கீழே
வீற்றி ருக்கும் பெருமானே
பெண்பட்ட பாட்டை அறிந்தும்
பேசா திங்கே இருப்பாயோ !
புண்பட்ட மனத்தின் வலியைப்
புறம் தள்ளி வணங்குகின்றோம்
கண்பட்டுப் போன குடியைக்
காத்தருள வர வேண்டும்...
மான் என்றே துரத்திப் பிடிப்பார்
மயில் என்றே ஆட்டிவிப்பார் !
ஏன் என்று வினவா திருந்தால்
எந் நாளும் துயரைக் கொடுப்பார் !
நான் என்ற அகந்தை யுடையோர்
நலன் குன்றிப் போக அருள்வீர்
வான் சிந்தும் மழையின் ஆற்றல்
வற்றாது காக்கும் இறைவா !..
பெண்ணுக்குச் சம உரிமைதனை
போற்றும் வகையில் தந்தவனே!
விண்ணுக்கும் வேந்தே ஒளியே
வெண்தாமரை மலரே கனியே !
மண்ணுக்குள் விழைந்த பொருளே
மாவிளக்கே எங்கள் தோரணமே
கண்ணுக்குள் எம்மை வைத்துக்
காத்தருள வர வேண்டும் !..........
பெண்ணுக்குப் பாகம் பெருமையாய்த் தானீந்தான்!
ReplyDeleteஎண்ணுவோம் எம்முடன் என்று!
அருமையான இசைப்பாடல்!
வாழ்த்துக்கள் தோழி!
நன்று நன்று நமச்சிவாயன் தாள் பணிதல்!
ReplyDeleteஉங்களின் கோரிக்கை பரிசீலிக்கப் படட்டும் !
ReplyDeleteத ம 3
அருமை
ReplyDeleteதம 3
ReplyDeleteவணக்கம்!
உமையொரு பாகனை ஓதி வணங்கத்
சுமையெலாம் போகும் சுருண்டு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை.
ReplyDeleteஅழகு தமிழ்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
வாழ்த்துகள் அம்பாளடியாள் வலைத்தளம்
ஆஹா அருமையான வேண்டுதல் தோழி அது தானே சிவனே தான் உடலில் பாதியை வழங்கி ஆணும் பெண்ணும் சரி பாதி என்று உணர்த்தியும் மானிடவர்க்கு ஏனோ புரியவில்லையே தோழி மிகவும் வருத்தம் தர வல்லதுவே. நன்றி வாழ்த்துக்கள் .தோழி ...!
ReplyDeleteஆமா இப்போ உடல் நலம் எப்படி தோழி கால்கள் தேறிவிட்டனவா. விரைவில் நலம் பெற இறையருள் கிட்டட்டும் தோழி.
தமிழ்களஞ்சியத்தில் இந்தவார வெற்றியாளராக
ReplyDeleteவலம் வருவதற்கு இனிய வாழ்த்துகள்.
வணக்கம் !
ReplyDeleteஎனது அன்பார்ந்த வலைத்தள சொந்தங்களே அனைவரினதும் நல்
வாழ்த்திற்கும் நலன் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி ! இப்போது உடல்
நலன் நன்கு தேற்றம் அடைந்து வருகின்றது கவலை கொள்ள வேண்டாம் உறவுகளே தங்களின் பேராதரவிற்கும் அன்பிற்கும் நான் தலை வணங்குகின்றேன் வாழ்க வளமுடன் !
பெண்ணுக்குச் சம உரிமைதனை
ReplyDeleteபோற்றும் வகையில் தந்தவனே! //
ஆம் அர்த்தநாரீஸ்வரத்தத்துவமே அதுதானே! மனிதந்தான் அதைக் கற்கவில்லை!
தங்கள் நலம் காப்பார் அந்த அர்த்தநாரீஸ்வரர்!
வாழ்த்துக்கள் ..
ReplyDeleteகண்ணுக்குள் எம்மை வைத்துக்
ReplyDeleteகாத்தருள வர வேண்டும் !...//
அருமை.
வாழ்த்துக்கள்.