செந்தாமரை தண்ணீரிலே
வந்தாடுதே பெண்போலவே!
இழந் தென்றல் காற்றே நீ
இன்னிசை பாடி வா!
ரவி வர்மன் ஓவியம் இவள்
இங்கு அசைந்தாடும் காவியம்
நிலவோடு உரையாடும் எனதன்பு
அது என்றும் உனக்காகவே!
மணம் வீசும் புது மலரே
வெண் மதி போற்றும் பேரழகே
நீ உருவான காலம் இயற்க்கை
அழகுக்கு அழகிங்கு வந்ததோ!
மலராதே உயிர்கள் எங்கும் !
தொடராக தொடரும் தாய்மை
நல் உணர்வுக்கு ஏது எல்லை !
கலைக் கோவில் சிற்பம் நீயே
கலங்காதே பெண்ணே என்றும்
விலை பேச ஏங்கும் கூட்டம்
நிலைக்காதே இந்த மண்ணில்!
பிறை போல தேய்ந்து வளரும்
தொடரான துன்பம் என்ன !
விழி நீரில் கோலம் போட்டும்
விடியாத பெண்ணின் வாழ்க்கை!
வணக்கம் சகோ!
ReplyDeleteபெண்களின் வாழ்க்கை / துன்பங்கள் / சவால்கள் பற்ரி அழகாக விளக்குகிறது, இந்த அழகிய கவிதை! நன்றி.
மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய
ReplyDeleteநற் கருத்திற்கும் .
புரட்சி கவிதை அழகாக இருக்கிறது
ReplyDeleteபெண்ணை நுகர்பொருளாய் பார்க்கும் சில ஆண்களின் மனநிலையும், தங்களைத் தாங்களே கவர்ச்சிப்பதுமைகளாய்க் காட்டிக்கொள்ளும் சில பெண்களின் மனோபாவமும் மாறிவிட்டாலே பாதிக்கொடுமைகள் பஞ்சாய்ப் பறந்துவிடும். அழகான கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டுகள் அம்பாளடியாள்.
ReplyDeleteமாறும் காலம் வந்து விட்டது... மாறியே தீரும்... தீர்வு : கல்வி....
ReplyDelete(இரண்டு மூன்று நாளாக... இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட் வேலை செய்யவில்லை... இவைகள் உங்கள் தளத்தில் இருப்பதை, சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... (Edit and Remove indli Vote button in html and Remove Indli Widget - Caution : Before editing backup HTML) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)
மிகவும் நல்ல கவிதை! கடைசி நான்கு வரிகள் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
மலரே நீ இல்லை என்றால்
ReplyDeleteமலராதே உயிர்கள் எங்கும் !..
தொடராக தொடரும் தாய்மை
நல் உணர்வுக்கு ஏது எல்லை !..
அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..
பெண்களை உணர்ந்த கவிதை உங்கள் உணர்வோடு எங்கலையும் தாக்குகிறது தோழி.காலம் மாறினாலும் பெண்களை அடக்குவதும், மிரட்டுவதும் மாறுவதில்லை நம் சமூகத்தில் !
ReplyDelete