8/16/2012

கொன்றால் தீருமோ உயர் சாதி வெறி!....



கொடியிடை நெளிந்தாட
ஒரு நொடிதனில் மனம் அலை பாய
இது என்ன மோகம்!............
இரு விழிகளின் தாபம்!!!.....

அவளில்லையேல் இங்கு நான் இல்லை
நான் இல்லையேல் அங்கு அவள் இல்லை என
இரு மனங்களும் சதிராட அந்த
இறைவனும் படைத்தானே!.............

இது என்ன இறைவனின்  தவறா!...
இல்லை இயற்கையின் தவறா!...
உலகமே மயங்குது விடை தெரியாமல் இதில்
உனக்கென்ன கோவம் ஏதும் அறியாமல்!...

தலைகளைக் கொய்திடும்  மனிதனே
உன் தவறினை ஒரு கணம் நினையாயோ!!....
பிற உயிர்களை வதைத்திட நினைப்பவனே
அதன் அருமையும் பெருமையும் அறிவாயோ!...

இன வெறி மத வெறி கொண்டலையும்
உனக்கிங்கு அன்பு கிடையாது
விழிகளில் ஓடும் நீராலும் உன் மனம் அது
இளகிடும் என்பதும் பெரும் தவறாகும் !!!.....

உனக்கென வந்து பிறந்தாளே
உன் உதிரத்தில் உடலை  வளர்த்தாளே
எதற்கென நீயும் நினைத்தாயோ
இன்னலைத் தந்து உயிர் பறிப்பவனே!....

இரு மனங்களை மனங்கள் ஆதரித்தால்
இயற்கையும் அதற்க்கு வழி விடுமே
பிணம் தின்னும் ஆசை உனக்கெதற்கு
மனிதன் பிறப்பது என்பதே இங்கு வாழ்வதற்கு.

சாதிகள் இரண்டேதான் இங்கிருக்கு
உன் சங்கடம் எல்லாம் அயலவரே
யார் எவர் என்ன நினைப்பாரோ என
ஜாதகம்  பார்த்து நீ இனியும் அழியாதே!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. ஒவ்வொரு வரியும் சாட்டையடி... நன்றி... (TM 1)

    ReplyDelete
  2. கவித நச்சுனு இருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கவிதையை வாளின் முனையைக்கொண்டு எழுதினீர்களோ..சபாஷ்..

    ReplyDelete
  4. அனல் தெறிக்கும் வரிகள் .. நெஞ்சை சுட்டது ...

    ReplyDelete
  5. கனல் தெறிக்கும் வரிகள்! சிறப்பான விழிப்புணர்வு கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  6. வணக்கம் சொந்தமே!செமயா சொல்லியிருக்கிறீங்க.வாழ்த்துக்கள்.சந்திப்போம்.

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete
  7. இன்னும் உரத்துச் சொல்லுங்கள் அம்பாள்.யார் காதிலாவது விழுதா பார்க்கலாம் !

    ReplyDelete
  8. எல்லா வரியும் சாட்டையடிகள் தான்.அருமையான வரிகள்.
    // உனக்கென வந்து பிறந்தாளே
    உன் உதிரத்தில் உடலை வளர்த்தாளே
    எதற்கென நீயும் நினைத்தாயோ
    இன்னலைத் தந்து உயிர் பறிப்பவனே!.... // தொடருங்கள்.

    என்னுடைய தளத்தில் தன்னம்பிக்கை

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........