( பட இணைப்பு -2)
தீயே.. தீயே.. தீர்ந்துவிடாதே!
தீயே ..தீயே.. தீர்ந்துவிடாதே! சில
தியாகம் இன்னும் இருக்கிறதே!
உடல் எரியும் உள்ளம் எரியாது
உணர்வுகளைக் கொல்ல முடியாது!
மனிதனை மனிதன் மறக்கிற பொழுதினில்
மரணமும் இனிக்குமடா! -ஒரு
புனிதனை உயர்வாய் நினைக்கிற பொழுதுதான்
பூக்களும் சிரிக்குமடா!
எரிமலை எங்களைத் தாக்கிடும் பொழுதினில்
எதிரிக்கு மகிழ்ச்சியடா!
நாம் உன் எதிரியு மில்லை
நண்பனு மில்லை ஏனிந்த சூழ்ச்சியடா?
கொடுமைகள் கண்டு கொதிப்பவன் அவனே
கோடியில் ஒருத்தனடா!
எம் கோபமும் தாபமும் நியாயமே இங்கு
ஏன் இந்த வருத்தமடா?
சிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும்
சிந்தையில் வலிக்குமடா! நீ எங்கள்
சீவனை வதைத்துப் போகிற பொழுதிலா
சிரிப்பொலி கேட்குமடா!
விடுதலை தாகம் எம துயிர் தேகம்
வீணரே அறிவீரோ! எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ?
( தீயே ..தீயே. தீர்ந்து விடாதே !)
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் ,யாழ்பாவாணன்
ஐயா இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்
போட்டி 2014 க்குரிய கவிதை இது .பங்குபெறும் அனைவருக்கும் என்
இனிய நல் வாழ்த்துக்கள்
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html
சிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும் சிந்தையில் வலிக்குமடா
ReplyDeleteஅற்புதமான புரட்சிக்கவி அருமை சகோதரி வெற்றி உமதே என வாழ்த்துகிறேன் இன்றைய எனது மௌனமொழி காண்க... நன்றி.
அன்புடன்
கில்ல்ர்ஜி.
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஆஹா என்ன ஒரு அழகான வலிகள் நிறைந்த பாடல்
ReplyDeleteமேலும் மேலும் ஆக்கங்கள் தர நெஞ்சார வாழ்த்துகிறேன் !
புரட்சி மழையில் புரண்ட வரிகள்
திரட்டும் தியாக திமிர் !
தம 2
மிக்க நன்றி சகோதரா மனமுவந்து பாராட்டியா பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் .
Deleteஇசைப்பாடல் தந்தவுனக்(கு) ஏதிணை? வெற்றித்
ReplyDeleteதிசையுனதே! வீறொடு செல்!
புரட்சிக் கவிதை சிறப்பு!
வெற்றி உமக்கே ஆகட்டும்! வாழ்த்துக்கள் தோழி!
என் அன்புத் தோழியின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !
Deleteகொடுமைகள் கண்டு கொதிப்பவன் அவனே
ReplyDeleteகோடியில் ஒருத்தனடா..
எம் கோபமும் தாபமும் நியாயமே இங்கு
ஏன் இந்த வருத்தமடா?!..
அலைகடல் போன்று ஆர்ப்பரிக்கின்றது உள்ளம்!..
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் .
Deleteவிடுதலை தாகம் எம துயிர் தேகம்
ReplyDeleteவெற்றி காணும் திருநாள் விரைவி; வந்தடையட்டும்.!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteகவிதை மிக நன்றாக இருக்கிறது.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Deleteஅருமையான கவிதை . போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Deleteஉங்கள் கால் நல்லபடியாக குணமாக வாழ்த்துக்கள்.
புரட்சிப் பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் !
ReplyDeleteத ம 4
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஅருமை..அருமை.. என் கவிதைகளைக் காண நேரம் இருப்பின் வாருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .நிட்சயம் வருவேன் .
Deleteசிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும்
ReplyDeleteசிந்தையில் வலிக்குமடா !நீ எங்கள்
சீவனை வதைத்துப் போகிற பொழுதிலா
சிரிப்பொலி கேட்குமடா? .........
விடுதலை தாகம் எம துயிர் தேகம்
வீணரே அறிவீரோ ?!எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ ?....!!
ஆகா அருமை அருமை நெஞ்சை உருக்கும் நியாயமான பாடல் வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி ....!
என் அன்புத் தோழியின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி .
Delete
ReplyDeleteவணக்கம்!
கொட்டும் முரசடித்துக் கூவிய சொல்லெல்லாம்
வெட்டும் பகையை விரைந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் !
Deleteமிக்க நன்றி ஐயா வருக்கைக்கும் இனிய நற் கருத்திற்கும் !
வணக்கம்
ReplyDeleteபுரட்சி கவிதை படிக்கும் போது. மனதை கலக்கியது சொல் வீச்சுக்கள். ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது.. தங்களின் கவிதை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் !
Deleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
விடுதலை தாகம் எம துயிர் தேகம்
ReplyDeleteஅருமை சகோதரியாரே
வெற்றிபெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteதம 6
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா .
Delete// நாம் உன் எதிரியு மில்லை
ReplyDeleteநண்பனு மில்லை ஏனிந்த சூழ்ச்சியடா ?.....!! //
அருமை! அருமை! செங்காந்தள் மலருக்குள் பூத்த செந்தணல் கவிதை! ஆனாலும் சூழ்ச்சிதான் உலகில் நம்மை பலிகடாவாக பலியாக்குகிறது என்பதே உண்மை!
கவிதைப் போட்டியில் வெற்றி பெற இந்தக் கவிதைக்கு வாய்ப்பு அதிகம்! வாழ்த்துக்கள்!
Tha.ma.9
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் மனமார்ந்த நல் வாழ்த்திற்கும் .
Deleteவிடுதலை தாகம் எம துயிர் தேகம்
ReplyDeleteவீணரே அறிவீரோ ?!எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ ?....!!
அடைமழை ஆனது அம்பாள் கவிதையடா-இவை
தடையெதும் இல்லா தமிழ்நதி வெள்ளமடா
ஐயனின் திருவாய் மலர்ந்திங்கே உதிர்த்த நற் கருத்தால்
Deleteபெற்ற வருவாய் போதும் என் வண்டமிழ்க் கவிதையே !!
மிக்க நன்றி ஐயா !
இரண்டு கவிதைகளையும் படித்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஐயனின் வாழ்த்திதனை அமுதென உணர்தேன் மகிழ்வுற்றேன் !
Deleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
உணற்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களை
ReplyDeleteவிஞ்சும் அளவுக்கு தங்கள் கவிதை வீச்சு
அமைந்து எங்கள் உணற்சி நரம்புகளை
தட்டி எழுப்பும் உயிருள்ள பாவரிகள்!
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html என்ற இணைப்பில்
போட்டிக்கான "கவிதை எழுத வேண்டிய ஓவியம்" என
வேறொரு வண்ணப்படம் காணப்படுகிறதே!
முடிவுகள் நடுவர்களின் கையில்...
வெற்றி பெற வாழ்த்துகள்!
வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா !
Deleteஒரு படம் போட்டிக் குழுவினரால் தரப்பட்டது மற்றுமொரு
படத்தை நாமே தேர்வு செய்து அதற்குப் பொருந்தும் வகையில்
கவிதையை வடிக்கும்படி அறிவித்திருந்தனர். அந்த வகையில்
என் முதற் கவிதை வரிகள் இவை ..
http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html
அடுத்தபடியாக சுய தேர்வின் அடிப்படையில் வந்த படம் இது
இதற்கான கவிதை வரிகள் இவை !
http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html
மீண்டும் ஒரு முறை தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .
தாங்கள் பெரிய உள்ளம் படைத்தவர்
Deleteதங்கள் படைப்பின் பார்வை நன்று
சின்னப் பொடியன் நான் பார்த்ததில்
சின்னதாகப் படங்களில் குழம்பி விட்டேன்
என்னை மன்னிக்கவும் - எனது
வாசகர்களுக்கும் தங்கள் படைப்பின் சிறப்பையே
படித்துப் பயன்பெறலாமெனப் பகிருகிறேன்!
அருந்தமிழை நாம் வணங்கும் செந்தமிழை வளர்க்கும் பணியின் நடுவில் தாங்கள் ஏதோ ஒரு சின்ன அயர்வின் நிமிர்த்தம் இந்த ஒரு சின்ன விசயத்தைத் தவற விட்டு விட்டிருப்பீர்கள்
Deleteஇதற்காக ஒன்றும் மனம் வருந்த வேண்டாம் ஐயா ! தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியினால் தான் நாமும் சிறப்பான ஓர் ஆக்கத்தைத் தந்து மகிழ்வின் உச்சியில் நிற்கின்றோம் !எங்களை மகிழ வைத்த தாங்கள் மனம் வருந்துவது தவறு. மென்மேலும் இது போன்ற போட்டி நிகழ்வுகள் தங்களைப் போன்றவர்களால் தான் உருவெடுக்கவும் வேண்டும் ஐயா .நான் உங்கள் தமிழ்ப் பற்றை எண்ணி இன்னமும் பூரித்துப் போய் நிற்கின்றேன் சொல்லப் போனால் என்றென்றும் என் பாராட்டிற்கும் வணக்கத்திற்கும் உரியவர் ஆகிவிட்டீர்கள் தாங்கள் !மகிழ்வு கொள்ளுங்கள் ஐயா அது போதும் எனக்கு !
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் !
Deleteஅற்புதம்! இரசித்தேன்! வெற்றிபெற வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் !
Deleteசிறப்பான புரட்சிக் கவிதை.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Delete//உடல் எரியும் உள்ளம் எரியாது
ReplyDeleteஉணர்வுகளைக் கொல்ல முடியாது...// உண்மையே!
அருமையான கவிதை தோழி..படமும் அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteபடத்துக்கேற்ற உணர்வுபூர்வமான கவிதை... போட்டியில் வெற்றீ கிடைக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி வருகைக்கும் வாழ்த்திற்கும் !
Deleteநல்ல கவிதை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவிதை அருமை! போட்டியில் வெற்றியடைய என் அன்பு வாழ்த்துக்கள்!!
ReplyDelete