இறந்தும் இறவா நல் வாழ்வுபெற
இறைவன் கொடுத்த வரம் இதனை
இரங்கி நீயும் கொடுத்துப் பார்
இன்னல் நிறைந்த தருணம் அதில்
உயிர்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியால்
உள்ளம் மகிழும் தன்னாலே அதை
உகர்ந்து நீயும் ஏற்றுக்கொண்டால்
உனக்கும் மனதில் மாற்றம் வரும்!...
பரந்த உலகில் எம் கனவுகளை
பலிக்கச் செய்யும் நோக்குடனே
பகலும் இரவும் பாடுபட்டு நாம்
பட்ட துன்பம் மறந்திடவே
சின்னச் சின்ன தானங்களை
சிறப்பாய் நீயும் செய்து வந்தால்
சிறந்த மனிதனாய் மட்டும் அல்ல
சிந்தை குளிர்வாய் ஓர் நாளில்!!!...
மரணம் என்பது இயல்பாகும்
மண்ணில் பிறந்த உயிர்களுக்கு
மனதில் ஆசையை தூண்டிவிக்கும் கண்
மறைந்தும் மறையா வாழ்வு பெற
இறக்கும் முன்னே ஓர் சாசனம்
இன்றே எழுது உன் மனம்போலே
இருக்கும் இதயம் அதைத் தந்தும்
இறைவன் ஆவாய் எந்நாளும்!!!.....
எரியப் போகும் உடல் இதனில்
எந்த தானம் செய்தோமோ அதை
எட்ட இந்த உலகத்திலே
எதுவும் இல்லை அதை நாம் அறிவோம்!...
பகட்டு வாழ்க்கை வாழ்ந்து இங்கே
பட்டுப் போகும் முன்னாலே
பலரின் உயிரை வாழ வைத்த
பண்பால் நாமும் உயர்வோமே!!....
வறட்டுக் கெளரவம் தோல்விகளால்
வலிமைகொண்டு உயிர் துறக்கும்
வந்த பயனை அறியாத நாமும் இங்கே
வலி மறந்து நல் வாழ்வளிப்போம்!....
தவிக்கும் உயிர்கள் நன்மை கருதி
தரணி எங்கும் பரந்து வாழும்
தன்னலம் அற்ற உறவுகளே
தயவு செய்து தோள்கொடுங்கள்!....
உயிர்க்கு உயிர் செய்யும் தானம்
உயிருள்ளவரை மறவாதே இதை
உணர்ந்த நாமும் முடிந்தவரை பிறர்
உணரச் செய்வதும் எம் கடன்தானே!.....
கவிதையும் அதன் மோனை வரிசையும் என்னைக் கவர்ந்தது.
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .
ReplyDeleteஉயிர்க்கு உயிர் செய்யும் தானம்
ReplyDeleteஉயிருள்ளவரை மறவாதே இதை
உணர்ந்த நாமும் முடிந்தவரை பிறர்
உணரச் செய்வதும் எம் கடன்தான
அருமையான கருத்து
அழகான வடிவம்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
கருத்துள்ள வரிகள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteமிகவும் பிடித்த வரிகள் :
/// எரியப் போகும் உடல் இதனில்
எந்த தானம் செய்தோமோ அதை
எட்ட இந்த உலகத்திலே
எதுவும் இல்லை அதை நாம் அறிவோம்!... ///
அருமையாக முடித்துள்ளது சிறப்பு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)
மிகவும் அற்புதமான சொற்கள், கருத்துகள், வடிவமைப்புடன்
ReplyDeleteவடிக்கப்பட்ட தங்களின் கவிதை எந்நாளும் பசுமையோடு
தழைத்திருக்கும். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
அருமையான கவிதைக்கு வாழ்த்துகள். எல்லா வரிகளுமே நல்லா இருக்கு குறிப்பா எதைப்பாராட்டன்னு தெரியல்லே
ReplyDeleteஉயிர்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியால்
ReplyDeleteஉள்ளம் மகிழும் தன்னாலே - தழைத்து அழைக்கும் உறவுகளின் சிறப்பான கவிதை பாராட்டுக்கள்..
//
ReplyDeleteபகட்டு வாழ்க்கை வாழ்ந்து இங்கே
பட்டுப் போகும் முன்னாலே
பலரின் உயிரை வாழ வைத்த
பண்பால் நாமும் உயர்வோமே!!..
//
அருமையான வரிகள் சகோ!
சிறப்பான கவிதை! தானம் செய்ய தூண்டும் கவிதை! நன்றி
ReplyDeleteஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
நான் இரத்தம் 3 மாததிற்கொருமுறை கொடுக்கிறேன் தோழி.நல்லதொரு கவிதை !
ReplyDelete