மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....
வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......
(மரண ஓலம் கேட்கிறது )
குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....
மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......
(மரண ஓலம் கேட்கிறது )
சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......
பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....
(மரண ஓலம் கேட்கிறது )
மதம் என்ன இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........
கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த உலகினில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....
(மரண ஓலம் கேட்கிறதே....)
ReplyDeleteசிறந்த பாவரிகள்
தொடருங்கள்
படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
அள்ளி வீசிய வார்த்தைகள் கவிமுத்தாக மலர்ந்த விதம் கண்டு மகிழ்ந்தேன்
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொன்றவர் எவரும் வாழ்ந்ததில்லை
ReplyDeleteதம 2
இன்றைய சமூக நிலவரத்தை அழகாக கவிதையில் காண்பித்து விட்டீர்கள்.
ReplyDeleteகாசாவில் இறந்தோர் எண்ணிக்கை 1500யை தாண்டி விட்டதென்று சொன்னார்கள் .என்றுதான் தீருமோ இன ,மத அடிப்படை சண்டைகள் ?பூஉலகில் சாந்தி நிலவும் நாள் எந்நாளோ ?
ReplyDeleteத ம 3
மனிதர்கள் மனிதர்களாக ஆகவேண்டிய நாளை நாம் எதிர்பார்க்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டோம். வேதனை.
ReplyDeleteமனிதம் கொன்று மனிதம் வாழும் நிகழ்வுகள் வேதனை!
ReplyDeleteஉள உணர்வை உலுக்கும் கவிதை!
வாழ்த்துக்கள் தோழி!
எத்தனை கொலைகள்.......
ReplyDeleteஎன்று தான் மாறுவார்களோ?
வேதனையாக இருக்கிறது.
ReplyDeleteமரண ஓலங்களை நிகழவைப்பவர்களையும் ஒரு நாள் மரணம் தழுவும்! வேதனை ததும்பும் வரிகள்! அருமையான பாடல்! நன்றி!
ReplyDeleteஎத்தனைக் கொலைகள்
ReplyDeleteஎத்தனை மரணங்கள்
என்று தணியும் மரண ஓலம்
என்று கேட்கும் மக்களவர்க்கு
என்ன பதில் உரைத்திட முடியும்?!!
கவி அருமை! ஆயின் மனம் வெறுமை! சகோதரி!
ஆக்கம் செய்யத் துணியாது
ReplyDeleteநோக்கும் செயலும் அழித்திடவே
மரணம் ஒன்றே வெல்லும் என்று
விரதம் கொண்டே வாழுகின்றார்
ஓலம் ஒழியும் நிலை வருமோ
காலம் பதில் தான் சொல்லிடுமா
கரையும் உள்ளம் நிலை பெறுமா
விரைந்தே ஓயும் நிலை வருமா?
அருமை அருமை உருக்கமான கவிதை வாழ்த்துக்கள் .....!
ReplyDeleteவணக்கம்!
உள்ளத்துள் பொங்கும் உணர்வுகளைப் பாய்ந்துவரும்
வெள்ளத்துள் தந்தனை வெந்து
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு