8/20/2014

தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்



தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்
 துய்ய நின் பாதத்தைத் தொழுது ஜெயிப்போம் !
சூது  கவ்வும் இடத்திலெல்லாம் தோன்றும் சக்தியே
  சித்த மெல்லாம் உன் நாமம் பத்தி எரிகவே !
சாது எங்கள்  மனத்தினிலே வீரம் பொங்கவே
  சக்தி கொடு எந்நாளும்  வெற்றி கிட்டவே!
காது குளிர அழைக்கின்றோம்  தேவி துர்க்கையே
   கருணையோடு களமிறங்கி காத்தருள்கவே !

பஞ்சமியில் படை திரட்டி வந்த துஷ்டரை
    பரலோகம் அனுப்ப வல்ல சக்தி நீயடி !
தஞ்சமென்று நின் பாதம் தொழுது நிற்கின்றோம்
    தாயே          வா தர்மத்தைக் காத்து அருளிட !
வஞ்சகரால் வந்த துயர் நெஞ்சைக் கொல்லாமல்
   வாழ்   வெல்லாம் ரணமாகி வருந்திப் பிழைக்காமல்
பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....
    பார் போற்றும் சக்தியே நின் பாதம் பணிகிறோம் ..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. வணக்கம்
    அம்மா
    நிச்சயம் இறைவி துணைநிக்கும் உள்ளம் உருகி பாடிய கவி நன்றாக உள்ளது.பகிர்வுகு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சக்தியிடம் வேண்டும் வரம் சிறப்பு.

    ReplyDelete
  3. உண்மைதான் பராசக்தி தான் மீண்டும் அவதாரம் எடுத்து பாதகங்களை அழிக்க வேண்டும்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. எல்லோருக்கும் விழிப்பும் வீரமும் தரும் கவிதை.
    த.ம.1

    ReplyDelete
  5. //வஞ்சகரால் வந்த துயர் நெஞ்சைக் கொல்லாமல்
    வாழ் வெல்லாம் ரணமாகி வருந்திப் பிழைக்காமல்
    பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....//
    விரைவில் நடக்கும் சகோதரியாரே

    ReplyDelete
  6. வீறு கொண்ட பாடல்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  7. வேண்டி நின்ற கவிதை அருமை! சகோதரி!

    வஞ்சகரால் வந்த துயர் நெஞ்சைக் கொல்லாமல்
    வாழ் வெல்லாம் ரணமாகி வருந்திப் பிழைக்காமல்
    பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....
    பார் போற்றும் சக்தியே நின் பாதம் பணிகிறோம் ..//

    வருவாள் சக்தி! வேண்டும் வரம் தருவாள்!

    ReplyDelete
  8. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  9. #பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....#
    உங்கள் கோரிக்கை நிறைவேறினால் எனக்கும் சநதோசம்தான்!
    த ம 5

    ReplyDelete
  10. பார் போற்றும் சக்தியே நின் பாதம் பணிகிறோம் ..!

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_22.html

    ReplyDelete
  11. பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....
    பார் போற்றும் சக்தியே நின் பாதம் பணிகிறோம் ..//

    சக்தி வருவாள் நலம் தருவாள்.
    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........