பொய்யாய் போலியாய்
வாழும் மனிதர்கள் முன்னே
பொறுமை இழந்து போகுதே
ஐயா உனக்கிது புரியாதா ?...!!!!
நல் ஆறுதல் நீயென்று தெரியாதா ....
வண்ணமயில் ஏறி
வந்து விடு நீயும்
எங்களுயிர் வாடும்
கந்தனுனைத் தேடும்
மண் மணக்குதே
மண் மணக்குதே
கந்தன் உன்றன் பாதம்
மண்ணில் பதிக்கயிலே !....
எண்ணமெல்லாம் இருப்பது
கந்தன் கவசம் இதை
ஏழ்பிறப்பும் மறவாமல்
நெஞ்சில் பதிப்போம் ......
துன்பம் வரும் வேளையில்
சேர்ந்து துதிப்போம் உன்றன்
தூய திருவடி அதனால்
நன்மை அடைவோம்.....
ஔவைக்கருள் புரிந்தவனே என்றும்
ஆனை முகத்தானுக்கு இளையவனே
வள்ளி தெய்வானை மணவாளனே நாம்
வேண்டும் வரம் தந்தருள வந்தருள்வாய் நீ....
(பொய்யாய் போலியாய் )
அழகன் முருகன் மீதொரு அழகிய பாமாலை. வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteஎப்போதும் வணங்குங்கள் எல்லாம் வல்ல முருகனையே
ReplyDeleteதமிழ்க் குமரனையே
மிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 1
முருகன் திருப்புகழை முற்றும் உணா்ந்தால்
உருகும் பனிபோல் உயிர்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் !
Deleteஉண்மைதான் உருகாதார் மனமும் உருகிவிடும் .மிக்க நன்றி ஐயா
வருகைக்கும் கருத்திற்கும் .
முருகனுக்கு ஓர் அழகிய பூமாலை, இப் பாமாலை.
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteஅருமையான கவிதை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபொய்யாய் போலியாய்
ReplyDeleteவாழும் மனிதர்கள் முன்னே
பொறுமை இழந்து போகுதே
பொறுப்பான பாடலுக்குப் பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteவேண்டும் வரம் தந்தருள வந்தருள்வாய் நீ...
ReplyDelete>>
அப்படி முருகன் நேரில் வந்தா எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க அக்கா!
எனக்கேவா ?...:)))) சரி சரி கிடைச்சா வந்து வாங்கிக்கோங்க தங்கச்சி :)
Deleteமுருகனைத் துதித்து ஒரு பாடல்....
ReplyDeleteநன்றாக இருந்தது சகோ. வாழ்த்துகள்.