என் தெய்வம் நேரில் வந்தாலே
இன்பங்கள் பொங்கும் தன்னாலே
விதி போகும் பாதை ஓரம்
விடை தேடும் கானல் நீர் நான்
உனக்காகப் பாடும் பாடல்
உயிர் வாழும் வாழும் இங்கே
எனக்கே எனக்காய் பிறந்தவள் உன்னை
எங்கே காண்பேனோ ?
மலர் போன்ற பாதம் அம்மா அதை
மறவாது என் நெஞ்சம் அம்மா
நிலையாய் இங்கே நீ வந்தாலே
நின்மதி பெறுவேனே!
திருக்கோவில் சிற்பங்கூட
சிரிக்காமல் சிரிக்கும் போது
உனக்காக ஏங்கும் உள்ளம்
ஏன் ஊமையாகாது!
உருவத்தால் குமரி என்னை
உள்ளத்தால் குழந்தை என்பாய்- உன்றன்
மடியைத் தேடி அலையும் போது
மறைந்தே சென்றாய் ஏன்?
விடியாத இரவுக்குள்
விடை தேடும் பட்டாம் பூச்சி
முடியாது முடியாதென்று
முனங்கும் ஓசை கேட்கலியா?
( என் தெய்வம் நேரில் )
திருக்கோவில் சிற்பங்கூட
ReplyDeleteசிரிக்காமல் சிரிக்கும் போது
உனக்காக ஏங்கும் உள்ளம்
ஏன் ஊமையாகாது ............
அருமை சகோ. நன்றி
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரரே !
ReplyDeleteஅம்மான்னா அம்மாதான் பாக்கி எல்லாம் சும்மாதான்.....அருமையான அம்மா கவிதை....!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் !
Deleteஅருமையான பாடல் சகோ.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா .வருகைக்கும் பாராட்டிற்கும் .
Deleteசிறப்பிற்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteநேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .அவசியம்
Deleteதங்களினது இவ்வாக்கத்தினைப் படிப்பேன் .மீண்டும் அழைப்பிற்கோர்
நன்றி சகோதரா .
அருமையான பாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteகடைசி படம் ரொம்பவே பிடித்தது....
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா!
Deleteஅம்மாவை எண்ணி ஆயிரம் பாடினாலும் சும்மாவே இருக்காது நெஞ்சம் சொல்லியும் ஆறாது.பாடல் அருமை
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் பாராட்டிற்கும் .
Delete