அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு
அம்மா துடிக்கின்றாள்
அவள் அடி மடி மீது கையை வைத்தவன்
இடியாய் இடிக்கின்றான்
கொலைவெறி கொண்ட நாகமும் நரியும்
கூட்டாய்ச் சதி செய்ய
எதிரியின் கைகளில் மலர்களைத் தந்து
எங்கே நான் செல்ல ?......
விடியலைத் தேடும் பறவைகள் இவர்களின்
முடிவை யார் அறிவார் ?..!!
கருணையின் கடலே கற்பகத் தீவே
காப்பாய் மிக நன்றே .....
பொழுதுகள் புலருது பூக்களும் கருகுது
பூமியில் தினந்தோறும்
அழுபவர் குரல்களை நசுக்கிடும் கொடியவர்
அழிவுற வழி செய்வாய் ....
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாளமும் தப்பாமல்
எடு எடு வேலைத் தொடு தொடு நாளும்
எதிரியின் பலம் குன்ற ...
சூரனை வதைத்த நாயகனே
சுப்ரமண்ணிய பாலகனே
பூரண நிலவே பொற்குடமே
புதுயுகம் அமைத்துத் தந்திட வா ....
நடைமுறை வாழ்க்கையையும், முருக கடவுளையும் இணைத்திருப்பது அழகாக இருக்கிறது.
ReplyDeleteநல்ல வேண்டுதல் பலிக்கட்டும் !
ReplyDeleteத ம 1
புதுயுகம் விரையில் அமையும் சகோதரியாரே
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
பகைவனை மாய்த்திடும் கவி கண்டு மகிழ்ந்தேன்
த.ம3வது வாக்கு
ReplyDeleteவணக்கம்!
இருளும் அகன்றோட எண்ணம் உரைத்தாய்
முருகன் திருவடி முன்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
முருகன் அருள் விரைவில் கிடைக்கட்டும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசூரனை வதைத்த நாயகனே
ReplyDeleteசுப்ரமண்ணிய பாலகனே
பூரண நிலவே பொற்குடமே
புதுயுகம் அமைத்துத் தந்திட வா ....
முருகா என்றழைத்திட்டால்
ReplyDeleteஅருகே ஓடி வந்திடுவான்!
சடுதியில் வந்து காத்திடுவான்
கொடுந்துயர் எல்லாம் போக்கிடுவான்!!
சகோதரி அருமையான கவிதை!! உங்கள் கவிதை வாசித்தவுடன் ஏதோஎங்களுக்கும் தோன்றவே எழுதிவிட்டோம் கவிதை போன்று??!! சில வரிகள்
உள்ளம் உருக வைக்கும்
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteவெந்தணல் போலெழும் வேதனைகள் மாறும்நற்
கந்தன் அருளால் கனிந்து !
புவனம் எரியப் புயலிடிவந் தாலும்
சிவனடியார்க் கில்லை சிதைவு !
அழகு அருமை வாழ்த்துக்கள் சகோ அம்பாள்
வாழ்க வளமுடன்
தம 8
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ReplyDeleteதாளமும் தப்பாமல்
எடு எடு வேலைத் தொடு தொடு நாளும்
எதிரியின் பலம் குன்ற ...
அருமை சகோதரி.