உணர்வும் நீயே
வந்து விடு
நீயே வந்து விடு
இந்தத் தனிமை
கொடுமை கொடுமை
இதனைக் கொன்று விடு
நீயே.. கொன்று விடு
உயிரே...... என்
ஏழிசையில் கலந்து
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ நின்றதென்ன!
என் தலைவன் என நீ நின்றதென்ன!
அந்த உறவைக் கலைத்து எம்
உயிரைப் பிரித்து
விதி சதியை வளர்திங்கு சென்றதென்ன!
அன்பே சென்றதென்ன!
மலர் கருகும் நேரம்
இன்றும் உனது தாகம்
அதை அறிய வேண்டும் நீ தானே!
ஒரு மெழுகைப் போல
உருகி உருகி உன்னால் இங்கு
கவிதை வடித்தேன்
நான் தானே
அன்பை ரசித்து மகிழ்ந்து நீ
என்னுள் இருக்கும் பொழுதில் தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது
அன்பே வா அன்பே வா ......
நீ வரும் வழியைப் பார்த்து
இந்த விழிகள் பூத்திருக்கும்
என் உயின் கீதமென
அன்பே வா அன்பே வா
(உயிரே என் உயிரின்)
நல்ல பாடல்...
ReplyDeleteஏங்க வைக்கும் வரிகள்...
மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteபிராத்தனைப் பலிக்கட்டும்.வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் .
Deleteநல்ல கவிதை. வாழ்த்துகள்....
ReplyDeleteநல்ல பாடல், அழகாக உள்ளது. பாட்டாக படிக்கலாம் என முயற்ச்சித்தேன், எனக்குத்தான் பாட தெரியல. ஏக்கம் நிறைந்த அழகான பாடல்...
ReplyDeleteத.ம: 3 போட்டுட்டேன்...
அழகு கவிதை, வாழ்த்துகள்...
இப் பாடலைப் பாடிப் பார்த்தே தான் எழுதியுமுள்ளேன் சகோதரரே .
Deleteமிக்க நன்றி வருகைக்கும் பாராட்டிற்கும் .
ada...
ReplyDeleteநன்றி சகோ .
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 4
இசைத்தேன் ஒழுக எழுதிய பாட்டை
இசைத்தேன்! இனித்..தேன் எதற்கு?
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் !
Deleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .
ஏக்கத்தினை மனவோட்டத்தினை உணர்த்தும் வரிகள் அருமை
ReplyDeleteஅழகான சினிமா பாட்டு வரிகள் போல உருகுவதாக இருக்கிறது கவிதை...!
ReplyDeleteகவிதையல்ல பாடலே தான் சகோ .மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteமிக மிக அருமை
ReplyDeleteஇதைவிட அருமையாகத் தனிமையின் சோகத்தை
தலைவனை எதிர்பார்க்கும் தாகத்தைச் சொல்வது கடினமே
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் சிறப்பான நல் வாழ்த்திற்கும் .
Deletetha.ma 5
ReplyDeleteநன்றி ஐயா .
Deleteஅருமையான பாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteநீ வரும் வழியைப் பார்த்து
ReplyDeleteஇந்த விழிகள் பூத்து இன்றும்
என் உயிரைத் தேடுதிங்கே
அன்பே வா .....அன்பே வா ......
ரசிக்கவைத்த வரிகள்..!
மிக்க நன்றி தோழி !
Delete