7/13/2013

பஞ்ச புராணங்களை நெஞ்சில் நிறுத்துங்கள்அடியொத்தி வாழாத வாழ்வும் நன்றோ!!!..... 
நல்லடியார்கள் அருளிச்சென்ற பாக்கள் தன்னை
மனமொத்த வாழ்விற்கு மருந்தாகுமே அவை 
மறு ஜென்மம் எடுத்தாலும் விருந்தாகுமே 
திருஞான சம்பந்தர் அருளிச் செய்த 
தேவாரப் பதிகத்தை நாம் பாடிட 
இளகாத மனமும் தான் இளகுமிங்கே
இருள் சூழ்ந்த வானத்தில் நிலவைப் போல

ஒளியூட்டும் புராணங்கள் ஐந்தே வகை
இதை ஓதாதார் மனதிற்கே ஒல்கும் பகை
இறைஞான சக்திக்கு வித்தாய் நின்ற
அடியார் தம் அடியார்க்கும் அடியேன் நானே
வினை முற்றி நின்றாடும் வேளை தன்னில்  
ஊழ்வினையாலே வருகின்ற வலிகள் தீர
மனதாரப் பாடாத நாட்கள் இல்லை
மலர்கொன்றை அணிந்தவன் மீது ஆணையிதே

துதி பாடும் நாவுக்குத் துன்பமில்லை
துளை போட்ட (புல்லாங்)குழலுக்கு மனம் இணையாகுமே
இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நின்றாடிடும்
இறைவன் தம் இதயத்தில் குடிகொள்ளவும்
பஞ்ச புராணங்கள் எப்போதும் துணையாகுமே
பகலென்ன இரவென்ன மனமே ஓது ...
பலி கொண்டுழல்கின்ற மனதை வெல்லப்
படைத்தாரே நால்வர் தம் அருளால் அன்று !!!!..

இடர் வந்த போதெல்லாம் இன்பம் ஊட்டும்
இல்லாதார் எனும் சொல்லை மாற்றிக் காட்டும்
பகை நீங்கும் பற்றேதான் வாழ்வில் உயரும்
பரந்தாமன் அருளுக்கே மனமும் ஏங்கும்
துணிவேதான் துணை என்று உணரத் தோன்றும்
துயிலாதார் வாழ்விற்கும் நல் வழியைக் காட்டும்
அறிவாற்றல் புகழெல்லாம் வந்தே சேரும்
அகத் தூய்மை புறத் தூய்மை அனைத்தும் காக்கும் .

(16  ஆம் திகதியே என் பிறந்தநாள் :) )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

21 comments:

 1. சிறப்பான வரிகளுக்கும், பிறந்த நாளிற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முதல் வாழ்த்து எப்போதும் போல தங்களிடம் இருந்தே
   மகிழ்ச்சியாக உள்ளது சகோ .

   Delete
 2. புதிய முயற்சி மென்மேலும் தொடரவும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகின்ற 16 ஆம் திகதியே எனது பிறந்த நாள் :) வாழ்த்துக்கள்
   தொடரட்டும் .மிக்க நன்றி சகோ .

   Delete
 3. மனமார்ந்த இனிய் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  பஞ்ச புராணங்களை நெஞ்சில் நிறுத்தச்செய்த பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  புதிய முயற்சிகள் நன்கு ஒளிவீசிப்பிரகாசிக்கட்டும்.

  மக்கள் சமுதாயத்திற்கு அவை நல்ல எண்ணங்களை விளைவிக்கட்டும்.

  வாழ்த்துகள். பகிர்வுக்கும் அழைப்புக்கும் நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் ,வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா .
   வருகின்ற 16 ம் திகதிக்கும் இந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் .

   Delete
 4. நல்லதொரு இனிமையான முயற்சி.... அனைத்து படைப்புகளும் கவிதையில் இனிமையாக படைகடக வாழ்த்துக்கள்...


  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... முன்னதாகவே கூறிக்கொள்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. 16 ஆம் திகதி உங்களுக்கான ஸ்வீற்ரும் இங்கே காத்திருக்கும்
   வந்து எடுத்துக்கொள்ளுங்கள் சகோ :)

   Delete
 6. வாழ்க்கைக்கு முக்கியமான நல்லவைகளை மிக அழகாய் அற்புதமாய் வரிகளில் வகுத்த கவிதை அருமை அம்பாளடியாள்.... மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....

  மக்களுக்கு நின்று நல்லவைகளைச்சொல்லும் பொறுமை யாருக்குமில்லை... நல்லவைகளை சொன்னால் அதை படித்து நம் வாழ்க்கையை சீர் படுத்திக்கொள்ள அருமையான முயற்சி இது... அற்புதம்...

  ReplyDelete
  Replies
  1. மன நிறைவான இந்தப் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க
   நன்றி சகோதரி .

   Delete
 7. ஹலோ மேடம் வாழ்த்தனும்ன்னா ஸ்வீட், கேக், சாக்லேட்லாம் குடுத்தாதான் வாழ்த்துவோம்!!

  ReplyDelete
  Replies
  1. விடுவமா டாக்கடர் சுகர் ஏறிப் போச்சு என்று சொல்லும்வரைக்கும்
   ஊட்டியே விடுவோமில்ல :) ஆனா அதுக்கு இன்னும் மூன்று நாள்
   இருக்குது செல்லம் :)))))

   Delete
 8. துணிவேதான் துணை என்று உணரத் தோன்றும்
  துயிலாதார் வாழ்விற்கும் நல் வழியைக் காட்டும்
  அறிவாற்றல் புகழெல்லாம் வந்தே சேரும்
  அகத் தூய்மை புறத் தூய்மை அனைத்தும் காக்கும் .

  அம்பாளடியாளின் பிறந்த நாளை முன்னிட்டு இனிய வாழ்த்துகள்...!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி !!

   Delete
 9. முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... வளமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்...

  ReplyDelete
 10. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சகோ.

  ReplyDelete
 11. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. அம்பாளடியாளை இதுவரை அறியாமல் போனேனே என்று ஆதங்கமாக இருக்கிறது. ஆனந்தமாகவும் இருக்கிறது இப்போதாவது தெரிந்தது என்று, நீ பிறந்த பயனை தொடர்க உன்னை எல்லா நன்மைகளும் தொடரும் என்றும். மனமார வாழ்த்துகிறேன்

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........