7/12/2013

பொய்யாய் போலியாய் வாழும் மனிதர்கள் முன்னே


பொய்யாய் போலியாய்
வாழும் மனிதர்கள் முன்னே
பொறுமை இழந்து போகுதே
ஐயா உனக்கிது புரியாதா ?...!!!!
நல் ஆறுதல் நீயென்று தெரியாதா ....

வண்ணமயில் ஏறி
வந்து விடு நீயும்
எங்களுயிர்  வாடும்
கந்தனுனைத் தேடும்

மண் மணக்குதே
மண் மணக்குதே
கந்தன் உன்றன் பாதம்
மண்ணில் பதிக்கயிலே !....

எண்ணமெல்லாம் இருப்பது
கந்தன் கவசம் இதை
ஏழ்பிறப்பும் மறவாமல்
நெஞ்சில் பதிப்போம் ......

துன்பம் வரும் வேளையில்
சேர்ந்து துதிப்போம் உன்றன்
தூய திருவடி அதனால்
நன்மை அடைவோம்.....

ஔவைக்கருள் புரிந்தவனே என்றும்
ஆனை முகத்தானுக்கு இளையவனே
வள்ளி தெய்வானை மணவாளனே நாம்
வேண்டும் வரம் தந்தருள வந்தருள்வாய் நீ....

                                                   (பொய்யாய் போலியாய் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. அழகன் முருகன் மீதொரு அழகிய பாமாலை. வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  2. எப்போதும் வணங்குங்கள் எல்லாம் வல்ல முருகனையே
    தமிழ்க் குமரனையே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete

  3. வணக்கம்!

    தமிழ்மணம் 1

    முருகன் திருப்புகழை முற்றும் உணா்ந்தால்
    உருகும் பனிபோல் உயிர்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      உண்மைதான் உருகாதார் மனமும் உருகிவிடும் .மிக்க நன்றி ஐயா
      வருகைக்கும் கருத்திற்கும் .

      Delete
  4. முருகனுக்கு ஓர் அழகிய பூமாலை, இப் பாமாலை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  5. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பொய்யாய் போலியாய்
    வாழும் மனிதர்கள் முன்னே
    பொறுமை இழந்து போகுதே

    பொறுப்பான பாடலுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  7. வேண்டும் வரம் தந்தருள வந்தருள்வாய் நீ...
    >>
    அப்படி முருகன் நேரில் வந்தா எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க அக்கா!

    ReplyDelete
    Replies
    1. எனக்கேவா ?...:)))) சரி சரி கிடைச்சா வந்து வாங்கிக்கோங்க தங்கச்சி :)

      Delete
  8. முருகனைத் துதித்து ஒரு பாடல்....

    நன்றாக இருந்தது சகோ. வாழ்த்துகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........