8/13/2014

இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு


இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு
இதயம் இங்கே வலிக்குதடா ........
உரங்கள் மேலும் போட்டுப் போட்டு விதியும்
உரசிப் பார்த்து மகுழுதடா ...

வரங்கள் அருளும் சாமிக்கும் தான்
வாழ்க்கை இங்கே கசக்குதடா ....
சுரங்கள் தப்பிப் போன கீதமே எம்
சொந்த மண்ணில் ஒலிக்குதடா  .....

நிலை(மை) மாறும் மாறும் மாறும் என்ற
நினைப்பும் செத்துப் போனதடா......
தலை தாழும் நிலையில் வாழும் ஆசைகள்
தானாய் ஓடி மறையுதடா .....

தமிழா தமிழா தமிழா எங்கள்
தாயின் மடியைப் பார்த்தாயா !!..
ஒருதாய் பெற்ற பிள்ளைகள் எங்கள்
உணர்வை ஒன்று சேர்ப்பாயா ...???

மரங்கள் பேசி மகிழும் மண்ணின்
மகிமை உணர்த்த உறவுகள் நாம்
தரங்கள் பார்த்துப் பிரியும் போது
தாக்கம் இனியும் பெருகுமடா .......

அடிமை விலங்கை உடைத்தெறியும்
ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்
விடை நீ கூறு எம் விழியைப் பாரு
வீதியில் போகட்டும் வேற்றுமை தான் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    அடிமை விலங்கை உடைத்தெறியும்
    ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்
    கவிதையின் வரிகள் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி அம்மா
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //அடிமை விலங்கை உடைத்தெறியும்
    ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்
    விடை நீ கூறு எம் விழியைப் பாரு
    வீதியில் போகட்டும் வேற்றுமை தான் ....// உண்மை தோழி
    அருமையான கவிதை..வாழ்த்துகள்!
    த.ம.2

    ReplyDelete
  3. உணர்வுகள் எப்போது ஒன்றாகும் அன்றே
    இனமும் களிக்கு(ம்) இணைந்து!

    இனம் உணர்வுபெற இசைத்தீர் ஒரு பாடல்!
    கரங்களை இணைத்தே காண்போம் வெற்றி!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  4. தமிழா தமிழா தமிழா எங்கள்
    தாயின் மடியைப் பார்த்தாயா !!..
    ஒருதாய் பெற்ற பிள்ளைகள் எங்கள்
    உணர்வை ஒன்று சேர்ப்பாயா ...???

    அடிமை விலங்கை உடைத்தெறியும்
    ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்// ஆம் உண்மையே! மிக அருமையான கவிதை சகோதரி! நிச்சயமாக அந்த ஒற்றுமை வெற்றி பெறச் செய்யும் சகோதரி!

    ReplyDelete
  5. //அடிமை விலங்கை உடைத்தெறியும்
    ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்//
    உண்மைதான் சகோதரியாரே
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    ReplyDelete
  6. ஆயுதங்கள் தேவை இல்லைதான் ஒற்றுமை வந்து விட்டால் !
    த ம 8

    ReplyDelete
  7. அடிமை விலங்கை உடைத்தெறியும்
    ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்//

    ஒற்றுமை ஒன்றே பலமாம் என்று முன்னோர் சொல்லிவிட்டதை நீங்களும் உங்கள் கவிதையில் உணர்த்தி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........