8/26/2014

அருளும் நீயே பொருளும் நீயே


அருளும் நீயே பொருளும் நீயே
        ஆதி அந்தம் அனைத்தும் நீயே !
வெருளும் மனத்தின் சக்தி  நீயே
   வேண்டும் வரத்தை அளிக்கும் தாயே!
உருளும்   உலகில் உனையே நினைத்தேன்
    ஊனுட லிலும் அதையே தரித்தேன்
இருளைப் போக்க  வருவாய் தாயே
    என்றும் நல்லருள் தருவாய் தாயே ...

துணிவைத்    தந்து காக்கும் சக்தியே 
   துணையாய் என்றும் விளங்கும் சக்தியே 
பணிவை  எம்முள் வளர்க்கும் சக்தியே 
   பாசம்   நிறைய வைத்த சக்தியே 
அணியும் உடையும் நீதானே என்றும்
   அன்பாய் மானம் காப்பவளே! துயர்
தணியும் வரையும் வந்த ருள்வாய்
     தூய  சக்தியே துணை நீயே !

முக்கனிச் சாற்றை ஏந்தி வந்தோம்
    மூத்தவள் உனக்கே படைத்து நின்றோம்
எக்கனிச் சாற்றையும் மிஞ்சிடும் சுவையே
    ஏழை எம் மனத்தினில்  குடிபுகுவாய்
துக்கனி வாரணி நீயம்மா எமக்கு !
    தோணியும் ஏணியும் நீயம்மா !
பக்க விளைவினைத் தடுத்தருள்வாய் -செல்லும்
    பாதையில் ஒளியாய் நின்றருள்வாய்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தியே
   உயிர் களைக்காக்கும் மகாசக்தியே
நாம் சக்தி  பெற்றிட வந்தருள்வாய்
   நல்லதைக் கெட்டதைச் சொல்லிடுவாய்
காம்புகள் பூக்களைத் தாங்கிடலாம்
   கதிரவன் துணையென நின்றிடலாம்
வேம்புகள் நச்சினைப் போக்கிடலாம்
    வேதமே உனையிவை வென்றிடுமோ !
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

 1. உருளும் உலகில் உனையே நினைத்தேன்
  ஊனுட லிலும் அதையே தரித்தேன்
  இருளைப் போக்க வருவாய் தாயே
  என்றும் நல்லருள் தருவாய் தாயே ...

  சுற்றும் உலகை சொல்லி
  பற்றும் இருளைப் போக்க
  கற்றத் தமிழில் கவிதை
  பெற்றுத் தந்தாய் வாழி!

  ReplyDelete
 2. எங்கெங்கு காணினும் சக்திதான் என்பதனை அழகாகச் சொன்னீர்கள்!
  த.ம.2


  ReplyDelete
 3. அருளும் நீயே பொருளும் நீயே
  ஆதி அந்தம் அனைத்தும் நீயே !
  வெருளும் மனத்தின் சக்தி நீயே
  வேண்டும் வரத்தை அளிக்கும் தாயே!

  எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவள்தானே சக்தி!! அழகு வரிகள் சொல்லி சக்தியை அழகுப் படுத்திவிட்டீர்கள்!

  ReplyDelete
 4. அன்னையாம் சக்தி அவள்புகள் பாடிட
  நன்மை பெருகும் நயந்து !

  அழகிய பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோ
  வாழ்க வளமுடன்
  தம 3

  ReplyDelete
 5. அருமை தோழி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. முக்கனிச் சாற்றை ஏந்தி வந்தோம்
  மூத்தவள் உனக்கே படைத்து நின்றோம்
  எக்கனிச் சாற்றையும் மிஞ்சிடும் சுவையே
  ஏழை எம் மனத்தினில் குடிபுகுவாய்
  துக்கனி வாரணி நீயம்மா எமக்கு !
  தோணியும் ஏணியும் நீயம்மா !
  பக்க விளைவினைத் தடுத்தருள்வாய் -செல்லும்
  பாதையில் ஒளியாய் நின்றருள்வாய்
  அருமை அருமை ! தோழி என்னே வார்த்தைகள்!

  நிச்சயம் அருள்வாள் அன்னை சக்தி
  அன்புடன் நெகிழ்ந்து !

  ReplyDelete
 7. வணக்கம்
  மனதை உருகவைக்கும் கவி நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  த.ம5வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தியே
  உயிர் களைக்காக்கும் மகாசக்தியே
  நாம் சக்தி பெற்றிட வந்தருள்வாய்
  நல்லதைக் கெட்டதைச் சொல்லிடுவாய்//
  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சக்தியிடம் எல்லாம்! அருமைக்கவி.

  ReplyDelete
 11. இனிய காவிதை! நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

  ReplyDelete
 12. துக்கநி வாரணி நீயம்மா எமக்கு..
  தோணியும் ஏணியும் நீயம்மா!..

  தங்களின் பாமாலையைக் கண்டு பரவசம் ஆகின்றது உள்ளம்!..

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........