8/09/2012

வாழ்க பல்லாண்டு!.....

உடல் கூனிப் போனாலும்
உழைப்பேதான் தெய்வமட
என இங்கு வாழ்வதற்கு
என்ன புண்ணியம் செய்தனரோ!!!....

முதுமையிலும் இளமை பொங்கும்
முக மலர்ச்சி அதை என்ன சொல்ல!....
பழங்கால வாழ்வு முறைதான் இதோ
பார் பெண்ணே கண் குளிர!!!...........

பச்சைக் காய் கறிவகைகளும்
பாலோடு நிறை  கனிகளும்
முட்டைக்குள் நல்லெண்ணையும்
முடிந்தவரை தானியங்களும்

உணவுண்ண ஏற்ற நேரமும்
ஒழுங்கான உடற் பயிற்சியும்
மனம் விட்டு பேசும் தன்மையும்
மகத்தான வாழ்க்கைத் தத்துவத்தை

தினம்தோறும் கடைப்பிடித்தார்
நம் முன்னோர்கள் அவர்களுக்கு
நோயில்லை பிணியும் இல்லை
மனம் நோகின்ற நிலையும் இல்லை!...

வாழ்கின்ற காலம் எல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்தார் அன்று!...
எம்  காலத்தின் நியதி பாரு!!!.....
மிகு கஸ்ரம்தான் வாழ்வில் இன்று!...

சோறாக்க விறகும் இல்லை
சோம்பலுக்கும் எல்லை இல்லை
குளிரூட்டிய பெட்டிக்குள்தான்
கூட்டிக் கழித்து எம் வாழ்வின் எல்லை!..

அளந்து அளந்து பார்த்தே தினமும்
அமைதி குலைது போச்சுதிங்கே
வளர்த்துவரும் தொப்பை இதனால்
வலுவிழந்த மனிதர் ஆனோம்!.........

சுதந்திரமாய் உணவு உண்ணும்
சூழ்நிலையும் எமக்கு இல்லை
இதுவே நிரந்தரம் என நினைத்தால்
அதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை!..

பரந்த உலகம் சுருங்கியதுவேன்
இறைவன் படைத்த இயற்க்கையை
மனிதன் அழித்ததுவும் ஏன்!!!........
சிறந்த பதிலைத் தந்திடுவீர் என்றும் 
மரங்கள் இன்றி நல் வளங்கள் ஏது?....
மறைந்து போகும் உயிர் திரும்பாது 
சிறந்த இயற்க்கை வளத்தால்தானே 
சிந்தை மகிழும் எந்நாளும்!........... 

இருந்த இடத்தில் இருந்துகொண்டே 
நாம் இரசிக்கும் இவ் உலகம் நிலைக்காது 
பரந்த நோக்கம் எமக்கிருந்தால்
நற்  பயிர் செழிக்க உதவிடுவோம்

வளைந்து குனிந்து வேலை செய்தால்
எமை வாட்டும் நோய்கள் நெருங்காது  
இரந்து கேட்க்கும் பிச்சையை விடவும் 
எந்தத் தொழிலும் சிறப்பாகும்!............

அடுத்து வரும் எம் சந்ததிக்கே 
எடுத்துக்காட்டு எம் வாழ்க்கையடா 
இதை நினைத்துப்பார்த்து நீயும்கூட
மன நிறைவோடு பயிரிடவும்  பழகு!!!....     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. //முதுமையிலும் இளமை பொங்கும்
    முக மலர்ச்சி அதை என்ன சொல்ல!....
    பழங்கால வாழ்வு முறைதான் இதோ
    பார் பெண்ணே கண் குளிர!!!...........//

    மிகவும் உண்மையான வரிகள். அக்கால வாழ்க்கை முறையின் காரணமோ என்னவோ, அவர்களுக்கு உடலோடு மனமும் இளமையாய் இருந்தது. இப்போதெல்லாம் பாட்டிகளுக்கு முன்பே அம்மாக்களுக்கு பல்விழுந்துவிடும் கொடுமையை என்ன சொல்வது? நித்தமும் புதுப்புது நோய்களோடு உடலளவிலும் மனதளவிலும் போராட்டம். நாளை நம் தலைமுறை இன்னும் மோசமாகலாம். வருமுன் காத்து, இயற்கை உணவு மூலம் உடலையும், இனிய வாழ்க்கைமுறை மூலம் மனதையும் கட்டுக்குள் வைத்துக்கொள்வது நம் கடமை. மிகவும் அழகான கவியால் எடுத்துரைத்த விதமும், கவிதைக்கேற்றப் படங்களும் மிக அருமை. பாராட்டுகள் அம்பாளடியாள்.

    ReplyDelete
  2. வளைந்து குனிந்து வேலை செய்தால்
    எமை வாட்டும் நோய்கள் நெருங்காது
    இரந்து கேட்க்கும் பிச்சையை விடவும்
    எந்தத் தொழிலும் சிறப்பாகும்!............

    ஆழமான கருத்து
    அருமையான சொற்பிரயோகம்
    படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்கின்ற காலம் எல்லாம்
    வாழ்வாங்கு வாழ்ந்தார் அன்று!...

    வாழ்க பல்லாண்டு!.....

    ReplyDelete
  4. இரந்து கேட்கும் பிச்சையை விடவும்
    எந்தத் தொழிலும் சிறப்பாகும்!........

    சரியாகச் சொன்னீர்கள்..நிறைய பேருக்கு இது தெரிவதில்லை..

    ReplyDelete
  5. மிக அருமையான கவிவரிகள் அக்கா

    ReplyDelete
  6. அடுத்து வரும் எம் சந்ததிக்கே
    எடுத்துக்காட்டு எம் வாழ்க்கையடா
    இதை நினைத்துப்பார்த்து நீயும்கூட
    மன நிறைவோடு பயிரிடவும் பழகு!!!...

    எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள். கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. கருத்துள்ள கவிதை...

    வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)

    ReplyDelete
  8. சிறப்பான விழிப்புணர்வு கவிதை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........